fbpx

ஐயப்பனின் தவக்கோல தரிசனம்

சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

🌟 கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் ஆகியவை ஒரே சீராக இருக்கும். ஐயப்பன் நமக்காக சபரிமலையில் தவம் இருக்கிறார்.

🌟தனது மூன்று விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலை தொட்டு கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். சித் என்றால் அறிவு எனப்பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி ‘சின்” என மாறியது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான், இந்த ‘சின்” முத்திரையாகும்.

🌟 ‘சின்” முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்குளிர தரிசிப்பது என்பது, பிறவி பயனை அடைந்த சந்தோஷத்தை தருகிறது.

🌟 ஒவ்வொரு மாதமும் நடை மூடப்படும்போது, ஹரிவராசனம் பாடிவிட்டு, கிலோ கணக்கில் பசுமையான திருநீற்றை ஐயப்பன் மேல் சாற்றுவார்கள். அத்துடன், ஐயப்பனின் ‘சின்” முத்திரையின் மேல் ஒரு ருத்திராட்ச மாலையை போடுவார்கள். இதற்கு தவக்கோலம் என்று பெயர்.

🌟 அப்போது, ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது, மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்கும். இந்த அதிசயம், தவறாமல் அரங்கேறுகிறது. கோவில் கதவு திறந்து, உலகத்தின் பார்வை அந்தக் கோவிலுக்குள் நுழைந்ததும், ஐயப்பனின் தவக்கோலம் கலைந்து விடுகிறது.

🌟 அடுத்த நிமிடமே, அந்த விளக்கும் அணைந்து விடுகிறது. ‘சின்” முத்திரையின் மேல் போடப்பட்ட ருத்திராட்ச மாலையும் கை மாறி இருக்கும். இந்த அதிசயத்தை காண கண்கோடி வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும்போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :

இதம் ஆஜ்யம், கமமண்டல
கால மகரகால பரஹமசியவ்ர
தேன ஹரிஹர புத்ர தர்ம
சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி
பொருள் :

🌟 ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சவாமிமார்களான நாங்கள் அறிந்தும், அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து, பதினெட்டு படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram