
அசுவபதி பராசக்தியிடம் அருளை வேண்டி மீண்டும் மீண்டும் மன்றாடுகிறார்.
அப்போது அன்னை அவருக்கு ஒரு வரம் அருள்கிறாள்.
“O strong forerunner, I have heard thy cry.
மனித இனத்தின் வல்லமை வாய்ந்த முன்னோடியே உனது அபயக் குரலைக் கேட்டேன்.
One shall descend and break the iron Law,
Change Nature’s doom by the lone Spirit’s power.
ஒருத்தி பூவுலகில் அவதரித்து வாழ்கையின் இரக்கமற்ற விதி முறைகளைத் தகர்த்தெறிவாள்.
துணை ஏதுமற்ற தெய்வீக சக்தியின் மூலம் இயற்கையின் விதியை மாற்றியமைப்பாள்.
A limitless Mind that can contain the world,
A sweet and violent heart of ardent calms
Moved by the passions of the gods shall come.
அவளது எல்லையற்ற திருவுள்ளம் உலகனைத்தையும் தன்னகம் கொண்டிருக்கும்.
கடவுளர்களின் பேரார்வத்திற்கிணங்கி, ஓர் இனிமையும், கட்டுக்கடங்காத கடலின் அமைதியும் நிறைந்த நெஞ்சம் இப்பூவுலகிற்கு வரும்.
All mights and greatnesses shall join in her;
Beauty shall walk celestial on the earth,
Delight shall sleep in the cloud-net of her hair
And in her body as on his homing tree
Immortal Love shall beat his glorious wings.
எல்லா வல்லமைகளும், மேன்மைகளும் அவளுக்குள் ஒருங்கிணையும்.
எழில், தெய்வீக அழகு வாய்ந்து இப்பூமியில் நடமாடும்.
முகில்வலை போன்ற அவளது கேசங்களில் பெருமகிழ்ச்சி உறங்கும்.
தனது வீடாம் மரத்திற்குத் திரும்பும் பறவை மகிழ்ச்சியுடன் தன் சிறகுகளை அடித்துக் கொள்வதுபோல், அமரனான காதல் தேவன் அவளுடைய திருமேனியில் துள்ளி மகிழ்வான்.
A music of griefless things shall weave her charm;
The harps of the Perfect shall attune her voice,
The streams of Heaven shall murmur in her laugh,
Her lips shall be the honeycombs of God,
Her limbs his golden jars of ecstasy,
Her breasts the rapture-flowers of Paradise.
துயரற்ற சாதனங்களின் இன்னிசை அவளது கவர்ச்சியை பின்னி உருவாக்கும்.
கடவுளர்களால் மீட்டப்பட்ட யாழ்கள் அவளது குரலை இசைவிக்கும்.
சுவர்க்கத்தின் ஓடைகள் அவளது சிரிப்பொலியால் எதிரொலிக்கும்.
அவளது உதடுகள் இறைவனின் தயை சொட்டும் தென்கூடுகளாகும்.
அவளது அவயங்கள் இறைவனின் ஆனந்தப் பரவசம் நிரம்பிய, பொன்னாலான சாடிகள்.
அவளது மார்பகங்கள் சுவர்கத்தின் பேருவகைப் பூக்கள்.
She shall bear Wisdom in her voiceless bosom,
Strength shall be with her like a conqueror’s sword
And from her eyes the Eternal’s bliss shall gaze.
அவளது பேச்சரவமற்ற உள்ளத்தில் மெய்யறிவைத் தாங்கி நிற்பாள்.
வலிமை அவளிடம் ஒரு வெற்றி வீரனின் வாள் போன்று ஜ்வலிக்கும்.
அவளது விழிகளிலிருந்து சாசுவதத்தின் பேரின்பம் உலகத்தை உற்று நோக்கும்.
A seed shall be sown in Death’s tremendous hour,
A branch of heaven transplant to human soil;
Nature shall overleap her mortal step;
Fate shall be changed by an unchanging will.”
மரண தேவனின் பேரச்சம் தரக்தக்க தருணத்தில் ஒரு விதை விதைக்கப் படும்.
சுவர்கத்திலுள்ள மரணத்தின் ஒரு கிளை பூமியின் மண்ணின் இடம் பெயர்ந்து நடப்படும்.
இயற்கை அதனுடைய, உயிருக்கு ஊறுவிளைவிக்கக் கூடிய காலடித் தொலைவைத் தாண்டிக் கடக்கும்.
இறைவனுடைய திடமான சங்கற்பத்தால் விதி மாற்றப்படும்.”
Savitri, p. 346.
பண்டிட், மா. பு. [2000] சாவித்ரி அறிமுக ஆய்வுரைகள். திப்தி. ஸ்ரீ அரவிந்த ஆசிரமம்: பாண்டிச்சேரி. ப.51, 52, தமிழில்: ஸ்ரீனிவாச கோபாலன்.