fbpx

இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பொடுகை விரட்ட வேண்டுமா

பொடுகுத் தொல்லையைப் போக்க வீரியமான, இயற்கையான வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு போக்குவது என்பது பற்றி பார்ப்போம்.

பொடுகுக்கு மிகச்சிறந்த மருந்தாக வெந்தயம் கருதப்படுகிறது. இரண்டு தேக்கரண்டி வெந்தய விதைகளை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை மிருதுவாக அரைத்து வெங்காயச் சாற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை தலையில் ஸ்கால்ப் பகுதியில் படும் வண்ணம் நன்றாக தடவிவிட்டு அரை மணிநேரத்தில் குளித்துவிட வேண்டும்.

கற்றாழையினுள் இருக்கும் வழவழப்பான சாற்றை, வெங்காயச் சாறுடன் கலந்து தலையில் தடவி, ஒரு பத்து நிமிடம் கழித்து நன்றாக கழுவி விட வேண்டும். இது அரிப்பை கட்டுப்படுத்தும்.

பொடுகைப் போக்க, அரைத்த பச்சைப் பயறு பொடியில் வெங்காயச்சாற்றை கலந்து, வாரம் இருமுறை தலையில் தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

புடலங்காய் சாறு பொடுகை நீக்குவதுடன், தடுப்பதற்கும் உதவுகிறது. புடலங்காய் சாற்றை வெங்காய சாறுடன் கலந்து தலையில் தடவிக் கொண்டால் நல்ல பலன் கிட்டும்.

பொடுகு மற்றும் முடி கொட்டும் பிரச்சனைக்கு வெங்காயம் அருமருந்தாகும். வெங்காயச் சாறு தலையில் இருக்கும் நுண்கிருமிகளையும், வெள்ளை செதில்களையும் நீக்குகிறது. மேலும் முடிக்கு சத்துக்களை கொடுத்து, முடியின் வேர்களை பலப்படுத்தி, இரத்த ஒட்டத்தை ஊக்குவிக்கிறது.

வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை முடியின் வேர்களில் படும் வண்ணம் தலையில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும்.

எலுமிச்சை சாற்றை வெங்காயச் சாற்றுடன் கலந்து தடவுவதும் நல்ல பலனைத் தரும். மேலும் இந்த முறையினால் வெங்காயச் சாறு ஏற்படுத்தும் நாற்றத்தை நீக்கும். அரிப்பையும், பொடுகையும் போக்க இந்தக் கலவை உதவுகிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram