• உலகிலேயே லோகோ என்று முதலில் உருவாக்கப்பட்ட
ஆலயம் #உத்தர #கோசமங்கை ஆலயம்.
• நவக்கிரகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவான கோயிலும் இதுதான்.
• நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட கோயிலும் இதுதான்.
• ஆயிரம் சிவனடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்ற ஆலயமும் இதுவேதான்.
• மூவாயிரம் ஆண்டுகளாக பூத்துக்குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயமும் இதுதான்.
• தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவாவதற்கு காரணமான இருந்த இடமும் இதுதான்.
• உலகிலேயே விலைமதிப்பற்ற ஒரு மரகத கல்லில் செதுக்கப்பட் முதல் மரகத நடராஜர் சிலை நிறுவப்பட்ட ஆலயமும் இதுதான். ஆருத்ரா தரிசணம் அன்று மட்டுமே சந்தனம் பூசாத மரகத நடராஜரை தரிசிக்க முடியும் என்கிற அபூர்வ நடராஜர் இருக்கும் தளமும் இதுதான்
இப்படி பல பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாக இருக்கும் ஆலயம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி திருக்கோயில்.
இக்கோயிலைப் பற்றிய சில சிறப்பு தகவல்கள் உங்களுக்காக :
• உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சிலை “சுயம்பு லிங்கம்” மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்படுகிறது.
• இக்கோயில் மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
• உத்தரகோசமங்கை என்னும் ஊரையே சிவபெருமானின் சொந்த ஊர் என்றும் அழைக்கப்படுகிறது.
• இக்கோயிலில் உமாமகேஸ்வரர் சன்னதி முன்பு தம்பதியர் இணைந்து வழிபாடு செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.
• இந்நகரம் சிறிதுகாலம் பாண்டிய மன்னரின் காலத்தில் அவர்களது தலைநகரமாக விளங்கியது.
• ஆரம்ப காலகட்டத்தில் சிவபுரம், தெட்சிண கயிலாயம் , சதுர்வேதி, மங்கலம் , இலந்திகைப்பள்ளி, பத்திரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்கிரபுரம் , மங்களபுரி ஆதிசிதம்பரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டதாக வரலாற்று புத்தகங்கள் குறிப்பிட்டுள்ளனர்.
• இக்கோயில் மங்களநாதர் மங்களநாயகி இதுவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் அதற்கான முழுமையான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
• இங்குள்ள மூலவருக்கு மங்களநாதர் , மங்களேஸ்வரர் , காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவர் என்னும் பெயர்களும் உள்ளன.
• இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை , சுந்தரநாயகி போன்ற பல பெயர்களும் உள்ளன.
• இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. மண்டோதரி பிறந்த இடமும் இந்த உத்தரகோசமங்கை தான் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்த குறிப்பின் மூலம் இத்தலம் இராமாயணத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட ஆலயம் என்று வரலாற்று ஆசிரியர்களால் ஆராயப்படுகிறது.
• இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம்.
• இக்கோயிலில் ஆதிகாலத்து வராகிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
• பிரதோஷ நாளன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகிறார்கள். காரணம் இக்கோவில் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை கட்டி வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம் . திருவண்ணாமலையில் நடந்த திருவிளையாடலுக்கு பின்பே தாழம்பூவிற்கு பூஜைக்கு உகந்த மலரல்ல என்ற சாபம் கிட்டியது. ஆனால் இந்த சிவாலயத்தில் மட்டுமே தாழம்பூ பூஜிக்கப்படுகிறது ஆதலால் இது திருவண்ணாமலை சரித்திரத்திற்கு முன்பே உருவான கோவில் என்பது ருதுவாகிறது.
• இத்தலத்தில் உள்ள கோயில் குளத்தில் உள்ள மீன்கள் கடல் வாழ் மீன்களாகும்.
• சிவபெருமானால் பரதநாட்டியக் கலையை முதல்முதலாக உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இடம் இத்தலம் ஆகும்.
ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையேனும் அவசியம் தரிசிக்க வேண்டிய புண்ணிய தளம்.
அமைவிடம்
மதுரை – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே, வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் சென்று, இவ்வூரை அடையலாம்.