fbpx

அகிலாண்டேஸ்வரி வரலாறு

பஞ்ச பூத தலங்களில் நீருக்கு உரிய தலமாக விளங்கும் ஜம்புகேஸ்வரர் தலம், சக்தி பீடங்களில் ஞான சக்தி பீடமாகும். தேவாரப்பாடல்களில் இது, 60 வது தேவாரத் தலம் ஆகும். இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அகிலத்தைக் காப்பவளாக அம்பாள் விளங்குவதால் அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள்.
திருவானைக்கா என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் இருக்கும் ஜம்புலிங்கம், அன்னை அகிலாண்டேஸ்வரியால் செய்யப்பட்டது. எம்பெருமானின் கட்டளைக்கிணங்க மானிடப்பெண்ணாக பூலோகத்தில் அவதரித்த பார்வதி தேவி, காவிரி ஆற்றில் நீரில் லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களால் நீர் லிங்கமாக மாறியது. அதை வழிபட்டு பேரானந்தம் அடைந்தாள் அம்பிகை.

சக்தி பீடம் – 8 : அகிலாண்டேஸ்வரி

தல சிறப்பு:
மூலவர் ஐந்தாம் உட்பிரகாரத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார். இவர் தரைமட்டமாக இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவுவற்றாமல் இருக்கிறது. இவரை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாகத்தான் தரிசிக்க முடியும்.

அம்பாள் நான்காவது பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். அகிலாண்டேஸ்வரி அம்மனின் காதில் அணிந்திருக்கும் தடாகங்கள் பக்தர்களின் பார்வைக்கு நன்றாக தெரியும் அளவுக்கு பெரிதாக இருக்கும். முன்பு அம்பாள் பார்வைக்கு உக்கிரமாக கொடூரமாக இருந்ததாகவும், பக்தர்கள் அவளைக் கண்டு அச்சம் கொண்டதால் அப்போது அம்பாளை தரிசிக்க வந்த ஆதி சங்கர,ர் சிவசக்ரம் என்னும் இந்த காதணிகளை பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்ததாகவும் வரலாறு கூறுகிறது.

அதன் பிறகே அம்பாளின் முன்புறம் விநாயரையும், அம்பாளுக்கு பின்பு முருகனையும் பிரதிஷ்டை செய்து அன்னையின் உக்கிரத்தை தணித்ததாகவும் கூறுகிறார்கள். அரிய சன்னிதிகளாக சரஸ்வதி தேவி வீணையில்லாமலும், சந்திரன் தேவியருடனும், பஞ்சமுக விநாயகர், ஜேஷ்டா தேவியுடன் சனிபகவான், முருகப்பெருமான் சன்னிதிகள் இருக்கின்றன.

அந்தணர் ஒருவர் வாக்சித்தி பெற அம்பாளை தரிசித்து வந்தார். ஒருநாள் சாதாரண மானிடப் பெண்ணாக வேடமுற்று தாம்புலம் தரித்து வந்த அம்மன், அந்த அந்தணரை அணுகி உங்கள் வாயில் உமிழவா என்று கேட்டாள். கோப முற்ற அந்தணர் அம்பாளை விரட்டி அடித்தார். ஆலயத்தை தூய்மை செய்யும் பணியில் இருந்த ஒருவர் எனக்கு ஆலயத்தின் தூய்மை தான் முக்கியம். அதனால் என் வாயில் உமிழுங்கள் என்றார் . அதன்படி அம்மன் அவர் வாயில் தாம்புலம் உமிழ்ந்தாள். அவர் தான் காளமேக கவிராயர்.

அகிலாண்டேஸ்வரி ஜம்புலிங்கேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதிகம். பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னையைப் போல் வேடமிட்டு கிரீ டம் அணிந்தபடி கையில் தீர்த்தத்துடன் மேள வாத்தியங்கள் முழங்க, சிவ பெருமானுக்கு பூஜை செய்தபடி அம்பாள் சன்னிதிக்கு திரும்புவார்.

அம்பாளே இப்பூஜையைச் செய்வதாக நினைப்பதால் அர்ச்சகரையே அம்பாளாக பாவித்து வணங்குகிறார்கள். சிவன் குருவாகவும், அம்பாள் மாணவியாக இருந்து கற்றரிந்த தலம் இது என்பதால் மாணாக்கர்கள் கல்வியில் மேன்மை வர இத்தலத்துக்கு வந்து வேண்டிகொள்கிறார்கள்.

ஆடிமாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவ மிருந்ததாக ஐதிகம். அதனால் ஆடிவெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்பாள் காலையில் லஷ்மியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலை யில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். ஆடிவெள்ளியில் அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் அம்பாளை தரிசிக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram