fbpx

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

சர்வம் சிவமயம்

அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர், பெரம்பலூர் மாவட்டம்.ஸ்ரீ ஆதிசங்கரர் வழிபட்ட தலம்.ஸ்ரீ மதுரகாளியம்மன்

ஸ்ரீ பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. வாரத்தின் திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது. காலை 8 மணிக்கு சன்னதி திறக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். பிற்பாடு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம்.

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாய் இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பலரது குலதெய்வம் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனும், காஞ்சி மகா பெரியவாளும் என்றென்றும் உடன் இருந்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ மதுரகாளியம்மன் போற்றி

அகரமென உயிர்க்கு ஆதியே போற்றி

ஆருயிக் குயிராய் அமைந்தாய் போற்றி

இச்சா சக்தியாய் இயைந்தாய் போற்றி
ஈசன் அருளுக் கினியாய் போற்றி

உண்மைப் பொருளாய் ஒளிர்வாய் போற்றி

ஊக்கமும் உணர்வும் உதவுவாய் போற்றி

எழில் தரும் இயற்கை பொருளே போற்றி

ஏழிசை தாம் இசைப்பாய் போற்றி

ஐயம் தவிர்க்கும் அன்னையே போற்றி

ஒன்றென விளக்கும் உணர்வே போற்றி

ஓதாதுணர்ந்திடும் ஒளியே போற்றி

ஔவியம் நீக்கிய அருளே போற்றி

அஃகிய பொருளாய் அமைந்தாய் போற்றி

கண்ணுள் மணியாய் கலந்தாய் போற்றி

காட்சிப் பொருளாய் விரிந்தாயசிி

கிரியா ச்க்தியாய் கிளர்ந்தாய் போற்றி

கீழ்மை தவிர்த்தெம்மைக் காப்பாய் போற்றி

குணமெனும் குன்றாய் நிகழ்வாய் போற்றி

கூர்த்த் மதியினைக் கொடுப்பாய் போற்றி

கொஞ்சும் குரல் கேட்டிரங்குவாய் போற்றி

கேட்ட வரங்கள் ஈவாய் போற்றி

கைதவம் ஒழித்தருள் கடலே போற்றி

கொண்டல் நிற்ப்பூங் கொடியே போற்றி

கோதில் உள்ங்கொடி கொள்வாய் போற்றி

பெயர்க் கனியே போற்றி

ஙப்போர் மழவேந்தரசியே போற்றி
சதுர்மறைக் கிறைவியே தாயே போற்றி

சான்றோர் தவத்தின் உருவே போற்றி

சிந்தை குடிகொள் தெய்வமே போற்றி

சீரும் திருவும் அருள்வாய் போற்றி

ஸுருதிப் பொருளெனெத் தோற்றுவாய் போற்றி

ஸூரியச் சந்திரச்சுடரே போற்றி

செம்பொருளாகத் திகழ்வாய் போற்றி

சேவடி பணிவோர் திருவே போற்றி

சைவ னெறியிற் றழைப்பாய் போற்றி

சொல்லும் பொருளும் துலக்குவாய் போற்றி

சோர்வினைப் போக்கும் சோதியே போற்றி

சௌபாக்கிய மருள் தாயே போற்றி

ஞான சக்தியாய் நவில்வாய் போற்றி

ஞேயம் உறுமகம் நிறைந்தாய் போற்றி

டம்பம் தவிர்க்கும் தாயே போற்றி

இணக்கம் பெறுவோர்க்கு இறைவியே போற்றி

தளிர்போல் மேனி ஒளிர்வாய் பொற்றி

தாமரைச் சீரடி அமைந்தாய் போற்றி

திங்கள் முகத்துத் திருவே போற்றி

தீம்பால் மொழியே செப்புவாய் போற்றி

துடியிடை பெற்ற சுவர்ணமே போற்றி

தூமணி ஆரமிடற்றாய் போற்றி

தெளிந்த நன் நெஞ்சத் தேவியே பொற்றி

தேன் போல் இனிக்கும் செஞ்சொலா போற்றி

தைவிகம் போற்றுவார் தண்ணிழல் போற்றி

தொல்லறப் பயனாய் துலங்குவாய் போற்றி
புதுமை யாவும் புதுக்குவாய் போற்றி

பூரண இன்பப் போழியே போற்றி

பெண்மைக் கரசாய் பிறங்குவாய் போற்றி

பேரின் பக் கடல் ஆவாய் போற்றி

பைம்பொன் நிறத்துப் பாவாய் போற்றி

பொறையே பூணாய் பூண்பாய் பொற்றி

போற்றுவார்க் கிரங்கும் தாயே போற்றி

மலருள் மணமென வயங்குவாய் போற்றி

மாதவத் தோட்கருள் மாதா போற்றி

மிடிதவிர்த் தாளும் விமலையே போற்றி

மீனவர் மகளாய் விளங்குவாய் போற்றி

முடிவிலா ஞான முதல்வியே போற்றி

மூர்த்திகள் பலவாய் தோற்றுவாய் போற்றி

மென்மைகள் யாவிலும் மிளிர்வாய் போற்றி

மேதினிக் கரசியாய் விளஙுவாய் போற்றி

மையல் நீக்கிடும் ஐயை போற்றி

மொழிந்திடும் முத்தமிழ்க் குதவுவாய் போற்றி

மோனளத் தமர்ந்த முழுமுதல் போற்றி

மௌவலம் குழல் நீள் மயிலே போற்றி

இயல் இசை நாடகத் தியைவாய் போற்றி

அரவமோ டாடிடும் அம்பிகை போற்றி

இலகொளி பரப்பிடும் எந்தாய் போற்றி

வரங்கள் பலவும் வழங்குவாய் போற்றி

வான்மழை யாகிக் காப்பாய் போற்றி

விண்ணும் மண்ணும் விரிந்தாய் போற்றி

வீடுபே றளிக்கும் மெய்ப்பொருள் போற்றி

வெற்றியின் சின்னமாய் மிளிர்வாய் போற்றி

வேதப் பொருளின் விளைவே போற்றி

வையங் காக்கும் மணியே போற்றி

அழகெலாம் ஒன்றாய் அமைந்தாய் போற்றி

இளமையில் என்றும் இருப்பாய் போற்றி

அறநிலை ஆற்றின் அமிழ்தே போற்றி

அனந்தமும் நீயே ஆவாய் போற்றி

கவின் பெறு கற்புக் கனலெ போற்றி

செழியன் அநீதி தீர்த்தாய் போற்றி

செல்லிக் குதவிய திருவே போற்றி

திரிசூ லங்கை திகழ்வாய் போற்றி

மதுரகாளி மாதா போற்றி

எல்ல உயிரும் ஈன்றாய் போற்றி

நல்லவை யாவையும் நல்குவாய் போற்றி

மங்களம் முழங்கும் மணியே போற்றி

போற்றி போற்றி போற்றி போற்றி

போற்றி போற்றி ஜெயஜெய போற்றிய
சர்வம் சிவமயம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram