fbpx

திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்

குஷ்ட நோய் தீர்க்கும் தலம்.

இத்தல இறைவருக்குத்தான் அரிவாட்டாய நாயனார் தினந்தோறும் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் படைத்து வந்தார்; இவ்விறைவரே நாயனாருக்கு முக்தி கொடுத்தருளியவர்.

வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.

கோச்செங்கட் சோழன் கட்டிய கோயில்.

அரிவாட்டாய நாயனார் – அவர் மனைவி அரிசியும் மாவடுவும் கொட்டுவது, இறைவனின் திருக்கரம் வெளிப்பட்டு நாயனாரைத் தடுப்பது, நாயனாருக்கும் மனைவியாருக்கும் இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தருவது முதலியவை சிற்பங்களாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.

அரிவாட்டாய நாயனார்:-
இவர் சிவனடியார்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டிருந்தார். தண்டலச்சேரியில் அருள்பாலிக்கும் இறைவனுக்கு நாள்தோறும் சம்பா அரிசியில் உணவும், செங்கீரையும், மாவடுவும் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து வந்தார். இவரது மனைவியும் இவரைப்போலவே இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவர்களுக்கு ஒரு சமயம் வறுமை ஏற்பட்டது. வறுமையைக்கண்டு அடியார் மனம் தளராமல் தெய்வத்திருப்பணியை விடாமல் செய்து வந்தார்.

கூலிக்கு ஆள் வைத்து நெல் அறுத்து வந்த இவர், வறுமை காரணமாக தானே கூலிக்கு நெல் அறுக்க சென்றார். வேலைக்கு கூலியாக கிடைக்கும் நெல்லைக்கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வந்தார். பின்னரும் இவரை இறைவன் சோதிக்க நினைத்தார். இவருக்கு கூலியாக கிடைத்ததெல்லாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததால், இவரது குடும்பத்திற்கு உணவில்லாமல் போனது. இவரும் இவரது மனைவியும் கீரையை மட்டும் சாப்பிடத் தொடங்கினர். நாளடைவில் கீரைக்கும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது தண்ணீரை குடித்து வாழத்தொடங்கினர்.

இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்காவது நெல் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவர் இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதற்காக செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு கூடையில் சுமந்து கொண்டு புறப்பட்டார். சாப்பிடாததால் இவரை பசி வாட்டியது. மனைவிக்கும் பசி மயக்கம். தாயனார் பசியினால் கீழே விழப்போனார். அவரை மனைவி தாங்கி கொண்டார். கூடையில் சுமந்து வந்த நைவேத்தியப் பொருள்கள் நிலத்தில் விழுந்து சிதறின. தாயனார் மனம் கலங்கினர். அவருக்கு உயிர் வாழவே விருப்பமில்லை. எனவே தம்மிடம் நெல் அறுக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து தன் கழுத்தை அரிந்து கொள்ள துணிந்தார். அவரது பக்தியின் ஆவேசத்தை கண்டு உடன் வந்த மனைவி திகைத்தாள். தன் மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வேண்டினாள். அப்போது நைவேத்தியப் பொருள் விழுந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, உள்ளிருந்து ருத்ராட்ச மாலையும், திருநீரும் அணியப்பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது. அத்திருக்கரம் தாயனாரின் கையைப்பற்றியது. மாவடுவை கடித்துச் சாப்பிடும் சப்தமும் கேட்டது. இறைவனின் திருக்கரம் பட்டவுடன் மெய்மறந்து நின்றார் தாயனார். தாயனாரின் பக்தியை மெச்சிய இறைவன் இத்தலத்தில் பார்வதியுடன் தரிசனம் தந்தார். அரிவாளால் தம் கழுத்தை அரியத்துணிந்தமையால் இவருக்கு “அரிவாட்ட நாயனார்” என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.


இக்கோயிலுக்கு அருகில் உள்ள 47 கோயில்கள்:-

I. திருவாரூர் to திருதலையாலங்காடு

  1. திருவாரூர் – தியாகராஜர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
  2. திருவாரூர் அரநெறி – அறனெறியப்பர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    ஆரூர் அரநெறி என்னும் கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச்சுற்றில் உள்ளது.
  3. ஆரூர் பறவையுன்மண்டளி – தூவாய் நாயனார் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    கீழவீதியில் தேரடியில் 500 மீ தொலைவில் உள்ளது.
  4. திருவிளமர் – பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    ஆரூர் பறவையுன்மண்டளியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
  5. திருக்கண்ணமங்கை – பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்
    (திவ்ய தேசம்)
    திருவிளமரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
  6. திருக்கரவீரம் – கரவீரநாதர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருக்கண்ணமங்கையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
  7. மணக்கால் ஐயம்பேட்டை (திருப்பெருவேளுர்) – அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருக்கரவீரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
  8. எண்கண் – சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
    மணக்கால் ஐயம்பேட்டையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
  9. எண்கண் – ஆதி நாராயணப்பெருமாள் திருக்கோயில்
    சுப்ரமணிய ஸ்வாமி கோயிலுக்கு அருகில் உள்ளது.
  10. திருதலையாலங்காடு – ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    எண்கண்ணிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

II. திருவாரூர் to திருமருகல்

  1. திருபயத்தங்குடி (திருபயற்றூர்) – திருப்பயற்றுநாதர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருவாரூரிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது.
  2. திருசெங்காட்டங்குடி – உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருபயத்தங்குடியிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
  3. ராமனதீச்சுரம் – ராமநாதசுவாமி திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருசெங்காட்டங்குடியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
  4. திருக்கண்ணபுரம் – சௌரிராஜா பெருமாள் திருக்கோயில்
    (திவ்ய தேசம்)
    ராமனதீச்சுரத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
  5. திருப்புகலூர் – அக்னீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருக்கண்ணபுரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
  6. திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் – வர்த்தமானேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    (திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதிக்கு அருகில் உள்ளது.)
  7. திருமருகல் – மாணிக்கவண்னர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருப்புகலூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

III. திருவாரூர் to திருவாஞ்சியம்

  1. திருபள்ளியின்முக்கூடல் – முக்கோண நாதேசுவரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருவாரூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
  2. திருவிற்குடி – வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருபள்ளியின்முக்கூடலில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.
  3. திருப்பனையூர் – சௌந்தர்யநாதர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருவிற்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.
  4. திருக்கொண்டீச்சரம் – பசுபதீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருப்பனையூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
  5. நன்னிலம் – மதுவனேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருக்கொண்டீச்சரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
  6. திருவாஞ்சியம் – வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    நன்னிலத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

IV. திருவாரூர் to திருநாட்டியாத்தான்குடி

  1. கோயில் கண்ணாப்பூர் – நடுத்தறியப்பர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருவாரூரிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது.
  2. திருவலிவலம் – மனத்துணைநாதர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    கோயில் கண்ணாப்பூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
  3. திருக்குவளை – கோளிலிநாதர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருவலிவலத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
  4. எட்டுக்குடி – முருகன் திருக்கோயில்
    திருக்குவளையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
  5. திருவாய்மூர் – வாய்மூர்நாதர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    எட்டுக்குடியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
  6. சித்தாய்மூர் – பொன்வைத்த நாதேசுவரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருவாய்மூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.
  7. கச்சனம் – கைச்சின நாதேசுவரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    சித்தாய்மூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
  8. திருக்கொள்ளிக்காடு – அக்னீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    கச்சனத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.
  9. திருத்தங்கூர் – வெள்ளிமலைநாதர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருக்கொள்ளிக்காட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
  10. திருநெல்லிக்காவல் – நெல்லிவன நாதேசுவரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருத்தங்கூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
  11. திருக்காரவாசல் – கண்ணாயிரநாதர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருநெல்லிக்காவலில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
  12. திருநாட்டியாத்தான்குடி – மாணிக்கவண்ணர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருக்காரவாசலில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

V. திருவாரூர் to திருப்பரிதிநியமம்

  1. திருப்பாதாளீச்சரம் (பாமணி) – நாகநாதசுவாமி திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருவாரூரிலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது.
  2. திருப்பூவனூர் – புஷ்பவனநாதர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருப்பாதாளீச்சரத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.
  3. கோயில் வெண்ணி (திருவெண்ணியூர்) – கரும்பேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருப்பூவனூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.
  4. திருப்பரிதிநியமம் – பரிதியப்பர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    கோயில் வெண்ணியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது.

VI. திருவாரூர் to தண்டலச்சேரி

  1. ஓகைப்பேரையூர் (திருப்பேரெயில்) – ஜகதீசுவரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருவாரூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது.
  2. திருவெண்டுறை (திருவண்டுதுறை) – வெண்டுறைநாதர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    ஓகைப்பேரையூரிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது.
  3. திருக்கோட்டூர் – கொழுந்தீசர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருவெண்டுறையிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
  4. திருக்களர் – பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருக்கோட்டூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
  5. திருவுசத்தானம் (கோயிலூர்) – மந்திரபுரீசுவரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருக்களரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது.
  6. இடும்பாவனம் – சற்குணநாதேசுவரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருவுசத்தானத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது.
  7. திருக்கடிக்குளம் – கற்பகநாதர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    இடும்பாவனத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
  8. திருத்தண்டலைநீள்நெறி (தண்டலச்சேரி) – நீள்நெறிநாதர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
    திருக்கடிக்குளத்திலிருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram