நெல்லை விளாத்திகுளம் புதூருக்கு பக்கத்தில் உள்ளது ரெட்டிப்பட்டி நெல்லை மாவட்ட மக்களால் ரெட்டிப்பட்டி சாமிகள் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் இந்த சித்தர் பில்லி சூனியம் பேய் பிசாசு போன்ற எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்குள் இவர் காலடி எடுத்து வைத்து விட்டால் போதும் உடனே துர்சக்திகள் விலகி ஓடிவிடும் அவரது இந்த அமானுஷ்ய சக்திகளால் குணமடைந்தோர் ஏராளம் நீண்ட தாடி தீட்சண்யமான பார்வை வெள்ளைவேட்டி இவைகள்தான் இச்சித்தரின் அடையாளம் அதிகாலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து நெற்றி நிறைய விபூதி பூசிக் கொண்ட கோலத்துடன் நடக்க ஆரம்பித்து பொழுது புலர்வதற்குள் அந்த ரெட்டிப்பட்டி கிராமம் முழுவதுமாக சுற்றி ஒரு வலம் வந்து விடுகிறார்.
இவர் அப்படி இவர் புறப்பட ஆரம்பிக்கையிலேயே தன் எதிரே சந்திக்கப்போகும் நபர்கள் யார் என்பதையும் அவர்களது பிரச்சினைகளை பற்றிய விஷயங்களையும் முன்னமே தெரிந்து கொள்வார் அன்று மதுரை வடக்கு மாசி வீதியில் இருந்த ஒரு மிராசுதாரரின் இல்லம் வீட்டின் வாசற்படியில் சித்தர் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியில் வாசற்படி மேல் இருந்த அந்த மரத்துண்டு டமாலென்று கீழே விழுந்து உடைந்து போனது இக்காட்சியைக் கண்டு அவருடன் வந்த சீடர்களும் மிராசுதார் குடும்பமும் திகைத்துப் போய் நிற்க சுவாமிகள் மேலே வாசற்படி விட்டத்தை தன் அனல் கக்கும் பார்வையில் கூர்மையாக பார்த்தார் மரியாதையாக இங்கிருந்து போய்விடு என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த போது மேலிருந்து அந்த சத்தம் மிக தெளிவாக கேட்டது அருகிலிருந்தோர் அனைவரும் அடங்கிப் போய் நிற்க நீ சொன்னால் கேக்க மாட்டாய் உன்னை விரட்டினால்தான் வழிக்கு வருவாய் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று அவர் தன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சிறு பையிலிருந்து திருநீறை எடுத்து ஏதோ முணுமுணுத்துக் மேலே தூவினார்.
அடுத்த வினாடி அந்த இல்லத்தில் இருந்த ஏதோ ஒரு அறையில் கண்ணாடி ஒன்று நொறுங்கி விழுந்தது சற்று நேரத்துக்குப் பின் சாந்தமடைந்து சித்தர் புன்னகைத்தபடி உள்ளே நுழைய அனைவரும் அவரைப் பின்தொடர்ந்து வீட்டின் நடுகூடத்திற்கு வந்தனர். கூடத்திற்கு வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து ரெட்டிப்பட்டி சித்தர்களுக்கு ஏதோ ஒன்று உறைத்தது.
மிராசுதாரரின் மகனை நோக்கிய சித்தர் நீ கூப்பிட்டால் அடுத்த நிமிடம் உன் குரலுக்கு மதிப்பு கொடுத்து உங்கள் மனைவி வருவாங்களா என்றார் முடியாது சாமி 2 மாதங்களாக கால்கள் இரண்டும் செயலிழந்து படுத்த படுக்கையாக கிடக்கும் அவளால் எப்படி வர முடியும் என்று கண்ணீருடன் கூறியவரை அன்புடன் பார்த்தார் சித்தர் ஏன் முடியாது நான் வரவழைக்கிறேன் உங்கள்குரலுக்கே நான் வரவழைக்கிறேன் என்றவாறு அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார் அருகிலிருந்த தன் சிஷ்யனின் காதில் ஏதோ கூற அவன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான் அவன் உள்ளே நுழைந்த அடுத்த நொடியில் வீட்டில் இருந்து நெருப்பு எரிவதை கண்டு பயந்து உள்ளே நுழைய போன மிராசுதாரையும் மகனையும் வேண்டாம் என்று சைகை செய்து மனைவியை மட்டும் கூப்பிடு என்று பார்வையால் சித்தர் சம்மதம் தர தன் மனைவியை பெயரிட்டு அழைத்து கதறினான் அடுத்த வினாடி அந்த ஆச்சரியம் நடந்தது அதுநாள் வரை படுத்த படுக்கையாக கிடந்த அந்த பெண் வாசல் கதவை மெல்ல பற்றி தடுமாறிக் கொண்டு ஓடிவந்து தன் கணவன் முன்பாக சரிந்து விழ தன் மனைவியை அப்படியே பற்றிக்கொண்டு மிராசுதாரரின் மகன் ஆனந்தத்துடன் சித்தரை நோக்கி கரம் கூப்பித் தொழுதார் தான் எப்படி இங்கே வெளியே வந்து சேர்ந்தோம் என்ற உணர்வு எழ தன் நிலைமையை புரிந்து கொண்டாள் அந்த பெண்மணி அவளும் தன் கணவனும் சேர்ந்த சித்தரை கையெடுத்து வணங்கினாள் கணவன் மனைவி இருவரையும் ஆசீர்வதித்து சித்தர் தன் இடுப்பில் வைத்திருந்த திருநீற்றால் சிறிது அள்ளிக் கொடுத்து விட்டு காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு இதனை பூசிக் கொள்ளுங்கள் இரண்டு வாரத்திற்குள் நீங்கள் இன்னும் திடமாக நடக்க ஆரம்பித்து விடுவீர்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு திருச்சி மாவட்டம் குளித்தலை நோக்கி பயணமானார் தமது அடுத்த வேலையை கவனிக்க இதேபோல் இன்னொரு முறை திருக்கோவிலூரை அடுத்த அனந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரின் உடல் அனலாய் கொதித்தது நாடி பார்த்து தெரிந்து கொண்ட சித்தர் அவருக்கு அருகிலிருந்த கிணற்று தண்ணீரை குடிக்கும் படி சொல்ல பெரியவரின் உடல் இன்னும் அனலாக கொதித்தது இது கண்டு புன்னகைத்த சித்தர் இவரை விடியற்காலை நாலு மணிக்கு பச்சை தண்ணீரில் குளிக்க வையுங்கள் எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டார் இதை கேட்டு அங்கிருந்தவர்களுக்கு பெருத்த கோபம் ஏற்கனவே இவர் ஜன்னியில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார் இவருக்கு குடிக்க யாராவது கிணற்று நீரை கொடுப்பாங்களா இதுல வேற காலையில பச்சை தண்ணியிலே குளிக்கணுமா வேறு வினையே வேண்டாம் என்று அங்கிருந்தவர்கள் சித்தரை திட்ட தொடங்கிவிட்டனர்
சித்தரின் மீது அசையாத நம்பிக்கை வைத்திருந்த அந்த பெரியவரின் அண்ணன் மகனும் அது பற்றி எதுவும் கவலை படாமல் பெரியவரை விடியற்காலையில் அழைத்துச்சென்று குளிப்பாட்ட அடுத்த நொடியில் பெரியவரின் உடம்பில் இருந்து சூடு அத்தனையும் பறந்து விட அவராகவே தண்ணீரில் குளிக்க ஆரம்பித்தார் குளித்து முடித்தவுடன் பூஜை அறைக்கு சென்று விபூதியை இட்டுக் கொண்டு வெளியே வந்தவர் சித்தரை தேடிய போது அங்கே ஒரு பாறையின் மீது அமர்ந்து கொண்டிருந்த சித்தர் அவர்களது உணர்வுகளை புரிந்து கொண்டார் அவர் அந்த பெரியவரை பார்த்து புன்னகைத்தார் அதில் ஓராயிரம் அர்த்தங்கள் நிறைந்திருந்தன 4 மணி முதல் 5 மணிக்குள் எழுந்து குளிர்ந்த நீரில் குளிப்பது திருநீறு பூசி இறைவனை வணங்குவது நோய் நொடி இருந்தாலும் மருந்து மாத்திரை எதுவும் உண்ணாமல் திருநீறு மட்டுமே உண்ணுவது சூது களவு பொய் சிந்தனை போன்ற பஞ்சமா பாதகங்களை தவிர்ப்பது போன்றவைகளை மக்களுக்கு அறிவுறுத்தி வந்தவர் சுவாமிகள் இந்த ரெட்டிபட்டி சுவாமிகளின் ஜீவசமாதி விளாத்திகுளம் அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமத்தில் உள்ளது.