கட்டுரை ஆசிரியர் – சுரேஷ்குமார்

- கலிக்கம்ப நாயனார்
தமக்கு உரிமையான
நல் ஒழுக்கத்தில் நின்று
உயர்ந்த தொன்மையான மரபில் இல்லற நெறியில்
தரும நெறியோடு வாழும் குடிமக்கள் தழைத்தோங்கும் ஊர் பெண்ணாகடம் எனும் ஊர்
மேகங்கள் வந்து தங்குமளவு உயர்பூஞ்சோலைகளுடன்
உலகமே பெருமை கொள்ளும் தொன்மையான ஊர் பெண்ணாகடம் எனும் ஊர்
அந்தத் தலத்தில் வணிகர் குலத்தில் தோன்றினார் கலிக்கம்பர்;
தூங்கானை மாடத்தில் எழுந்தருளியுள்ள
சிவபெருமானின் திருவடிகளை
பற்றிக்கொண்டு சிவத்தொண்டு செய்யும் கலிக்கம்பர் சிவப்பற்று தவிர
வேறொரு பற்று எதுவுமிலாதவர்
கலிக்கம்பர்
சிவபெருமானின் அடியார்களுக்கு
திருவமுது படைப்பதே தனது பிறவிப் பயனாக கருதி வந்தார்.அவர் அடியவர்கள் விரும்பும் கறிவகைகள் நெய் தயிர் இனிய கட்டியெனக் காய்ச்சிய பால் தேனினும் இனிய கனிகள்
அனைத்தும் இன்பமுற அளிப்பார். மேலும் அடியார்களுக்கு திருநிதியும் அளித்து மகிழ்வார்
அந்தவிதமாக திருத்தொண்டு புரிந்து வரும் நாளில் ஒரு நாள்
நிலைபெற்ற தனது திருமனையில் வீட்டில் அமுது செய்ய உணவு உண்ணுவதற்காக வந்த தொண்டர்களையெல்லாம்
தொன்மையான முறைப்படி
அமுது உண்ண வைத்தார்
அதற்குமுன்
அடியார்களது திருவடிகளையெல்லாம்
நாயனார் நீரால் சுத்தம் செய்வார் அப்போது
மனைவியார் இல்லம் முழுதும் சுத்தம் செய்தார் சுவையான திருஅமுதும் கறிஅமுதும்
புனிதமான தண்ணீருடன்
அருந்தும்விதத்தில் உள்ள பிற பொருள்களையும் எடுத்து வைத்தார் பெரும் தவமுடைய
அடியார்களின் திருவடிகளையெலாம்
விளக்க வரும்போது
முன் நாட்களில் தொண்டு செய்யும் கலிக்கம்பர் வீட்டில் ஏவல் பணியை செய்த ஒருவர்
ஏவல் பணியை வெறுத்துச்சென்ற அவர் பின்னொரு நாளில்
எலும்பையும் பாம்பையும் அணிந்த எம்பிரானின் அடியவராகியிருந்தார்;
அவர் அங்குவந்த அடியார்களுள் ஒருவராக
திருவேடம் தாங்கி வந்து தோன்றினார்அவரை பார்த்ததும் கலிக்கம்பரின் மனைவி பாத பூஜை செய்வதற்கு கரக நீர் பார்க்காமல் நின்றார்
முன்பு நம் ஏவலைசெய்யாமல் சென்றது இவர்தான் என அன்பு மனைவியார் நினைக்கிறார் போலும் அதனால்தான் மனைவியின் மலர்க்கரங்கள் அடியார்களின் பாதம் சுத்தம் செய்ய வார்க்கும் கரக நீர் வார்க்க
சில கணங்கள் தாமதப்படுத்துகின்றன
என்று கரிய கூந்தல் கொண்ட மனைவியைப்பார்த்து
தன் மனதில் எண்ணிக்கொண்டார்
முதன்மைபெற்ற திருத்தொண்டரான கலிக்கம்பர்.
மணம்கமழும் கொன்றை முடியாராகிய சிவபெருமானின் அடியார்கள் முன்பாக அவரது
முன்நாள் நிலையை எண்ணி
நீர்வார்க்காமல் விட்டாள்” என
மனதில் எண்ணிக்கொண்டு அவர் கையில் உள்ள கரக நீரை பெற்றுக் கொண்டு
மனைவியின் கையை
வெட்டித் துண்டாக்கினார்
கரக நீரை
தாமே அடியாருக்கு வார்த்து
அடியார்களின் காலினைச் சுத்தம் செய்தார்
அவ்வாறு காலில் நீர்விட்டு விளக்கிய பின்பு
அடியார்கள் அமுது செய்வதற்கான
மற்ற செயல்களையும் தாமே செய்தார். மனைவிக்கு நிகழ்ந்தது பற்றி சிறிதும் மனதில் எண்ணாமல்
அத்தொண்டரை
அமுது உண்ணவும் செய்தார்.
அளவிலாத பெருமையுடைய திருத்தொண்டின் வழியே நடந்து
கழுத்தில் நஞ்சையுடைய
இறைவரின் திருவடிநிழலில்
அடியார்களுடன் கலந்தார் கலிக்கம்பர்
குளிர்ந்த பெருகிய நீர் பொருந்திய கடலில் எழுந்த நஞ்சையுண்ட இறைவரின் அடியவரது திருவேடத்திற்குரிய பெருமை இதுவென்று உணராத மனைவியாரின் கையை வெட்டிய கலிக்கம்ப நாயனாரின் மலர் போன்ற அடிகளை வணங்கி, சிவகணங்களின் தலைவரான சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்து எவ்வுலகத்தும் விளங்கும் பெரும் பத்திமையுடைய அன்பரான கலிய நாயனாரின் பெருமையை உரைப்பாம்.
கலிக்கம்ப நாயனார் புராணம் முற்றிற்று.
பெயர்:
கலிக்கம்ப நாயனார்
குலம்:
வணிகர்
பூசை நாள்:
தை ரேவதி
அவதாரத் தலம்:
திரு பெண்ணாடம்
முக்கிய தலம்:
திரு பெண்ணாடம்
இறைவன் திருப்பெயர்:
ஸ்ரீ சுடர்க்கொழுந்தீஸ்வரர்
இறைவி திருப்பெயர்:
ஸ்ரீ ஆமோதனம்மாள்
மேற்கோள்கள்
- சுந்தரமூர்த்தி நாயனார் தனது திருத்தொண்டத் தொகையின் ஏழாவது பாடலில் 44வது நாயன்மார்கள் கலிக்கம்ப நாயனார் பின்வருமாறு வரிசை படுத்தி உள்ளார்
கைதடித்த வரிசிலையான் கலிக்க்கம்பன் கலியனுக்கும் அடியேன்
2.சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தின் பாடல் எண் 4012 முதல் 4021 வரை 10 பாடல்கள் பாடியுள்ளார்
திருச்சிற்றம்பலம்
சிவார்ப்பணம்