fbpx

12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய சிவன்

‘சிவாய நம’ என்கிற நாமத்தை உச்சரித்தாலே பாவங்கள் நீங்கி விடுவதாக புராணங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அத்தகைய வலிமை வாய்ந்த சிவ மந்திரம் உச்சரிக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நமக்கு பக்தி பரவசம் வந்து விடுகிறது. 12 ராசியில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்களுக்கு உரிய சிவ பெருமானை வழிபடுவதன் மூலம் முன்ஜென்ம பாவ வினைகளும், இந்த ஜென்மத்தில் நீங்கள் செய்த பாவங்களும் கூட கலைந்து விடும் என்பது ஐதீகம். உங்கள் முழு மனதார செய்த பாவத்திற்கு பரிகாரம் தேட நினைத்தால்! உங்கள் ராசிக்கு உரிய சிவனை இப்படி வழிபடுங்கள். எந்த ராசிக்காரர்கள்? எந்த சிவனை வழிபட வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். மேஷம் மேஷத்தில் பிறந்தவர்கள் திருவண்ணாமலையில் காட்சி தரும் அண்ணாமலையாரை ஒருமுறையாவது வணங்கி வந்தால் நல்லது நடக்கும். நீங்கள் பொதுவாக மலை மேல் அமைந்துள்ள சிவபெருமானை வணங்கி அபிஷேகம் செய்தால் நன்மைகள் நடைபெறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

ரிஷபம் ரிஷபத்தில் பிறந்தவர்கள் உங்களுடைய ராசிக்கு திருவாரூர், திருவானைக்காவல், கங்கை கொண்ட சோழபுரம் இந்த ஊர்களில் இருக்கும் சிவபெருமானை ஒரு முறையாவது சென்று வணங்கி வந்தால் நல்லது நடக்கும். அப்படி அங்கெல்லாம் செல்ல முடியாதவர்கள் உங்களுக்கு பிடித்த சிவாலயங்கள் சென்று பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்து சிவனுக்கு பூஜை பொருட்களை கொடுத்தால் நன்மை உண்டாகும்.

மிதுனம் மிதுனத்தில் பிறந்தவர்கள் சிதம்பரம், ஸ்ரீ காலஹஸ்தி, திருச்செங்கோடு போன்ற தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும். அங்கெல்லாம் செல்ல முடியாத பட்சத்தில் உங்களுக்கு பிடித்த சிவாலயம் சென்று மோர் அல்லது கரும்புச்சாறு படைத்து அபிஷேகம் செய்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.

கடகம் கடகத்தில் பிறந்தவர்கள் உங்களுடைய ராசிக்கு வேலூரில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர், திருவானைக்காவல், திருக்கடையூர் போன்ற ஊர்களில் இருக்கும் பிரசித்தி பெற்ற சிவாலயங்கள் சென்று வழிபட்டு வரலாம். அப்படி வழிபட முடியாதவர்கள் பிடித்த சிவாலயங்களுக்கு சென்று பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து பூஜைப் பொருட்களும், பாலும் கொடுத்து வந்தால் நன்மைகள் உண்டாகும்.சிம்மம் சிம்மத்தில் பிறந்தவர்கள் சிவனுக்கு மிகவும் விருப்பமானவர்கள். நீங்கள் திருவண்ணாமலை அல்லது சிதம்பரம் போன்ற இடத்தில் அமைந்திருக்கும் எம்பெருமானை வழிபட நல்லது நடக்கும். அங்கு செல்ல முடியாதவர்கள். பாலில் சிவப்பு சந்தனம் கலந்து சிவனுக்கு அபிஷேகம் செய்ய நன்மைகள் உண்டாகும்.

கன்னி கன்னி ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்கு உரிய காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் மற்றும் மதுரை மீனாட்சி சொக்கநாதரை வேண்டி வணங்கினால் நல்லது நடக்கும். முடியாதவர்கள் பிடித்த சிவாலயத்தில் பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்து சிவனுக்கு தேவையான பூஜை பொருட்களை தானம் செய்யலாம்

துலாம் துலாம் ராசியில் பிறந்தவர்கள் அருகில் இருக்கும் சிவாலயத்தில் அடிக்கடி பாலாபிஷேகம் செய்து வர நன்மைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு ஸ்ரீ காளஹஸ்தியில் வீற்றிருக்கும் காளத்தி நாதரையும், மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயம், சிதம்பரத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையும் வழிபட நிறைய நன்மைகள் உண்டாகும்.

விருச்சிகம் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் உங்களுக்கு பிடித்த அருகில் இருக்கும் சிவாலயங்களுக்கு அடிக்கடி சென்று பூஜை பொருட்களுடன், வெல்லம் கலந்த நீரை நிவேதனம் செய்து வர நல்லது நடக்கும். உங்கள் ராசிக்கு வேலூர் ஜலகண்டேஸ்வரர் மற்றும் திருவானைக்காவலில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட அதிர்ஷ்டம் பெருகும்.

தனுசு தனுசு ராசியில் பிறந்தவர்கள் சிவாலயங்களில் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தாலே பெரும் பலன் கிடைக்கும். மேலும் உங்கள் ராசிக்கு திருவண்ணாமலை மற்றும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபடுவது. அதிர்ஷ்டத்தை தரும்.

மகரம் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருக அருகில் இருக்கும் சிவாலயங்களில் பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்து, பூஜை பொருட்களை மற்றும் அபிஷேகத்தை செய்வதன் மூலம் நிறைய நன்மைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு காஞ்சியில் வீற்றிருக்கும் ஏகாம்பரேஸ்வரரை வணங்கி வந்தால் நல்லது நடக்கும்.
கும்பம் கும்ப ராசியில் பிறந்தவர்கள் உங்களுடைய ராசிக்கு ஸ்ரீ காளஹஸ்தியில் வீற்றிருக்கும் காளத்தி நாதரையும், சிதம்பரம் கோவிலில் இருக்கும் சிவபெருமானையும் வணங்கி வந்தால் நல்லது நடக்கும். அவ்வாறு முடியாத பட்சத்தில் சிவாலயங்களுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது யோகத்தை தரும்.

மீனம் மீன ராசியில் பிறந்தவர்கள் ஜலகண்டேஸ்வரர், வேதாரண்யத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவில் மற்றும் திருவானைக்காவலில் வீற்றிருக்கும் எம்பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும். பிடித்த சிவாலயங்களுக்கு சென்று குங்குமப்பூவுடன் கலந்த பாலில் அபிஷேகம் செய்வது, பஞ்சாட்சர மந்திரம் உச்சரிப்பது நன்மைகளை உண்டாக்கும்.

எந்த ராசியில் பிறந்தாலும் அருகிலிருக்கும் சிவாலயங்களில் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தால் வீட்டில் இருக்கும் கஷ்ட நிலை மாறும் என்பது ஐதீகம். சிவாலயங்களில் பூஜை பொருட்கள் வாங்கிக் கொடுப்பதும், அபிஷேகங்கள் செய்வதும் அதிர்ஷ்டத்தை பெருகச் செய்யும். உங்களுக்கு துன்பம் வரும் பொழுது எல்லாம் ‘ஓம் நமச்சிவாய’ என்று தொடர்ந்து 108 முறை உச்சரித்தால் வந்த துன்பம் எல்லாம் பறந்து ஓடுவதை நீங்களே பார்க்கலாம்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram