fbpx

குமரகுருதாச சுவாமிகள் பாடல்

முதல் மண்டலம்
குமரகுருதாச சுவாமிகள் பாடல் எனும் பெயரிய இந்நூல் 74 பிரபந்தங்களையும், கடவுள் வணக்கச் செய்யுள் 3 கொண்ட பகுதி ஒன்றுடன் கூடிய 1266 பாடல்களை உள்ளடக்கியதாகும். இப்பாடல்கள், சுவாமிகள் அதியிளமை தொட்டுத் துறவு நிலையடையு முன்னர், அதாவது கி.பி. 1894 வரையும், சில துறவுக்குப் பின்னரும் பல்வேறு காலங்களில், பாடியனவாகும்.

சுவாமிகள் முதன் முதல் பாடிய பன்னிரு சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம், “கங்கையைச் சடையிற் பரித்து” எனும் தொடக்கப்பாட்டு, அமரர்கோ எனும் முதல் பிரபந்தத்தில் வந்தாலும், தெய்வப் புலவரான திருவள்ளுவர் புகன்ற, “அகரமுதலஎழுத்தெல்லாம்” எனத் தொடங்கியது போலவே, சுவாமிகளும் தம்முள் அறிவாய் என்றுமுள ஓர் செவ்வேளைச் சிந்தித்து, “அறிவினுக்கறிவான பொருளை”, என “அ”கரத்தை முதலில் வைத்துத் தொடங்கிக் கடவுள் வணக்கப் பாடலாக, மூன்று பாக்களை இயற்றி இந்நூல் முதற்கண் இணைத்துள்ளார்கள்.

அடுத்துவரும் “அமரர்கோ” எனும் பதிகம் முதல் அமிர்தமதி எனும் பதிகமாகிய 52 பதிகங்களைப் பாடி நிறைவு செய்த காலம் கி.பி. 1891 ஆகும். ஈண்டு, இறை ஓர் ஆடல் புரிகிறது. அதாவது, அப்பாவு எனும் குமரகுருதாசருடைய பாடல்களின் இறையாண்மையை உலகினர் உணர வேண்டியோ அல்லது அவர்கள் உய்யவோ, சுவாமிகளின் உள்ளத்தில், பழனிநாதனிடம் செல்ல நாட்டம் பிறக்கிறது. அவர்கள் அதற்காக ஓர் ஆலயம் அமைக்கவில்லை. திருவுருவென ஒன்றும் பிரதிட்டை செய்யவில்லை. அவ்வாறான மூர்த்தம் எதற்கும், அபிடேக, அலங்கார, ஆராதனையொன்றும் நிகழ்த்தவுமில்லை. தாம் இயற்றிய மேற் சொன்ன ஐம்பத்திரண்டு பதிகப் பாடல்களை உள்ளுருக்கத்துடன் ஒருமுறை பாடி முடிக்கின்றார். உடனே, ஆங்கே, ஒளியொன்று தோன்றி, பின்னர் அது மானிட வடிவெடுத்து சுவாமிகள் முன்னர் அது வந்து அச்சுறுத்திப் “பழநிக்குவரக் கட்டளையில்லை, உத்தரவு வரும் வரை வரவொண்ணாது. பொய் புகலேல்” என்று திருவாய் மலர்ந்துமறைந்த சம்பவத்தை உள்ளடக்கிய நூல் இஃது. என்னே, சுவாமிகளின் பாடல்களின் மகிமை!

திரிபங்கி, தசபங்கி, பஞ்சவிம்சதி அதிக தசபங்கி வண்ணம், மடக்கு போன்ற பல்வகைப் பாடல்கள் அடங்கிய நூலும் இதுவே. ஒரே பாடலை 125 பாடலாகப் பாடினார்கள். அம்மகாவிசித்திர விசேட கவியை அன்பர் ஒருவர் வேண்டுகோளின் போரில் 2½ கடிகையுள், சுவாமிகள் துறவு நிலையடைந்த பின்னர்ப் பாடினார்கள்.

இந்நூலில் அடங்கியுள்ள சுவாமிகளின் அருளுரைகளில் சில காண்க:
ஆறெழுத்தானுக்கு மேலாக தெய்வம் கூறும் மார்க்கத்தாரையும், மனிதரைப் புகழ்ந்து பாடும் அதமப் புலவரையும், பசுபாசங்களை ஒப்புக்கொண்டு, பதி எனும் கடவுள் இல்லை என்பவரையும் மதித்திடேன் என்றார்.
பலாபலன் சொல்வது, உலகினர் போரில் பாடல் பாடுவது, இழி உலோகங்களைப் பொன் ஆக்குவது, யோத்தினால் பெற்ற சித்தி தொழில் மாயாவித்தொழில் போன்றவை பொருள் அவாவுற்று உழன்று தியபேய்க் கோலம் ஆகும்.
பெண்ணாசைக்கு வன்மையூட்டுவது உப்பு.
நெஞ்சை அடக்கினால் மூச்சு இயக்கம் நிற்கும்.
பாழ் மனதை அடக்காது பயிலும் வீரம் வீரமன்று.
விஷய உணர்வால் கர்த்தனைக் காணநினைபவர் செயலானது, நரி, கடல் ஆழம் காணத் தன் வாலை விடுவதுயொக்கும்.
இடம்பம், பொறாமை, காமம், மோகம், துவேஷம் முதலிய தீய குணங்களால் கெட்டு அழிந்தவர்களைப் பற்றிக் கூறியுள்ளதைக் கற்காமலிருப்பதுடன் அவற்றை மனதாலும் இயற்றாமல் இருக்கப் பயிலுவதே முறைமையாகும்.
பொய் பேசுவதால், முன்னர் ஈட்டிய தவம் கெடும் என்ற உண்மையை அனைவரும் உணரவே, சுவாமிகள் வாயிலாக நெஞ்சாலும் பொய்புகலேல், யாம் வருக எனக் கட்டளையிடும் வரை பழநிக்கு வரவொண்ணாது என்ற கட்டளை ஏற்ற கி.பி. 1891 வருட சம்பவமும்; காஞ்சீபுரம் ஆடிசன் பேட்டையில் தங்கி, ஊர் திரும்ப யத்தனித்த போது, வெண்ணிற ஆடை, அங்கி, முண்டாசுடன், 30 – 35 பிராய செவ்வுடம்பினராகத் தோன்றி குமரகோட்ட தரிசனம் செய்வித்து மறைந்த சம்பவம் போன்ற தெய்வீகத் திருவிளையாடல்கள் விவரம் அடங்கிய நூலாகும் இஃது.

சுவாமிகளின் முதல் நூலான இதில் “அவனியாசை” எனும் 40 ஆம் பதிகத்தின் 8ஆம் பாடலில்
“என்னுற் பன்னமுவ்வா றிரண்டாண்டெனா
விங்குளோர் ஊகித்தோதுகிறார்”
எனவருவது கொண்டு, சுவாமிகளின் வயது கணிக்க இயலும். இச்செய்யுள் பாடிய காலம் தாரண வருடம் சித்திரை மாதம் கி.பி. 1884 என, இந்நூலின் முதற் பதிப்பில் குறிப்பு உள்ளது. மற்றம் திருக்கோயிலூர் சப்டிவிஷனல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டு முன்பாக கி.பி. 1908 ஆம் வருடத்துக் காலண்டர் கேஸ்112 இல் தமக்கு வயது 60 சொல்லலாம் என்று சுவாமிகள் வாக்குமூலம் அறித்துள்ளதும் சுவாமிகளின் வயது எவ்வளவு எனக் கணிக்க இயலும் குறிப்பு ஆகும்.
மேலும் இந்நூலின் 42வது பதிகத்தில், “குமரகுருதாசர் மாட்டு அன்பு பூத்தபின் உன் அருள் நோக்கினிற் பொன்றாது பொன்றிநின்று உனைக் காண்பார்” எனக் குறிப்பு ஒன்று உளது. இதன் தொடர்பாக சுவாமிகளின் ஞானவாக்கியங்களில் ஒன்றான “குருவருளின்றி அருள்வரலில்லை” என்ற உண்மையையும் உணர்வோமாக.
மற்றும், கருடன் உருவம் கருதுமளவிற் பருவிடம் தீர்ந்து பயனடைவது போலவும். கீரியின் வடிவினை பாவிப்போன் ஒருவனால் விடம் மீளுமாறு போலவும் குருவினது அருள் நோக்கினால் ஆணவ இருள் நீங்கும். ஆதலால், மருளில் உள்ள நம்மை, மருளில் உள்ள குரு, மருள் அறுக்க இயலாது என்பதை உணர்ந்து, போலி வேடதாரிகளின் உரைக்கு செவியைச் சாய்க்காது சுவாமிகளின் நூல்களில் ஈடுபாடு கொண்டு நாமே முயன்று முன்னேற்றம் காண்போம்.
முதல் மண்டலமாகிய
குமரகுருதாச சுவாமிகள் பாடல்
பிரபந்த அட்டவணை
பிரபந்த எண் பிரபந்தத்தின் பெயர் பாடல் தொகை
தெய்வ வணக்கம் 3

  1. அமரர்கோ 6
  2. திருப்பரங்கிரி 10
  3. திருச்செந்தில் 10
  4. திருப்பழநிமலை 10
  5. திருவேரகம் 10
  6. திருகுன்றுதோறாடல் 10
  7. திருச்சோலைமலை 10
  8. திருவிராமேச்சுரம் 10
  9. திருப்புலியூர் 6
  10. திருவருணை 6
  11. திருக்குமரகோட்டம் 6
  12. திருத்தணிகை 6
  13. திருமலை 6
  14. திருக்கயிலாசமலை 10
  15. சண்முகானந்தசிவம் 10
  16. நிட்களானந்தகுகன் 10
  17. சரவணபவானந்தன் 10
  18. ஆனந்தமுகில் 10
  19. குகப்பிரமம் 10
  20. பூரணானந்தகுகன் 10
  21. குந்துகால் 5
  22. கதிரேசன் 10
  23. சரவணபவன் 10
  24. நவரத்தினமீக்கூற்று 9
  25. உட்பகையொழிக்க மனு 1
  26. பெரும்பேறு 1

  27. உள்ளூர்ச் சிவசுப்பிரமணியம் 1-10
    உள்ளூர்ச் சிவசுப்பிரமணியம் 11-20
    உள்ளூர்ச் சிவசுப்பிரமணியம் 21-30
    உள்ளூர்ச் சிவசுப்பிரமணியம் 31-40
    உள்ளூர்ச் சிவசுப்பிரமணியம் 41-50
    உள்ளூர்ச் சிவசுப்பிரமணியம் 51-60
    உள்ளூர்ச் சிவசுப்பிரமணியம் 61-70
    உள்ளூர்ச் சிவசுப்பிரமணியம் 71-80
    உள்ளூர்ச் சிவசுப்பிரமணியம் 81-90
    உள்ளூர்ச் சிவசுப்பிரமணியம் 91-100 100
  28. வேண்டுகோள் 8
  29. பொன்னவிர்மேனி 10
  30. கருணாகரவேலன் 10
  31. சிகிவாகனன் 10
  32. அயிலரசு 10
  33. கந்தரிரட்டை மணிமாலை 20
  34. கந்தரொருபாவொருபஃது 10
  35. மனது 10
  36. எழிலார் சுரும்பு 10
  37. திருநிறைந்தசிவம் 50
  38. இந்துமிலைந்தோன் 8
  39. கந்தர் திருவாகரம் 36
  40. அவனியாசை 10
  41. பகலெல்லாம் 24
  42. கங்கையின் சேய் 10
  43. மண்ணிற்சிறுவீடு 10
  44. புவியாரே 20
  45. சொன்னயம் 10
  46. கந்தர்நான்மணிமாலை 40
  47. நெஞ்சுப்பத்து 10
  48. உலக வாழ்வு 14
  49. ஞாயவாதிகள் விளக்குவர் 10
  50. போற்றி விண்ணப்பம் 10
  51. சரண விண்ணப்பம் 10
  52. அமிர்தமதி 10
  53. சிறுமை நீக்குயர் செல்வம் 10
  54. துறவு நோக்கம் 10
  55. பிழை பொறுக்க முறையீடு 10
  56. உள்ளக்களி 10
  57. திருவுயர்ந்தவாறெழுத்தான் 10
  58. அடியவர்க்கடிமை நாம் 10
  59. ஆரணத்திறுதி 10
  60. சிவலோக சுந்தரமாலை 10
  61. பணம் 10
  62. அபிமான மறுத்தல் 2
  63. மறைமுடி 3
  64. ஏமவிலேகர் 6
  65. ஸ்ரீகதிர் காமவேலர் வண்ணம் 1
  66. பங்கிகள் 2
  67. பரஞ்சுடர்க்கண்ணி 190
  68. பொன்மயிற்கண்ணி 40
  69. குருபரக்கண்ணி 50
  70. சதாசிவக்கண்ணி 50
  71. தேர்ந்தேனேயென்கண்ணி 100
  72. பரம்பொருட்கண்ணி 6
  73. பூரணக்கண்ணி 10
  74. திருவுருமலைக்கோமகன் 1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram