
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஒன்றியத்தில் கொல்லங்குடியில் அமைந்துள்ளது. வெட்டுடையார் காளியம்மன் கோவில்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொள்ளங்குடியை அடுத்த அரியாக்குரிச்சியில் அமைந்துள்ளது வெட்டுடையார் காளியம்மன் கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த தலமாகும். பொதுவாக காளி அம்மன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கிதான் இருப்பாள். ஆனால் இந்த கோவிலில் மேற்கு நோக்கி வெட்டுடையார் காளியம்மன் 8 கரங்களுடன் அருள் பாலிக்கிறார். அதாவது, அய்யனார் கிழக்கு நோக்கி இருக்க எதிரே சற்று தெற்கு பக்கத்தில் மேற்கு நோக்கிய நிலையில் காளியம்மன் உள்ளார்.
காளியின் தோற்றமோ காண்பவரை கண்களில் பக்திமயமாக்கி நம்பிக்கை யூட்டும் வகையில் தனது வலது காலை ஊன்றி இடது காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். இவள் வைத்திருக்கும் கத்தி, கேடயம் தீவினைகளை வேரோடு அகற்றுவேன் என்று மக்களுக்கு முன் மொழிவது போல் அமைந்திருக்கும். அம்மனைக் காணும் காட்சி நேரம் காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை. பௌர்ணமி இரவு 10.00 மணிவரை.
சிறப்புத் தகவல்கள்
வலது காலை மடித்து அமர்ந்து எட்டுக் கைகளுடன் கண் கொள்ளாக் காட்சியாக மிளிரும் அம்மன் தீவினைகளான கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண் பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர். செய்யாத தவறுக்கு தண்டனை க்கு உள்ளானோர் இவர்களெல்லாம் தங்களுக்கு நீதி கிடைக்க காசு வெட்டிப் போடுவார்கள். ‘காசு வெட்டிப் போட்டு விடு காளியருள் காளியருள் நேரில் நின்று பேசும் தொல்லை துயரங்களைத் தள்ளு தூரோடு கிள்ளு. என்பது போல் காளியின் பார்வை அநியாயங்களை அம்பிகை தட்டிக் கேட்பாள், குற்றவாளிகளைத் தண்டிப்பாள்.
தலப் பெருமை
சங்கா அபிஷேகம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்து தினங்கள் நடைபெறும். 108 சங்காபிஷேகம் நடைபெறும். ஆடிப்பெருக்கன்று பூச்சொரிதல் விழாவும் நடைபெறுவது இத்தலத்திற்கே பெருமை சேர்ப்பதாகும். இராணி வேலுநாச்சியார் இக்கோவிலுக்கு வழங்கிய 20 கிலோ பொன்னைக் கொண்டு கோவிலின் கொடி மரம் தங்கக் குதிரை வாகனம் இத்துடன் கோவில் தேர்த்திருப்பணியும் செய்யப்பட்டது என்பது பெருமைக்கு பெருமை சேர்ப்பதாகும். இங்குள்ள தெப்பத்தில் குளித்தால் பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். இங்கு பிரார்த்தனைகள் கூடுதல் பிரார்த்தனைகளும் நடைபெறும்.
நடைபெறும் விழாக்கள்
ஆடிப்பெருக்கு, கந்த சஷ்டி, தைப் பொங்கல், சிவராத்திரி, விநாயகர் பூஜை, மார்கழி பூஜை, பௌர்ணமி பூஜை, ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடைபெறும். இது சுற்றுலா தலமாக இருப்பதால் வெள்ளிக்கிழமைக ளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அன்னையின் அருளைப் பெற, “அம்மனின் காட்சியே அருள்வாக்கு ஆனந்தத்தைப் பெறும் திருவாக்கு.