இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சுதர்சனரை (சக்கரத்தாழ்வார்) திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோயிலில் தரிசிக்கலாம்.
தல வரலாறு : —
குருக்ஷத்திரப்போரில் வெற்றி பெற்ற அர்ஜுனன், வீரர்களைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக, தாமிரபரணியில் நீராடி பாவம் போக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் இத்தலம் அருகே வந்தபோது, ஒரு மருதமரத்தின் அடியில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது, மகாவிஷ்ணு அவனது கனவில் தோன்றி, “”தான் மருதமரத்தின் அருகில் ஓரிடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டி, அங்கு வந்து தன்னை வணங்கினால், பாவம் முழுமையாக நீங்கி விமோசனம் கிடைக்கும்” என்றார். விழித்தெழுந்த அர்ஜுனன், மகாவிஷ்ணு கூறிய இடத்திற்கு சென்றபோது, பெருமாள் தாயார்களுடன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டான். பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார்.
ஸ்ரீ சுதர்சன ஹோமத்தில் ஸ்ரீ சுதர்சன மஹா மந்திரம்: —
ஓம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபீ ஜனவல்லபாய , பராய பரம புருஷாய, பரமாத்மனே பரகர்ம , மந்த்ர , யந்த்ர தந்த்ர ஔஷத அஸ்த்ர சஸ்த்ராணி ஸம்ஹர ஸமஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் நமோ பகவதே மஹா ஸூதர்சனாய தீப்த்ரே ஜ்வாலாபரிதாய ஸர்வ திக் க்ஷோபண கராய ஹூம் பட் பரப்ரஹ்மணே பரஞ்ஜோதிஷே ஸ்வாஹா //… !!!
சிம்ம வாகனத்தில் சுதர்சனர் : —
இக்கோயிலில் உள்ள சுதர்சனர் தனிசன்னதியில் 16 கைகளுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சுவாமியையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கிறது. நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் இருப்பது மற்ற இடங்களில் இல்லாத அதிசயம்.
இங்கு சுதர்சன ஹோமம் செய்து வழிபட்டால், பயம் நீங்கி, எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ சுதர்சன காயத்ரி: —
ஸூதர்சனாய வித்மஹே
ஜ்வாலா சக்ராய தீமஹி
தன்ன சக்ர ப்ரசோதயாத் … !!!