fbpx

ஆன்மீக கேள்வி பதில் 2

ஸ்ரீ சக்கரத்தின் மகிமை

🕉️ ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகளால் ஆனவை என்று எண்ணி விடக் கூடாது. உயர் அட்சரக் கணிதம் மற்றும் சேஷாத்திரக் கணிதம் மட்டுமின்றி விஞ்ஞான அறிவு பூர்வமாக பெற்றவர்கள், மற்றும் இத்துறைகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர்களால் தான் இந்த ஸ்ரீ சக்கரத்தை வரைய முடியும். அப்போது தான் முழுமையான பலன் பெற முடியும்.

🕉️ஒன்பது கட்டுகள்கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் தான் அம்பாள் உறையும் இடமாகும். சாதாரண கோடுகளும் முக்கோணங்களும் தான் நம் கண்களுக்கு தெரியும். ஆனால் இதில் தான் அனைத்து சக்திகளும் அடங்கியிருக்கின்றன.

🕉️ ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது சுற்றுக்கள் இருக்கின்றன. இவற்றின் நடுவில் திரிகோணத்தின் மத்தியில் தான் ஸ்ரீ சக்கர நாயகி என்று போற்றப்படும் பராசக்தியானவள் பிந்து என்கிற புள்ளியாகக் காட்சித் தருகிறாள்.

🕉️சப்தத்திற்கும் ஒரு உருவம் உண்டு. எனவே, ஒலிக்கும் ஒலிகள் அனைத்தையும் முறையாக ஒழுங்குப் படுத்தி சீராக்கி – வடிவமாக ஓம் என்பது தான் ஸ்ரீ சக்கரமானது.

🕉️சக்தி வழிபாட்டின் மிக முக்கியமான பரிகார தேவதை கள் 64 (அறுபத்து நான்கு யோகினிகள்). இது அன்னையிடம் இருந்து தோன்றிய அபரிதமான சக்திகளாகும். சஷ்டி என்றால் 6 (ஆறு) சதுர் என்றால் 4 (நான்கு) இவ்வாறாக 64 கோடி யோகினியரால் பூஜிக்கப்படுபவள்.குல தெய்வம் தெரியாதவர் கள் ஸ்ரீசக்கர வழிபாடுசெய்தல் சிறப்பு.

🕉️ மனிதன் தன்னை கட்டுப் படுத்தி சித்தபுருஷாக வளர்ந்து அன்னையின் அருளை உணரும் ஆன்மீக நிலையின் முடிவே, ஸ்ரீசக்கர தத்துவமாகும்.

🕉️ஸ்ரீசக்கரத்தின் மறுபெயரே, ஸ்ரீசக்கரராஜம் என்ற சிறப்பு பெயராக விளங்குகிறது.

🕉️சக்கரத்தின் கீழாக நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் (5), மேல் நோக்கிய முக்கோணங்கள் நான் கும் (4), சிவாத்மகம் என்பர்.

🕉️ஸ்ரீசக்கர பூஜை செய்யும் உபாசகன் (சாதகன்) லௌகீக சுகானுபவங்களை அடைவதோடு ஞானத்தை கடைபிடிப்பதின் மூலம் விருப்பு, வெறுப்பு, புலன்கள் இவற்றை வென்று மோட்ச சாம்ரா யத்தை அடைகிறான்.

🕉️பிரதி மாத பவுர்ணமியன்று இச்சக்கரத்திற்க்கு காஞ்சி காமாட்சி தலத்தில் நள்ளிரவில். திருப்போரூர் அருகில் செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலயம்.நங்கநல்லூர் ராஜேஸ்வரி ஆலயம் நவாவரண பூஜை. தரிசனம் மிகவும் விசேஷமானது. தரிசித்தல் விஷேசமானது

🕉️நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். இது தவிர 51 கணேசர்கள், 9 கிரகங்கள், அஸ்வினி முதலான 27 திதிகள் 15 நட்சத்திரங்கள், 7 யோகினிகள், 12 ராசிகள், 51 பீட தேவதைகள் என்று 157 தேவதைகளின் ரூபமாக அம்பிகை ஸ்ரீசக்கரத்தில் வழிபடப்படுகிறாள்.

🕉️ஸ்ரீசக்கரம் என்பது வரைபடம். மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவ மாகவும் செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

🕉️சவுந்தர்ய லஹரி, லலிதா சகஸ்ரநாமம், தேவி புஜங்கம், பவானி புஜங்கம், அபிராமி அந்தாதி. தேவிபாகவதம், திருமந்திரம் போன்ற நூல்கள் ஸ்ரீசக்கர வழிபாட்டை சிறப்பித்துக் கூறுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram