fbpx

மார்கழி மாதம் மட்டுமே காண முடியும் பலரும் அறிந்திடாத தகவல்!

மார்கழி மாதத்தில் வழிபட வேண்டிய திருச்செங்கோடு-சுயம்பு மரகத லிங்கத்தின் மர்மம்…!!

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீதுள்ளது. இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.,,
திருச்செங்கோடு சுயம்புலிங்கத்தின் மர்மம்:,

இங்கு மார்கழி மாதம் மட்டும் குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும்.
அப்பொழுது பிருங்கி முனிவர் வழிபட்ட மரகதலிங்கம் வைத்து வழிபடப்படுகிறது. மற்ற மாதங்களில் அதற்கு பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள்.

பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தின் வரலாறு சுருக்கம்.. முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் செய்து கொண்டனர்.

அந்த போரினால் உலகில் பேரழிவு -கள் ஏற்பட்டன. இந்த துன்பங் களை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர்.

அதன்படி ஆதிஷேசன் தன்படங்களால் மேருமலை சிகரத்தின் முடியை அழுத்தி கொள்ள வேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியை தளர்த்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் வாயுதேவனால் பிடியை தளர்த்த முடியவில்லை.

இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார்.
இதனால் உயிரினங்கள் அனைத்தும் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்த பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிஷேசனிடம் பிடியை தளர்த்த வேண்டினன் தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிஷேசனின் சிகரத்தையும் சேர்த்து புமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறி விழுந்தது.
அவற்றிலொன்று திருவண்ணாமலையாகவும்,

மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடு) காட்சியளிக்கிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன.

சுயம்பு மரகத
லிங்கத்தின் வரலாறு பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வழிபட்டு விட்டு, அவரது அருகில் இருக்கும் உமாதேவியை வழிபடாமல் விட்டு விடுவார். இருவரும் ஒன்றாக அமர்ந்தி -ருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபம டைந்த பார்வதி, முனிவரே!

சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர், என சாபமிட்டார்.
இதையறிந்த சிவன், நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார்.
பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கவுரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார்.

(இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது).
அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவ பெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தாயார் பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார்.

இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார்.,

பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்து கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார். மீதி நேரத்தில் சாதாரணமான லிங்கத்தை வைத்து விடுங்கள் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram