★வாலையை பணியாமல் சித்தராக முடியாது!
★அவளை யறியா அமரரும் இல்லை
★அவளின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
★அவளின்றி ஐவரால் ஆவதொன் றில்லை
★அவளின்றி யூர் புகு மாறறி யே னே”
★அவள் – சக்தி – வாலை – தாய் – ‘உ’ இடது மணி ஒளி! சக்தியை அறியாத தேவர் யாருமில்லை? ஏன் தெரியுமா? சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும்!
★அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அறியாமலிருப்பரா?
★ சக்தியில்லையேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாதே!
★உடலில் சக்தி இருந்தால் தானே நடமாட முடியும்!
★பின்னரல்லவா தவம் செய்வது?! ஆக சக்தி இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது!
★சக்தி – வாலை துணையின்றி பஞ்சகிர்த்தியம் புரியும் மூர்த்திகளாலும் ஒன்றும் செய்ய இயலாது!
★பஞ்ச பூதங்கள் இயங்க சக்தி வேண்டும். நம் புலன்கள் இயங்க சக்தி வேண்டும்!. ஏன்? சிவத்தோடு சக்தி இருந்தாலே இயக்கம்! எங்கும் சிவமயம்! சிவம் சக்தி மயம்!
★அவளே வாலை! தாய்!
★அந்த தாய் வாலை அருள் தந்து அமுதம் ஊட்டி அவள் ஆசி பெற்றே சிவன் இருக்கும் ஊருக்கு போக முடியும்!
★சிவனருள் பெற முதலில் சக்தியருளே வேண்டும்!
★நம்மை கருவாய் வயிற்றில் சுமந்து பெற்ற தாயை விட கோடி கோடி பங்கு நம்மை அன்புகாட்டி அமுதூட்டி அரவணைபவள் வாலைதாயே!
★நமது உடலுக்கு சக்தி யூட்டிய தாய்!
★உலக அன்னை ! அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி !
★அவளை அறியாத பேர்க்கு மாயை! மகாமாயை அவளே! அறிந்து பணிந்தவருக்கு அமுதூட்டும் அன்னை!
★வாலையை பணியாமல் யாரும் தேவராக முடியாது! சித்தராக முடியாது! ஞானியாக முடியாது! சிவமே சக்தியை தன்னோடு சரிபாதி யாக கொண்டார் எனில் சக்தியின் மகத்துவம் புரியவேண்டாமா?
★”சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
செம்பவள மேனி கொண்ட சக்தியவள் வாலையே!
முக்கடலும் சங்கமிக்கும் முக்தி யருள் தலமாம்
கன்னியவள் குமரி யிலே கண்டு கொள் பணிந்தே”
“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் ஓங்குக.”
இன்புற்றிருக்க ஈசனுடன் உறைந்ந அன்னையை சரனடைவோம்
சிவ சக்தி போற்றி.
அம்மா தாயே சரணம்
வாலையைக்கும்பிட்டு சித்தரானார்..
வாலைக்கொத்தாசையாய் சிவகர்த்தரானார்…
வாலைக்கு மேலான தெய்வமில்லை….
கொங்கண சித்தர் …
தாயிர் சிறந்த கோயிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
சக்தி இல்லையேல் சிவம் இல்லை
அவளை அறிய முதலில் ஐவரை அறிய வேண்டும்
இருப்பிடம் உள்நாக்கு
இயக்குவது காற்று
கன்னி வாலை பெண்ணாகி தாயுமாகி உயர்ந்து நிற்கும் உன்னத தாய்மை பொருந்திய உண்மை தெய்வம்