
இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்துள்ளது. இங்கு மிகப் பெரியகோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான
கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால்
கோட்டை பைரவர் எனப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி
வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது
நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.
பொன்னமராவதி புதுப்பட்டி:
இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்சனை,
தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர
நற்பலனை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.