சகல ஐஸ்வர்யங்களையும் தரும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாட்டு சிறப்பு
ஸ்ரீபைரவர் வழிபாடு என்பது ஸ்ரீ கால பைரவர் என தொடங்கி ,ஸ்ரீ அஷ்ட பைரவர், ஸ்ரீ அஷ்டாஷ்ட பைரவர், என தொடர்ந்து ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவரில் முடிவது.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வம்…
தமிழ்நாடு மட்டுமின்றி உலகில் வேறு எங்கும் காணவியலா திருவுரு கொண்ட அதிசய/அற்புத பெருந்தெய்வம்.
நான்கு யுகங்களில் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகங்களில் இதுவரை எவர் மூலமும் வெளிப்படாத; கலியுகத்தில் இவ்வுலகை உய்விக்க, காத்து அருள பைரவ உபாசகர் ஸ்ரீவேம்புச்சித்தர் குணசேகர ஸ்வாமிகள் தியானத்தில் 2010ல் ஒரு அதிகாலைப் பொழுதில் வெளிப்பட்ட அதியற்புத திருவுருவமே 12.2.2012லிருந்து தஞ்சாவூர் மாவட்டம் , கும்பகோணம், திருவிசநல்லூர், சொர்ணபுரியில் வினை நீக்கும் வேம்புச்சித்தர் ஆசிரமம் எனும் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் சித்தர் பீட திருவால யத்தில் எழுந்தருளி நான் இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங்களும் கற்பக விருட்சமாக வளரும் என்று வந்து வணங்கி செல்லும் பக்தர்களுக்கு தனிக்கோயிலில் இருந்து அருள் பாலித்து வருபவர் தான் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான்.
இங்குள்ள ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் நினைத்ததை நினைத்த படி , கேட்டதை கேட்டபடி தரும் கற்பக மரத்தின் அடியில் கங்கா ஜடா முடியில் சந்திர பிறை சூடி நாக, பாச, சூல, டமருகத்துடன் நான்கு திருக்கரங்களுடன், மேல் இரு திருக்கரங்களில் சங்க நிதி, பத்ம நிதி தாங்கி, கீழ் இரு திருக்கரங்களில் அபய வரத முத்திரை காட்டி மடியில் பூர்ண கும்பத்துடனும்; ஸ்ரீஅஜாமிளா தேவி எனும் ஸ்ரீமஹாசொர்ண பைரவியை தமதுமேல் திருக்கரத்தால் சற்று அணைத்தவாறு; ஸ்ரீசொர்ண பைரவி அம்மையோ மடியில் நிரம்பி வழியும் சொர்ண கும்பத்தை ஒரு திருக்கரத்தால் பிடித்தவாறு மறு திருக்கரத்தால் ஸ்ரீசொர்ணாகர்ஷன பைரவப் பெருமானின் இடுப்பை அணைத்தவாறு இருவரும் புன்னகை தவழும் திருமுகங்களுடன் பத்ர பீடத்தின் மீது உடன் அமர்ந்து அருள் பொழியும் சர்வானந்த கோலாகலராக திகழ்கிறார். அவர் பட்டுப் பீதாம்பரதாரி. சர்வாபரணங்கள் பூண்டு சர்வ அலங்காரங்களோடு குபேர சம்பத்தையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சொர்ணத்தையும், தன, தானியங்களையும் தன்னகத்தே குவித்து வைத்திருப்பவர். மிகவும் வரப்பிரசாதி. ஆகவே இவரை உபாசனை செய்பவர்கள் தாமும் செல்வந்தராக இருப்பதுடன் மற்றவர்களையும் செல்வந்தராக மாற்றும் இயல்பு கொண்டவராக திகழ்வர்.
சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் வழிபாடு என்பது வழி்படுபவரின் வாழ்க்கையில் தரித்திரம் தலை காட்டாது காத்து, தன, தான்யம், சொர்ணம் முதலிய செல்வ செழிப்பை தரும் சிறப்பு கொண்டது. ஸ்ரீசொர்ணாகர்ஷன பைரவர் மந்திர சாஸ்திரத்திற்குள் மறைந்திருந்த மஹா பொக்கிஷம். விலை மதிப்பிலா வைரம் போன்றவர். அந்தக்காலத்தில் சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாடு வெளிப்படுத்தப்படாத மிக ரகசியமாக வெகு சிலரால் மட்டுமே நடத்தப்பட்ட வழிபாடாக இருந்துவந்தது.
ஸ்ரீசொர்ணாகர்ஷன பைரவர் 64 பைரவர்களுக்கும் அப்பாற்பட்டவர். அஷ்ட லட்சுமிகளுக்கும், குபேரருக்கும் நவ நிதிகளையும் கொடுக்கும் அதிபதி. வீட்டு பூஜையறைகளிலும், வழிபாட்டு தலங்களிலும், தங்கநகை, வைர நகை வியாபாரம் செய்யும் கடைகளிலும் வைத்து வழிபட மிகவும் உகந்தவர். இப்பெருமானை வீட்டில் வைத்து தினசரி மூன்று வேலைகளிலும் வழிபட்டு வர எந்த கஷ்டங்களும் நெருங்காது. கஷ்டங்களும் வராது. தொட்டது துலங்கும். சொர்ணம் கொழிக்கும்.
பௌர்ணமி தோறும் முறைப்படி உள்ளன்போடு இப்பெருமானை பூஜித்து மந்திரம் ஜெபித்து வர தலைமுறை தலைமுறையாக நீடித்து நிற்கக்கூடிய நிறை செல்வம் சேரும்.
ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவ வழிபாட்டில் மந்திர ஜெபம் தான் பிரதானம். மூல மந்திரத்தை தொடர்ந்து ஏழு லட்சம் முறை உரு போட உயர்வு மேல் உயர்வு ஏற்படுமே அன்றி தாழ்வு என்பதே எட்டிப் பார்க்காது.
ஸ்ரீசொர்ணாகர்ஷன பைரவர் பூஜைக்கு தூய்மை மிகவும் தேவை. குரு உபதேசம் பெற்று மந்திர ஜெபம் செய்வது அபரிமிதமான பலன்களை அள்ளித்தரும்.
திங்கட்கிழமை மாலை நேரங்கள், மாத பிரதோஷம், தினசரி பிரதோஷ காலங்கள், பௌர்ணமி மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்கள், திருவாதிரை நட்சத்திர நாட்கள் வழிபட மிகவும் உகந்த நாட்கள்.
அதேபோல் மாதப்பிறப்பு, பிறந்த நட்சத்திர நாட்கள், தினசரி ராஹு செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், வியாழக்கிழமை மாலை நேரம், தேய்பிறை அஷ்டமி, அம்மாவாசை நாட்களிலும், ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷ நட்சத்திர நாட்களிலும்
இங்கு வந்து ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் மறையும். இனம் புரியா பயம் தானாய் விலகும். சாப, பாப, தோஷங்கள், கடன் தொல்லைகள் குறையும். தீயவை அனைத்தும் விலகும். நல்லன அனைத்தும் நடக்கும்.
ஒரு நல்ல காரியம் தொடர்ந்து நல்லபடியாக நடந்தேற தினசரி குளிகை காலங்கள் மிகவும் உகந்தது.
சனிக்கிழமைகளில் வழிபட சனிக்கிரஹ தோஷங்கள் யாவும் விலகும்.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலை, வில்வ மாலை, சந்தன மாலை, மஞ்சள் செவ்வந்தி மாலை சாற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவருக்கு புணுகு, ஜவ்வாது, சந்தன அத்தர் பூசி வழிபடுவது சிறந்தது. சந்தன காப்பு சாற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை அள்ளித்தரும்.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவருக்கு வெல்ல பாயாச அன்னம், பால் பாயாசம், அவல் பாயாசம், உளுந்து வடை, பானகம், சம்பா அரிசி சாதம், திரி மதுரம் எனும் பால், தேன், பழம் கலந்தது படைப்பது மிகவும் உகந்தது.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவருக்குஅர்ச்சனைசெய்ய தும்பைப்பூ, வில்வ இலை, தாமரை மலர், மஞ்சள் செவ்வந்தி பூ மிகவும் உகந்தது.
ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவருக்கான மூல மந்திரம்:
ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் நமோ பகவதே சொர்ணாகர்ஷன பைரவாய ப்ரணதாபீஷ்ட தத்பர பூரணாய ஏஹி ஏஹி கருணாநிதே மஹ்யம் ஹிரண்ய சித்திஞ்ச தாபய தாபய சீக்ரம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஸ்வாஹா.
சொர்ணாகர்ஷன பைரவர் 12 நாமாக்கள்
ஓம் ஸ்ரீம் ஸ்வர்ணப்ரத நம:
ஓம் ஸ்ரீம் ஸ்வர்ணவர்ஷீ
நம:
ஓம் ஸ்ரீம் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ நம:
ஓம் ஸ்ரீம் பக்தப்ரிய நம:
ஓம் ஸ்ரீம் பக்தவஸ்ய நம:
ஓம் ஸ்ரீம் பக்தாபீஷ்ட பலப்ரத நம:
ஓம் ஸ்ரீம் சித்தித நம:
ஓம் ஸ்ரீம் கருணாமூர்த்தி நம:
ஓம் ஸ்ரீம் பக்தபீஷ்ட ப்ரபூரக நம:
ஓம் ஸ்ரீம் நிதி சித்தி
ப்ரத நம:
ஓம் ஸ்ரீம் ஸ்வர்ண சித்தித நம:
ஓம் ஸ்ரீம் ரச சித்தித நம:
இதை 9 முறை தொடர்ந்து படிக்கவும்.
இத்திருவாலயத்தில் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி நாட்களில் காலை வேளையில் ஸ்ரீ கால பைரவர், ஸ்ரீ அஷ்ட பைரவர், ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமம் சர்வ காரிய சித்தி, சொர்ண சித்தி தரும் சிறப்பான மூலிகைகளை கொண்டு நடத்தப் பெறும். கலந்து கொள்ள விரும்புபவர்கள் வந்து கலந்து கொண்டு குருவருளையும் இறைப்பேரருளையும் பெற்று செல்லலாம்.