கண் கண்ட தெய்வம் கலியுக வரதனாம் ஏழுமலையானை தரிசிக்க ஏழு மலை கடக்க வேண்டும்.
1) விருஷாபாத்திரி நரசிம்மர் பக்தனான விருஷபன் என்னும் அசுரன் தன் மரணம் எம் பெருமாளால் தான் ஏற்பட வேண்டும் என வரம் பெற்று இருந்தான். பெருமாள் அசுரனை வதம் செய்த போது அவனது வேண்டுதலை ஏற்று திருமலையின் முதல் மலை அவனது பெயரால் விருஷாபாத்திரி எனத் திகழ்கிறது.
2) நீலமலை பெருமாளின் திருமேனி நீலமாகும். எம் பெருமானின் திருமேனி போன்றே இம் மலை அமைந்துள்ளதால் நீலமலை என்று பெயரானது.
3) அஞ்சனாத்திரி கன்னியான இவள் கடுந்தவத்தில் இருந்தபோது இவளறியாமல் இவள் வயிற்றில் வாயுபகவான் சஞ்சரித்த படியால் சிவ அம்சமாய் ஆஞ்சநேயர் ஆக பிறந்து ஶ்ரீராமருக்குத் தொண்டு புரிந்தார். அஞ்சனா தவமிருந்ததால் இம்மலை அஞ்சனாத்திரி என்று அழைக்கப்படுகிறது.
4) சேஷாத்ரி ஆதிசேஷன் மலை வடிவம் கொண்டு எம்பெருமாளை நின்ற கோலத்தில் தாங்கிக் கொண்டு இருப்பதால் இம் மலை சேஷமலை எனப்படுகிறது.
5) கருடாத்ரி எம் பெருமாள் வைகுண்ட த்திலிருந்து கருட வாகனத்தில் ஏறி இம் மலையில் வந்து இறங்கியதால் இது அவரது பெயரால் கருடமலை என்று அழைக்கபாபடுகிறது.
6) நாராயணாத்திரி ஓம் நாராயணாய என வேதங்கள் இம்மலையில் தங்கி பெருமாளை பூஜித்ததால் இதற்கு நாராயணத்திரி என்றும் நாராயணசலம் என்றும் அழைக்கப்படுகிறது.
7) வேங்கட மலை வேம் என்றால் பாவம், கடம் என்றால்போக்குதல். பாவமாகிய கடம் வேம் என வெந்தபடியால் இந்த ஏழாவது மலை திருவேங்கடம் எனப் புகழப்படுகிறது. இந்த ஏழுமலைகளையும் ஏறி வருபவர்க்கு ஏழேழு பிறவிக்கும் பயமில்லை .
ஏழுகொண்டலவாலா அபத்பாந்தா அனாத இரட்சகா கோவிந்தா கோவிந்தா