fbpx

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள தேங்காய் பூ!!

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேக்காய்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட அதிக சத்துக்கள் உள்ளது.

இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும் அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.

தேக்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.

மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைக்கும். ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சாப்பிடலாம். இதிலுள்ள மினரல் வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது மற்றும் மலச்சிக்கலை குணமாக்கும்.

தேக்காய் பூ இன்சிலுன் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் படியும் கொழுப்பை தேக்காய் பூ கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.

தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க தேங்காய் பூ உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வலர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கும்.

தேக்காய் பூ சிறுநீரக பாதிப்பை குறைக்கிறது. சிறுநீரக தொற்று நோய்களை குணப்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை பெறலாம்.

தேக்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram