fbpx

கோவிலுக்கு எந்த நேரத்தில் செல்ல வேண்டும்?

கோவிலில் எந்த இடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டு, எந்தப் பொருளை நம்முடைய வீட்டிற்கு எடுத்து வந்தால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்!

காலை 6 மணிக்கு சூரியன் உதயமாகும் நேரத்தில் கோவிலில் இருப்பது மிகவும் நல்லது. இந்த நேரத்தில், கண்களை மூடி தியானம் செய்தபடி இறைவனை மனதார உணர்ந்து வழிபாடு செய்தால் நம்முடைய வேண்டுதல் உடனே பலிக்கும். காலை 6:00 மணி அளவில் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், காலை 9 மணிக்கு முன்பாகவே கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி காலை நேரத்தில் இறைவனை தரிசனம் செய்ய முடியாதவர்கள், மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அதாவது மாலை 6 மணிக்கு பிறகு கோவிலுக்கு செல்வது மிகவும் நல்லது. இதற்காக மற்ற நேரங்களில் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்லப்பட வில்லை. இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லப்படும் இந்த இரண்டு நேரத்தில் இறை வழிபாடு செய்வது உகந்தது என்று சொல்கிறது சாஸ்திரம்.

நீங்கள் கோவிலுக்கு சென்று மூலவரை வழிபடுவது எந்த அளவிற்கு அவசியமானதோ, எந்த அளவிற்கு மூலவரை வழிபட முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதே அளவிற்கு அந்த கோவிலில் இருக்கும் கொடி மரத்தையும், ஸ்தல விருட்சத்தையும் கட்டாயம் வழிபட்டுவிட்டு தான் வரவேண்டும்.

இரண்டு கைகளை ஏந்தி, கொடிமரத்திடம் வைக்கக்கூடிய வேண்டுதலுக்கு சக்தி அதிகம். கோவிலை பிரதக்ஷணம் வரும்போது கொடிமரத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். தலையை உயர்த்தி, அண்ணாந்து கொடி மரத்தின் உச்சி வரை தரிசனம் பெற வேண்டும். உங்கள் கண்களால் கொடி மரத்தின் உச்சியைத் கட்டாயம் பார்க்க வேண்டும். கோவிலில் இருந்து வெளியில் வருவதற்கு முன்பாக, கொடி மரத்தடியில் நமஸ்காரம் செய்து, இரண்டு நிமிடங்கள் கண்களை மூடி கொடி மரத்திற்கு கீழ் பகுதியில் அமர்ந்து, இறைவனை வேண்டிக் கொண்டு வருவது மிக மிக நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

நீங்கள் செல்லக்கூடிய கோவிலின் ஸ்தலவிருட்சம் இருந்தால் உங்களது வேண்டுதல்களை அந்த ஸ்தல விருட்சத்திடம் மனதார சொல்லுங்கள். கட்டாயம் அந்த வேண்டுதல் ஆனது மரத்தினுடைய காதுகளில் விழும். அந்த கோவிலில் உள்ள மூலஸ்தானத்தில் இறைவனின் அருள் எப்படி நிறைந்து இருக்கின்றதோ, அதே போல்தான் கோவிலில் இருக்கும் பழமை வாய்ந்த மரத்திற்கும், இறைவனின் அருள், பிரபஞ்சத்தின் அருளும் முழுமையாக நிறைந்திருக்கும்.

முடிந்தால் கோயிலிலுள்ளவர்களின் அனுமதியோடு ஸ்தல விருட்சத்தின் கீழே இருக்கும் மண்ணில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வரலாம். அது உங்களுடைய குலதெய்வத்தின் கோவிலின் திருமணமாக இருந்தால் இன்னும் விசேஷம். சக்தி வாய்ந்த பழமை வாய்ந்த கோவில்களில் இருக்கக்கூடிய ஸ்தல விருட்சத்தின் இருந்தும் மண் கிடைத்தால் மிகவும் நல்லது.

அந்த மண்ணை உங்களுடைய வீட்டிற்கு கொண்டுவந்து, ஒரு பச்சை நிற துணியில் வைத்து முடிச்சு போட்டு வைத்துக்கொள்ளுங்கள். காட்டன் துணையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. (ஒரு கைப்பிடி மண் கிடைத்தால் கூட போதும்.)தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து சுத்தபத்தமாக குளித்து முடித்து விட்டு, இந்த மண்ணை உங்களது உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, உங்களுடைய நட்சத்திரத்திற்கான மந்திரத்தை 11 முறை மந்திரத்தை உச்சரித்தால் கூட போதுமானது.

அதன் பின்பாக உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் சொல்லி, வரத்தை கேட்டுப் பாருங்கள். 48 நாட்களுக்குள் தீராத துயரங்களுக்கு கூட, தீவினை அந்த இறைவன் நிச்சயம் காட்டுவார் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்வாறாக உங்களுடைய நட்சத்திரத்தின் மந்திரத்தை சொல்லி உருவேற்றி வைத்திருக்கும் அந்த மண்ணை சிறிதளவு ஒரு துணியில் மூட்டையாக கட்டி, ஒரு ஸ்பூன் மண்ணை எடுத்து மூட்டையாக கட்டி, எப்போதுமே உங்கள் பர்ஸ்ஸிலோ நீங்கள் பயன்படுத்தும் பேகில் வைத்துக் கொண்டால் அது உங்களுக்கு எப்போதுமே பாதுகாப்பாக இருக்கும்.

மீதம் இருக்கும் மண்ணை அப்படியே உங்களுடைய வீட்டில் பத்திரமாக பூஜை அறையில் அலமாரிகளில் வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியும் புகாது. உங்களுடைய வீடு தெய்வ கடாட்சம் நிறைந்த வீடாக எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram