fbpx

சிவபெருமான் பற்றிய சில தகவல்கள்

1.சிவசின்னங்களாகபோற்றப்படுபவை?
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

  1. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்? ஐப்பசி பவுர்ணமி
  2. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்? தட்சிணாமூர்த்தி
  3. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
    திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)
  4. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்…..
    திருக்கடையூர்
  5. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்……
    பட்டீஸ்வரம்
  6. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்……… திருமூலர்
  7. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்…….
    திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)
  8. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது……….. துலாஸ்நானம்
  9. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது………
    கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்….. கோச்செங்கட்சோழன்.

  1. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்?
    நடராஜர்(கூத்து என்றால் நடனம்)
  2. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்…
    சிதம்பரம்
  3. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்… காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்… திருவண்ணாமலை

  1. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்?
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
  2. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்…
    மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)
  3. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்…
    சின்முத்திரை
  4. கயிலாயத்தில்தேவலோகப்பெண்கள் உடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்…
    சுந்தரர்
  5. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்…
    ஸ்ரீசைலம்(ஆந்திரா)..
  6. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்…
    ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்
  7. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்…. திருவண்ணாமலை
  8. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்…. திருமங்கையாழ்வார்
  9. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்…. பரணிதீபம் (அணையா தீபம்)
  10. அருணாசலம் என்பதன் பொருள்…
    அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறு ஆதாரங்களில் திருவண்ணாமலை எந்தஆதாரமாகத் திகழ்கிறது? மணிபூரகத் தலம்

  1. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்…
    பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்
  2. “”கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு…
    1997, டிசம்பர் 12
  3. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்…
    திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ….தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்…..
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

  1. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்…. அனுமன்

33.நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்

  1. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?
    அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)
  2. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்?
    அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)
  3. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? 108
  4. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் யார்?
    காரைக்காலம்மையார்

38.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர்……
அப்பர்(திருநாவுக்கரசர்)

  1. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
    ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
    முயலகன்
  2. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….
    குற்றாலம்
  3. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…
    சங்கார தாண்டவம்
  4. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
    வெள்ளியம்பலம்(மதுரை)
  5. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…
    பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
  6. நடராஜருக்குரிய விரத நாட்கள்….
    திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram