ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய குகை – ஈரமண் விபூதியாகும் அதிசய வேலப்பர் ஆலயம் தேனி மாவட்டம் கம்பம் அருகில் 10 கி.மி. தொலைவில் உள்ளது சுருளி வேலப்பர் ஆலயம் . இது மேற்கு தொடற்சி மலையில் அமைந்துள்ள சுருளிமலையில் அமைந்துள்ளது . இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது . இந்த சுருளி மலை பகுதி பல தேவர்களும் ரிஷிகளும் சித்தர்களும் தவம் புரிந்த இடமாகும் . மேலும் பழனி முருகன் நவபாசான சிலையை உருவாக்கிய போகர் தனது இறுதி மூலிகையை இங்கே எடுத்துள்ளார் சிவனின் பிறை இவையெல்லாம் கனவில் வந்தால் நிகழும் அதிசயங்கள்.! அவரது குருவான காலங்கி நாதரும் இங்கு தவமியற்றியுள்ளார் . சுமார் இருநூறிக்கும் மேற்பட்ட குகைகள் உள்ள இந்த பகுதியில் பல சித்தர்கள் இன்றும் வாழ்வதாக நம்பப்படுகிறது. அது போன்று இங்குள்ள விபூதி குகையில் முருகன் எழுந்தருளியுள்ளார் . இந்த குகையின் அதிசயமே இங்குள்ள ஈரமண் குறிப்பிட்ட காலம் கழித்து விபூதியாக மாறிவிடுகிறது .
இங்குள்ள மாமரத்தில் கீழிருந்து பொங்கும் நீரானது தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு மரப் பகுதி மீது விழுந்து அதை கெட்டியான பாறையாக மாற்றியிருக்கிறது . சுருளி யாண்டவர் சன்னிதியின் மேற்பாகத்தில் மரத்தின்ன் வேர்கள் பரவி இருக்கும் இதை பிடித்து மேலே சென் றால் அதிசயமான பல குகைகளை காணலாம் புற்றுவடிவில் தோன்றிய புண்ணைநல்லூர் அம்மனுக்கு முகம் வேர்க்கும் அதிசயம் சுருளி ஆண்டவர் சன்னிதியின் கிழக்கு பாகத்தில் அமைந்திருக்கும் இமய கிரி சித்தர் குகை மிக புகழ் பெற்றது இங்கு தான் இமய மலையில் வாழ்ந்த இமயகிரி சித்தர் கடும் தவம் இயற்றி சிவ தரிசனம் பெற்றார். இங்கு அவர் பிரதிஷ்டை செய்த சிவ லிங்கமும் உள்ளது . இந்த குகையில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே படுத்து கொண்டு செல்ல முடியும் உள்ளே செல்ல செல்ல பெரிய விசாலமான அறை போன்ற காட்சி தரும் கடவுளுக்கு அர்பணிக்கப்பட்ட தீபாராதணையை தலையில் ஒற்றுவது ஏன்? ஆச்சர்ய தகவல். இங்கு ஒரு முறை சென்றால் ஒரு பிரவி குறையும் என்பது ஐதீகம் . இது போல் இங்கு கைலாச நாதர் குகை கண்ணன் குகை கன்னிமார் குகை என்று ஏராளமான குகைகள் உள்ளன . இங்கு தைபூச திருநாளில் பால் குடம் ஏந்தி வழிபட்டால் நினைத்த காரியம் நிறை வேறுகிறது . அமாவாசை பெளர்ணமி நாட்களில் அன்னதானம் வழங்கி வழிபடுபவர்களுக்கு முருகனின் பரிபூரண அருள் கிடைப்பதோடு பித்ரு தோஷங்களும் விலகுகின்றன. . இது வனப்பகுதியில் உள்ள ஆலயம் என்பதால் மதியம் 2 மணிக்கே நடை சாற்றப் படுகிறது . விஷேச நாட்களில் மட்டும் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் .