1) ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது அந்த 18 கருவிகள்….
வில்
வாள்
வேல்
கதை
அங்குசம்
பரசு
பிந்திபாவம்
பரிசை
குந்தம்
ஈட்டி
கை வாள்
முன்தடி
கடுத்தி வை
பாசம்
சக்கரம்
ஹலம்
மழு
முஸலம்
ஆகிய 18 போர்க் கருவிகள் ஆகும்….
2) பதினெட்டுப் படிகளை
இந்திரியங்கள் ஐந்து ( 5 )
புலன்கள் ஐந்து ( 5 )
கோசங்கள் ஐந்து ( 5 )
குணங்கள் மூன்று ( 3 )
என்று கூறுகிறார்கள் அவை முறையே
இந்திரியங்கள் ஐந்து ( பஞ்சேந்திரியம் ) :
கண்
காது
மூக்கு
நாக்கு
கை கால்கள்
புலன்கள் ஐந்து ( ஐம்புலன்கள் ) :
பார்த்தல்
கேட்டல்
சுவாசித்தல்
ருசித்தல்
ஸ்பரிசித்தல்
கோசங்கள் ஐந்து ( பஞ்ச கோசங்கள் ) :
அன்னமய கோசம்
ஆனந்தமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
ஞானமய கோசம்-
குணங்கள் மூன்று ( த்ரி குணங்கள் ) :
ஸத்வ குணம்
ரஜோ குணம்
தமோ குணம்
இந்த பதினெட்டையும் கட்டுப் படுத்தியோ ஜெயித்தோ வாழ பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும்
3) 18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்*
மெய்
வாய்
கண்
காது
மூக்கு
சினம்
காமம்
பொய்
களவு
சூது
சுயநலம்
பிராமண
க்ஷத்திரிய
வைசிய
சூத்திர
ஸத்ய
தாமஸ
ராஜஸ
என்ற 18 வகை குணங்களை தாண்டினால் பகவான் ஐயப்பனைக் காணலாம்*
4) கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்களை குறிப்பதுதான் 18 படிகளாகும்
18 படிகளில் வாஸம் செய்யும் தேவதாக்கள்…
ஒன்றாம் திருப்படி : சூரிய பகவான்
இரண்டாம் திருப்படி : சிவன்
மூன்றாம் திருப்படி : சந்திர பகவான்
நான்காம் திருப்படி : பராசக்தி
ஐந்தாம் திருப்படி : அங்காரக பகவான்
ஆறாம் திருப்படி : முருகன்
ஏழாம் திருப்படி : புத பகவான்
எட்டாம் திருப்படி : விஷ்ணு
ஒன்பதாம் திருப்படி : வியாழ ( குரு ) பகவான்
பத்தாம் திருப்படி : பிரம்மா
பதினொராம் திருப்படி : சுக்கிர பகவான்
பனிரெண்டாம் திருப்படி : இலட்சுமி
பதிமூன்றாம் திருப்படி : சனி பகவான்
பதிநான்காம் திருப்படி : எம தர்ம ராஜன்
பதினைந்தாம் திருப்படி : இராகு பகவான்
பதினாறாம் திருப்படி : சரஸ்வதி
பதினேழாம் திருப்படி : கேது பகவான்
பதினெட்டாம் திருப்படி : விநாயகப் பெருமான்
இதில் கவனிக்கப்பட வேண்டியவை ஒற்றைப்படை வரிசையில் நவக்ரஹ தேவதாக்களும் இரட்டைப்படை வரிசையில் தெய்வக் குடும்பமும் வாஸம் செய்வதாக ஐதீகம்…
எனவேதான் படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது.
ஓம் நமசிவாய நமஹா…
அவனருளால் அவன்தாள் வணங்குவோம்….
🙏திருச்சிற்றம்பலம்🙏