32 சித்தர்களின் சமாதிகள் ஜீவசமாதிகள்.
தலையாட்டி சித்தர்.
திருச்சிக்கு வடக்கே 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெரம்பலூர் அருகே உள்ள பிரம்மரிஷி மலைச்சாரலில் அமைந்துள்ள மூசா கோட்டை ஆசிரமத்திலிருந்து இவர் பக்தர்களுக்கு அருளாட்சி புரிந்து வந்தார்.
1988 நவம்பர் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தமது ஆசிரமத்தில் சமாதி அடைந்தார்.
இவரது சமாதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடமேற்கு திசையில் உள்ள மூசா கோட்டை ஆசிரமத்தில் காணப்படுகிறது.
யோகீஸ்வரர் ராமகிருஷ்ணா சுவாமி
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் சுமார் 160 வருடங்களுக்கு முன்பு பிறந்தார்.
அன்னை யோகா அம்பிகையின் அருள் பெற்றவர்.
1994 தை மாதம் சுக்ல பட்சம் துவாதசியில் சமாதி அடைந்தார்.
திருச்சியிலிருந்து லால்குடிக்கு 20 கிலோமீட்டர் தூரம் வந்தால் அங்குள்ள பின்வாசல் கிராமத்தில் பல்குனி ஆற்றங்கரையில் இவரது சமாதி உள்ளது.
மெய்வரத்ததம்பிரான்
ஜெயங்கொண்ட சோழபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் மற்றும் அரியலூருக்கு வடகிழக்கே 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள செந்துறை கிராமத்து மடத்து பழனியாண்டவர் கோயிலில் இவரது சமாதி உள்ளது.,
சிவப்பிரகாசசுவாமி
திருச்சி துறையூரில் சாலையில் உள்ள திரு வெள்ளையூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலின் அருகில் இவரது சமாதி இருக்கிறது எங்கு செல்ல திருச்சி சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு.
மாக்கான்சுவாமி
திருவையாற்றில் பிறந்தவர்.
பிரம்ம ஞானி இவர் சமாதி அடைந்தது 28 9 1954 ஐ ய வருடம் புரட்டாசி மாதம் 11 ஆம் தேதி வளர்பிறை
துவிதியை திதி சித்திரை நட்சத்திரத்தில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சாலையில் இருந்து #ஓயாமரி சுடுகாடு செல்லும் சாலையின் இடது பக்கம் சென்றால் காவேரிக்கரையில் இவரது மடமும் சமாதியும் உள்ளன.
நாராயணாபிரம்மேந்திர
கிபி 1791 ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு அருகில் உள்ள வேட் கூர் கிராமத்தில் பிறந்தவர்.
அன்னை ஆதிபராசக்தியின் அருள் பெற்றவர்.
15 ஆண்டுகள் பிடி மணலும் நறும்புனல் மட்டுமே அருந்தியவர்.
இவர் சமாதி ஆனது 1912ம் வருடம் மாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில்.
திருச்சி சேலம் சாலையில் இருந்து 14 கிலோமீட்டர் தூரம் அல்லது முசிறியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் காவேரியின் வடகரையில் இவரது சமாதி உள்ளது.
கருவூரார்
சனி தோஷத்தை போக்க வல்லவர்.
கரூரில் உள்ள பசுபதி ஈஸ்வரர் கோயிலின் உள்ளே ஒரு புறத்தே இவரது சமாதி உள்ளது.
சதாசிவபிரம்மேந்திரர்
கரூரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நெரூர் உள்ள சிவன் கோயிலின் பின்புறம் இவரது சமாதி இருக்கிறது.
🌷#பதஞ்சலி
இவரது ஜீவ சமாதிக்கு சென்று தரிசிக்க
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி இருக்கிறது.
சமயபுரத்திலிருந்து சிறுகனூர் வந்தாள் அங்கிருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருப்பட்டூர் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ளது விசாலாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே இவரது ஜீவசமாதி அமைந்துள்ளது.
🍅#புலிப்பாணி
மேற்கூறப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் காசிவிசுவநாதர் கோயிலில் இவரது ஜீவசமாதி உள்ளது.
🐘#இராமானுஜர்
இவர் ஆதிசேஷனின் அவதாரம்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நாலு நாலு 1907 அன்று திருவாதிரையில் பிறந்தார்.
1137 தானுகந்த தானானா திருமேனி ஆனவர்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் தேவஸ்தான அலுவலகத்திற்கு கிழக்கே உள்ள ராமானுஜர் சன்னதிக்கு பின்புறம் இவரது சமாதி உள்ளது.
🐘#திருப்பதி சுவாமி
அரவக்குறிச்சியில் பிறந்த இவர் ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் சமாதி ஆனார்.
திருச்சியிலிருந்து 36 கிலோமீட்டர் மணப்பாறையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குளித்தலையில் கடம் பே ஸ்வரர் கோயிலுக்கு வடபுறம் இருக்கும் ஆற்றங்கரையில் இவரது சமாதி இருக்கிறது.
🌍#சாந்தலிங்க சுவாமி
இவர் சித்தி அடைந்த தினம் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில்.
கரூர் திருச்சி சாலையில் உள்ள லா லா பேட்டையில் இவரது சமாதி இருக்கிறது.
🌷#நந்தி அடிகள் சுவாமி
இவர் பிறந்தது 1862 துன்மதி ஆண்டு பங்குனி மாதம் சதுர்த்தி திதி பூரட்டாதி நட்சத்திரத்தில்.
இவரது இயற்பெயர் சீனிவாசன்.
இவர் சமாதி அடைந்தது 1928 பிரபவ ஆண்டு மாசி மாதம் 13ஆம் தேதி அசுவதி நட்சத்திரத்தில்.
திருச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லால்குடி சென்று அங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்.
பெருவளநல்லூர் சென்றால் இவரது சமாதியை காணலாம்.
👏#வாத்தியார் அப்பா சுவாமி
இவர் 1960 மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் சமாதியானார்.
ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் நெல்சன் சாலையில் கடைசியில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் அருகில் இவரது சமாதி இருக்கிறது.
👏#சொக்கலிங்க சுந்தரமூர்த்தி சுவாமி
இவர் சமாதியானது 1907 மார்கழி மாதம் உத்திர நட்சத்திரத்தில்
திருச்சி தாரநல்லூர் பெரிய மார்க்கெட் அருகில் உள்ள பிரம்ம ஞான சபை தாயுமானவர் இல்லத்தின் பின்புறம் இவரது சமாதி இருக்கிறது.
🐙#மைசூர் சதானந்த சுவாமி
இவர் சமாதி அடைந்தது 1901 ஐப்பசி மாதம் விசாகத்தில்.
மேலே குறிப்பிட்ட பிரம்மஞான சபை தாயுமானவர் இல்லத்தின் பின்புறத்தில் இவரது சமாதியும் உள்ளது.
🍅#குன்றி மணி சுவாமி
இவர் ஆயிரத்து 834 தைமாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சமாதி ஆனார்.
கீழப் புலி வார சாலை திருச்சி இரண்டில் இருக்கும் நன்றுடையான் கோயிலிலுள்ள வன்னி மரத்தின் அருகில் இவரது சமாதி இருக்கிறது.
🐘#குழு மேனன் தான் சுவாமி
இவர் சமாதி அடைந்தது 1889 வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று.
திருச்சி வராக சேரி பகுதியில் உள்ள குழு மிக் கரை சாலையில் இவரது சமாதி காணப்படுகிறது.
🌍#கட்டங்கழி சுவாமி
இவர் மாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் சமாதி அடைந்தார்.
திருச்சி திரு எறும்பியூர் சிவன் கோயிலில் இருக்கும் மலையின் வடக்கு பகுதியில் உள்ள நாவல் மரத்தின் அருகில் இவரது சமாதி இருக்கிறது.
🌷#யோக மாதா தமயந்தி அன்னை
இவர் சமாதி அடைந்த தினம் மார்கழி மாதம் மகம் நட்சத்திரத்தில்.
திருச்சிதிரு எறும்பியூர் வேங்கூர் சாலையில் உள்ள விஎஸ் நகரில் இறங்கி இவரது சமாதி இருக்கும் இடத்தை அடையலாம். கல்லணை வழி.
🐘🐘#யானைக்குட்டி மாணிக்கவாசக சுவாமி.
இவர் 1969 மார்கழி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று சமாதி அடைந்தார்.
இவரது சமாதி திருச்சி காவேரி கரையில் உள்ள தில்லைநாயகம் படித்துறையில் உள்ளது.
👏#ஜெய வீர ஆதி நாயகர் சுவாமி
இவர் பிறந்தது 1919இல் சமாதி 1952 புரட்டாசி புனர்பூசம்.
இவரது சமாதி திருச்சி காவேரி கரையில் உள்ள லயன் டேஸ் அருகில் உள்ளது.
🍅#மலையாள மௌன குரு
இவர் சமாதி அடைந்த தினம் 1964 பங்குனி மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று.
கீழ் தேவதானம் திருச்சி நூலிலுள்ள ஓயா மதி சுடுகாட்டுக்கு அருகில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.
🐘#ஞானகுரு ஆறுமுக சுவாமி
28 7 ஆயிரத்து 901 அன்று பெரம்பலூர் பிறந்தார்.
சித்துகள் பல புரிந்தவர்.
இவர் 1966 வைகாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சமாதி அடைந்தார்.
இவரது சமாதி இருக்கும் இடத்தின் முகவரி ஞானகுரு ஆறுமுக தேவ் குடியில் 49. 13 காவல்கார தெரு திருச்சி 3.
🌷#பொற்றாளம் பூவாய் சித்தர்
கருப்பை மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தும் பரிகார சித்தர் இவர்.
திருச்சி கரூர் சாலையில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பேட்டை வாய் தலை எனும் ஊரில் இவரது சமாதி உள்ளது.
🐘#அகோரகரா சுவாமி
ஆந்திராவில் உள்ள அரகொண்ட கிராமத்தில் சித்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் 1920இல் பிறந்தார்.
இவர் சமாதி அடைந்தது 15 1 1981 இல் திருச்சி நாமக்கல் சாலையில் உள்ள தோடு பட்டியில் இவரது சமாதி உள்ளது.
🐘🐘🐘#வெள்ளைறைச் சித்தர்
திருச்சி துறையூர் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திரு வெள்ளை அறையில் இவரது சமாதி உள்ளது.
👏#கொத்தனார் சுவாமி
இவர் சித்தியடைந்து சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில்.
திருவெறும்பூர் அக்கு தெற்கே 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சூரியூர் அருகில் உள்ள பணம் பட்டி கிராமத்தில் இவரது சமாதி இருக்கிறது.
🍅#மகா சுருளி சுவாமி
திருச்சி புதுக்கோட்டை சாலையில் கீரனூர் இறங்கினால் அங்கு இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடுகபட்டியில் இவரது சமாதி இருக்கிறது.
🐘#யோகி தங்காம் பிள்ளை
மகா சுருளி சுவாமியின் பிரதான சீடர் இவர்.
வடுகபட்டியில் உள்ள மகா சுருளி சுவாமியின் சமாதிக்கு அருகில் இவரது சமாதியும் இருக்கிறது.
நாராயண பிரம்மேந்திரர் சுவாமி
இவர் 1791 ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள வேட் கூர் என்னும் கிராமத்தில் பிறந்தார்.
இவர் தமது 120 ஆவது வயதில் சமாதி அடைந்தார்.
இவர் சமாதி அடைந்த தினம் 1912 மாசி மாதம் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேட்டை நட்சத்திரத்தன்று.
திருச்சியில் இருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள தொட்டியத்து அடுத்த காட்டு புதூரில் காவிரியின் வடகரையில் இவரது சமாதி உள்ளது.