fbpx

சித்தர்கள் யார்

சித்தர்கள் என்றால் என்ன சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள் பொது வாழ்வு முறை வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு வழிமுறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள் சித் அறிவு சித்தை உடையவர்கள் சித்தர்கள் அறிவு படைத்தவர்கள் சித்தர்கள் சித்தம் என்றால் அறிவு சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன மருத்துவத்தோடு யோகம் சோதிடம் மந்திரம் இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர் மேலும் ஐந்து தகுதிகளாக உள்ளடக்கி சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்
சித்தர்கள் மீவியற்கை(super Natural power) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் கூறுவதுண்டு எனினும் இவர்கள் உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதாகும் இவர்களின் மருத்துவ கணித இரசவாத தத்துவ இலக்கிய ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்து இயம்புகின்றன ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல்வாதிகள் அல்ல மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள் சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள் தங்கள் இருப்பை உடம்பை சிந்தையை உலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை அறநிலை உணர்வை மெய்யடைதலை சித்தி எய்தல் எனலாம் மனிதன் முயன்றால் சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை ஏனெனில் சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே ஆனால் இக்கலிகாலத்தில் அது மிகக் கடினமான ஒன்றாகும் அந்த சித்தர்களை அடையாளம் காண்பது பூர்வஜென்ம புண்ணியம் என்பது அகத்தியர் வாக்கு சரியான நபர்களை தேர்ந்தெடுத்து சித்தர்கள் தங்களின் பணிகளைச் செய்ய வைப்பார்கள் அதனை ஏற்று அவர்கள் வழி நடப்பவர்களுக்குக் அது ஓரளவு சாத்தியம்

முருகப்பெருமான் சித்தர்களுக்கு முதலானவர் என்றும் சொல்லப்படுகிறது அகத்தியர் முதல் பல சித்தர்களுக்கு முருகப்பெருமான் அருள் தந்து பல கலைகளை வடிக்கச் செய்ததாக பல சித்தர்களின் பாடல்களில் காணப்படுகிறது முருகப் பெருமானை போற்றி வணங்கி பல சித்தர்கள் ஆன்மீக கலைநூல்களை வடித்து முக்தி அடைந்து உள்ளார்கள் என்பது வரலாறு அகத்தியர் அருணகிரிநாதர் பாம்பன் சுவாமிகள் நக்கீரர் வள்ளிமலை சுவாமிகள் என பலரும் உண்டு இந்த சித்தர்கள் வாழ்ந்து சமாதியடைந்த இடங்களின் மீது சிவலிங்க பிரதிஷ்டை அல்லது அவர்கள் விரும்பி வணங்கிய தெய்வங்களின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஆனால் உண்மையில் பல சித்தர்கள் ஒளி தேகத்தை அடைந்தவர்களே ஆவர் சித்தர்களின் ஜீவசமாதிகள் சக்தியை உணராமல் ஆலயங்கள் போன்று நாயன்மார்களின் உருவங்களும் மற்ற பிற தெய்வச் சிலைகள் வடிப்பது தவறான வழிமுறையாகும் இப்படி செய்து சில ஜீவசமாதி ஆலயங்கள் போன்று மாறியும் உள்ளது சித்தர் ஜீவசமாதிகளில் தட்டு காசு பெறுவது மிகப்பெரிய குற்றமாகும் ஆகவே வழிபாடு செய்பவர்கள் அங்கு தட்டு காசு போடுவதை விடவும் அன்னதானம் பூஜைக்குரிய பொருட்களை அளிப்பது மேன்மையான ஒன்றாகும் மக்கள் நலன் பேணி வாழ்ந்தவர்கள் தனக்கென்று வாழாமல் பிறர் நலன் பேணவே அவதரித்தவர்கள் சித்தர்கள் அந்த இடங்களில் தட்டு காசு கூச்சல் இரைச்சல் இல்லாமல் தவிர்ப்பது சித்தர்களின் ஆற்றல் மென்மேலும் பெறுவதற்கு வழிவகுக்கும் குறிப்பாக சென்னை திருவான்மியூர் சக்கரையம்மா ஜீவசமாதி பொள்ளாச்சி அழுக்கு சித்தர் ஜீவசமாதி போன்ற இடங்களில் தட்டு காசு பெறப்படுவதில்லை என்பது கண்கூடு
மேலும் சித்தர்கள் வெறும் 18 பேர் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த பதினெட்டு சித்தர்கள் யார் யார் என்பதில் பலரது கூற்றுக்களில் சில பெயர்கள் மாறுபடுகின்றன எனினும் முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை சித்தர்கள் அனைவருமே தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும் உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும் தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும் சேவை புரிந்துள்ளனர் சுருக்கமாகச் சொன்னால் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர் சாதி சமயம் சாத்திரம் சடங்குகள் மீறிய உலக நோக்கு பொது இல்லற துறவற வாழ்முறைகளில் இருப்பவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது என்னவெனில் பிறர்நலன் பேணி வாழ்தலும் இயற்கையின் மீது அன்பை பொழிந்து வாழ்வதுமேயாகும் சித்தத்தை அடக்கி தாங்களே சிவமாய் இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள் நினைத்ததை நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள் இயற்கையை வென்றவர்கள் தலைவிதியை மாற்றியமைக்கும் தயாபரர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் சித்தர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள் மேலும் அவர்கள் ஆலயங்கள் பீடங்கள் கட்டிக்கொண்டு தம்மை தாமே சித்தர்கள் எனக் கூறிக் கொண்டிருக்க மாட்டார்கள் மக்களை ஏமாற்றவே காவியுடை கமண்டலம் சடை வைத்த சித்து ஆசாமிகளை நம்பி பயணிக்காதீர்கள் சித்துக்களை கொண்டு பணம் பறிக்கவே இவர்கள் செயல்படுகிறார்கள் இன்று போலி சாமியார்கள் நிறைய பேர் பெருகி விட்டார்கள் தங்களின் சுயலாபத்திற்காக தங்களையே சித்தர்கள் என்று சொல்லிக்கொண்டு பல்வேறு வகைகளில் தங்களை கட்டமைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த போலிகளிடம் பாமரன் முதல் நீதிபதி வரை ஏதேதோ ஆதாயத்திற்காக பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எல்லாம் ஆசையின் விளைவில் ஏற்படும் கருமமே பெரும்பாலும் இது போன்ற போலி சித்தர்கள் பணம் வசூலிக்கிறார்கள் எந்த சித்தனும் தன்னை விளம்பரபடுத்தி கொள்ள மாட்டார்கள் ஆனால் போலிகள் தங்களுக்கென ஒரு கூட்டம் வைத்து கொண்டு பல்வேறு விதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள்
சித்தர்களை 5 தகுதி நிலையில் பிரிக்கிறார்கள்
முதல் தகுதி
சித்தத்தை அடக்க வல்லவர்

இரண்டாம் தகுதி
எண்வகை சித்து செய்பவர்

மூன்றாம் தகுதி
பொருளாசை முற்றும் துறந்தவர்கள் பாச இருளகற்றவர்கள் நான் என்ற அழுக்கற்றவர்கள்

நான்காம் தகுதி
பிறப்பிற்குக் காரணமான வினைவித்தை கொடுத்து தூய உணர்வில் மாறி ஐம்புலன்களை அடக்கி சித்தத்தை ஒருமுகப்படுத்தி ஆன்மீக ஆற்றல் பெற்றவர்கள்

ஐந்தாம் தகுதி
சாதி மதம் இனம் எனப்பிரிவினை இல்லாமல் எல்லா உயிரினங்களின் இன்னல்களை நீக்க இடையறாது சிந்தித்து முழு முயற்சியுடன் தெரிந்த ஆய கலைகள் அறுபத்தி நான்கையும் உணர்ந்து இயற்கையோடு இணைந்த எளிய வாழ்வை தந்தவர்கள் உடல் நலனுக்கும் உள்ள நலனுக்கும் தேவையானதை கண்டறிந்து மக்கள் நலத்திற்கு ஏற்ற மருத்துவ முறையை கொண்டு வந்தவர்கள்

கிருதயுகத்தில் இரண்டு லட்சம் திரேதாயுலகத்தில் ஒரு லட்சம் துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம் கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம் ஆகமொத்தம் 3,75,000 சித்தர்கள் தோன்றினர் என்று தேரையர் கூறியுள்ளார்
48 வகை சித்தர்கள்

பதினெட்டாம்படிக் கருப்புகள்
நவகோடி சித்தர்கள்
நவநாத சித்தர்கள்
நாத சித்தர்கள்
ஞானசித்தர்கள்
நாதாந்த சித்தர்கள்
வேத சித்தர்கள்
வேதாந்த சித்தர்கள்
வேள்விச் சித்தர்கள்
மறைச் சித்தர்கள் முறைச்சித்தர்கள்
மந்திர சித்தர்கள்
எந்திரச் சித்தர்கள்
மாந்திரீக சித்தர்கள்
தாந்திரீக சித்தர்கள்
நான்மறைச் சித்தர்கள்
நான்முறை சித்தர்கள்
நானெறி சித்தர்கள்
நான்வேதசித்தர்கள்
பத்த சித்தர்கள்
பத்தாந்த சித்தர்கள்
போத்த சித்தர்கள்
புத்த சித்தர்கள்
புத்தாந்த சித்தர்கள்
முத்த சித்தர்கள்
முத்தாந்த சித்தர்கள்
நவநாத சித்தர்கள்
சீவன்முத்த சித்தர்கள் சீலன் முத்தாந்த சித்தர்கள்
அருவ சித்தர்கள்
அருவுருவ சித்தர்கள்
உருவ சித்தர்கள்
பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப்படுவர்

எண்ணற்கரிய சித்தர் எழுவர் (7 பேர்)
எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்
ஏதுமில் நிறை சித்தர் எழுவர்
விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்
என்று பல குறிப்புகள் உள்ளன
சித்தர்களை உணர்ந்து வழிபடுங்கள் சித்து நிலை பெற்றவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டார்கள் தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொண்டு சித்தர் என்றும் முனிவர் என்றும் யோகி என்றும் சொல்ல மாட்டார்கள் அதனால் நல்ல தொண்டு செய்பவர்களை சித்தர்களே நாடி வந்து தரிசனம் தருவார்கள் என்பது உண்மை உணர்ந்து உரைக்கின்றேன்
பொதுவாகவே பூர்வஜென்ம தொடர்பு இருந்தால் தான் சித்தர்கள் தொடர்பும் சித்தர்கள் ஜீவசமாதி தேடல் வழிபாட்டிலும் செல்வார்கள் முன்னோர்களின் பாக்கியம் நற்கருமம் அது பூர்வ ஜென்ம புண்ணியம் பாக்கியமாகும் எல்லோராலும் இதுபோன்று சித்தர்கள் ஜீவசமாதி தேடி வழிபடவோ இல்லை வாழும் சித்தர்கள் ஆசீர்வாதம் பெற முடியாத சூழல் தான் ஆனால் முயற்சி செய்தால் அவர்களை நினைத்து மனதுருகி வேண்டினால் நேரிலேயே வந்து காட்சி கொடுப்பார்கள் சித்தர்கள் குழந்தைகளைப் போல குழந்தைகளாகவே பாவித்து விட்டால் ரொம்பவும் நல்லது சித்தர்களை அணுகுவது மிகவும் எளிது
சித்தர்கள் வழிநடத்தலுக்கு பொதுநலத் தொண்டு என்று சொல்லப்படும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை நன்மைகளை முகம் தெரியாதவர்களுக்கும் சித்தர்கள் பற்றிய விஷயங்களை எடுத்துக்கொண்டு போனால் தான் அவர்களின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்
இறைவனை அடைவதும் அதே வழியில்தான்
இயன்றவரை சித்தர்கள் ஜீவசமாதி உங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபட ஆரம்பியுங்கள் அதன்பிறகு எந்த ஜீவசமாதி செல்ல வேண்டுமோ அந்த ஜீவ சமாதியில் உள்ள சித்தர்களை நினைத்து நீங்களே தியானம் பண்ணுங்கள் தியானம் என்பது அவர்கள் பெயரைச் சொல்லி அவர்களை உங்கள் உள்ளத்தில் குடி வைத்து அந்த சித்தரின் பெயரைச் சொல்லி வணங்குங்கள் கண்டிப்பாக உள்ளன்போடு நம்பிக்கையோடு உரிமையோடு வழிபட்டால் அந்த சித்தர்கள் உங்களுக்கு சூட்சும ரூபத்தில் கண்டிப்பாக காட்சியளிப்பார்கள் இது யான் கண்ட உண்மை அடியேன் அப்படித்தான் நிறைய சித்தர்கள் ஜீவசமாதி தேடிச் சென்று வழிபட்டு பாக்கியம் பெற முற்பட்டேன்
எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையும் நம்பிக்கையும் ரொம்ப முக்கியம் ஆனால் மக்கள் அனைவரும் சித்தர்களை நான் உடனே தரிசிக்கவேண்டும் சித்தரின் அருள் உடனே பெற வேண்டும் இறைவனை உடனே காண வேண்டும் என்று ஆர்வம் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் அதனாலேயே ஏமாற்றத்திற்குள்ளாகி பெரும்பாலும் அவதிப்படுகின்றனர் சித்தர்கள் சுலபத்தில் காட்சி அளிப்பார்கள் என்று கூறிவிட முடியாது அது அவரவர் முயற்சிகளும் கர்மவினையை பொறுத்தும் அமையும் அனைவரையும் இவர்கள் வழிபடும் முறைகளும் உள்ளது வழிபாட்டு முறை என்பது மிகுந்த சிக்கலான விஷயம் எல்லாம் அல்ல

அடியேனை பொறுத்தவரை சித்தர்களை நினைத்து மனமுருகி கூப்பிட்டாலே கூப்பிட்ட குரலுக்கு உங்கள் இல்லத்திற்கும் உங்கள் மனதிற்குள்ளும் வந்துவிடுவார்கள் இதுவே யான் கண்ட உண்மை இதில் ரகசியம் என்றெல்லாம் ஒன்றுமில்லை சித்தர்கள் வழித்தேடலில் இது போன்ற பதிவுகளை எழுதுவதற்கு அவர்களே என்னை தூண்டுகிறார்கள் அவர்களே எனக்கு வழிகாட்டுகிறார்கள் அவர்களே என்னை வழி நடத்துகிறார்கள் அவர்களை தரிசித்து அவர்களின் அடியவராக இருக்கவே என்னுடைய வாழ்க்கை முறையை கட்டமைத்துக் கொண்டேன் அது என் முன்னோர்கள் செய்த பாக்கியம் சித்தர்களின் தரிசனம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அடியேனுடைய நோக்கம் அதற்காகவே இது போன்ற பதிவுகளை அடிக்கடி எழுதுகிறேன் இதற்கு எனது இந்த ஜென்மம் படைக்கப்பட்டதாகவே கருதுகிறேன் கலிகாலத்தில் கொடுமைகளை கண்டு சகித்து கொண்டுதான் வாழவேண்டியிருக்கிறது இன்றைய காலகட்டத்தில் மனிதம் அருகிக் கொண்டிருக்கிறது சகமனிதனின் தூக்கத்தை கண்டு சந்தோசப்படுபவர்கள் இங்கு அதிகம் உள்ளார்கள் அடுத்தவர்களின் வாழ்க்கையை பற்றி பேசிக் கொண்டே வருகிறார்கள் இது போன்ற பாவ மூட்டைகளை சுமந்து கொண்டு வாழ்வதில் என்ன அர்த்தம் உள்ளது மீண்டும் பிறவாமை வேண்டும் அப்படியே பிறந்தாலும் இறையை அடைவதற்கான வழி பிறக்க வேண்டும் என்பதே இலட்சியமாக இருக்க வேண்டும் எனில் இந்த உலகத்தில் பிறக்கப் பிறக்க பிறக்கப் பிறக்க நமது பாவ மூட்டைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வது போன்ற ஒரு கொடுமையான விஷயம் தான் நடந்து கொண்டிருக்கிறது
சித்தர்கள் அனைவரும் சிவரூபங்கள் சித்தர்கள் அனைவரும் கடவுளே கங்கைக்கு சென்று தான் பாவத்தை கழுவ வேண்டும் என்பது அல்ல உங்கள் அருகில் உள்ள ஜீவ சமாதியில் சென்று மனமுருகி வேண்டினால் அந்த சித்தர்களே உங்களை காப்பார்கள்
சித்தர்களே நிறைய அவதாரம் எடுத்து மக்களை காக்கவே அவர்கள் பிறப்பு எடுப்பது உண்டு எந்த ரூபத்திலும் வருவார்கள் சில நேரங்களில் நாமே உதாசினப்படுத்தி விடுவோம் அவர்கள் பிச்சைக்காரர்கள் ரூபத்தில் கூட வருவார்கள் ஒரு விலங்கின் ரூபத்தில் கூட வருவார்கள் ஒரு நாயாக வருவார்கள் ஒரு பன்றியாக வருவார்கள் ஒரு அழுக்கு மனிதராக கூட வருவார்கள் அதை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் நமக்கு தோன்றுவதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் ஆனால் சாதாரண மனிதர்களாக இருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் சித்தர்கள் காட்சி தரவும் மாட்டார்கள் உங்களால் இயன்ற பொதுநலத் தொண்டு செய்து கொண்டே இருக்க வேண்டும் எந்தவிதத்திலும் கர்வம் தலைக்கேறி இடக்கூடாது எந்தவிதத்திலும் ஆணவம் வந்துவிடக்கூடாது எந்தவிதத்திலும் மமதை வந்துவிடக்கூடாது எந்த இடத்திலும் நான் என்ற அகங்காரம் வந்துவிடக் கூடாது சித்தர்களை நீங்கள் தேடிச் செல்ல வேண்டும் என்பதும் அவசியமே இல்லை சித்தர்களே உங்களை தேடி வருவார்கள் தேடி சித்தர்களை பிடித்துக் கொண்டால் இறைவன் உங்களை தேடி வருவார் ஜீவ சமாதிகளுக்கும் சித்தர்கள் தான் அழைக்கிறார்கள் அந்த சித்தர்களின் பரிபூரண ஆசி இருந்தால் மட்டுமே நாம் அந்த ஜீவசமாதிக்குள் காலடி எடுத்து வைக்க முடியும் நினைத்தவுடனே ஒரு ஜீவ சமாதி செல்வது என்பது எல்லோராலும் முடியாது சித்தர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு நல்ல விதமான தர்மத்தை செய்பவர்களுக்கு அது சாத்தியமாகும் பிறர்நலம் பேணி வாழ வேண்டும் முகம் தெரியாதவர்களுக்கும் உதவ வேண்டும் எந்த உயிரையும் வதக்கக்கூடாது
சித்தர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம் அன்னதானம் செய்வது அதேபோல சித்தர்களின் வரலாறு எழுதுவது சொல்லுவது பாடுவது மக்களுக்கு எடுத்து இயம்புவது இன்றைய காலகட்டத்தில் கோயிலுக்கு செல்வது அருகிவிட்டது
சித்தர்கள் ஜீவசமாதி குரு பூஜையில் கலந்து கொள்ளுங்கள் அந்த குருபூஜைக்கு நவகோடி சித்தர்களும் வருவார்கள் அங்கு கலந்து கொண்டு அன்னம் எடுத்துக்கொள்வார்கள் அங்கே முக்கோடி தேவர்களும் மும்மூர்த்திகளும் தேவதைகளும் அனைத்து தெய்வங்களும் அந்த குரு பூஜையில் கலந்து கொண்டு உங்களை ஆசிர்வதிப்பார்கள் முடிந்தளவு உங்களால் இயன்ற உதவிகளை சித்தர்கள் ஜீவசமாதிகளுக்கு செய்யுங்கள் அது பணமாகவோ பொருளாகவோ அல்லது உடல் உழைப்பு இருந்தால் மிகவும் நல்லது அதற்காக கோடிகோடியாக கொண்டுபோய்க் கொடுத்து தற்பெருமை பேசிக் கொள்வது இல்லை தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதும் ஒரு காசுக்கும் ஆகாது பணத்தை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை உங்களால் இயன்ற உடல் உழைப்பைக் கொண்டு ஜீவசமாதியில் உள்ளன்போடு ஒரு நெய்விளக்கு போட்டாலே போதும் உங்கள் வீடு தேடி வந்து விடுவார்கள் சித்தர்கள்
சித்தர்கள் வழிபாட்டில் கூட சிலர் நான் இந்த சித்தரை மட்டும்தான் வழிபடுவேன் என்றெல்லாம் இருக்கிறார்கள் அப்படியெல்லாம் ஒன்றும் தனிதனி குழுவாக பிரிவது அவசியமேயில்லை எந்த சித்தரும் தெய்வமும் பிறரை வணங்க கூடாது தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று கட்டளை இடுவதில்லை ஒரு சிலபேர் குறிப்பிட்ட சித்தரை மட்டுமே வழிபடுவதை கண்டதுண்டு அதற்காக நான் அகத்தியரை மட்டுமே வழிபடுவேன் மற்ற சித்தர்களை வழிபட மாட்டேன் மற்ற கோயில்களுக்கு செல்ல மாட்டேன் மற்றும் வேறு சித்தர்கள் ஜீவசமாதி செல்ல மாட்டேன் என்றும் பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார்கள் இருக்கிறார்கள் எல்லோருக்கும் தாய் ஒருத்திதான் அதே போல ஒரே கடவுள் தான் கடவுள் வேறு வேறு ரூபங்களில் அவதாரங்களாக காட்சி அளிப்பது போலவே சித்தர்கள் வேறு வேறு ரூபங்களில் வேறு வேறு சித்தர்களாக காட்சியளிக்கிறார்கள் தரிசனம் தருகிறார்கள் கோவில் கொண்டுள்ளார்கள் தசாவதாரம் எடுத்தாலும் அது அனைத்தும் கிருஷ்ண பரமாத்மா தான் பரந்தாமன் தான் 108 வைணவ தலங்களிலும் பெருமாளே கோவில் கொண்டுள்ளார்கள் இதற்காக நான் இந்த சித்தரைதான் வணங்குவேன் மற்ற சித்தர்களை நான் வணங்க மாட்டேன் என்று சொல்வதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான விஷயமாகும் அடியேனுக்கு கூட முகம் தெரிந்தவர்களை விடவும் முகம் தெரியாதவர்களின் நட்புறவே அதிகம் உள்ளனர் இதுவேதான் யான் பெற்ற இன்பம் பாக்கியம் அனைத்துமே எனக்கு சித்தர்கள் அளித்த நற்கருமம் நானும் தங்களைப் போன்ற சாதாரண மனிதன் தான் எனக்கு எந்த சித்துவேலைகளும் தெரியாது எந்த அளப்பரிய ஆற்றலும் கிடையாது மக்களோடு மக்களாக பயணிப்பதில் ஆனந்தம் தான்
எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வ திலேயே நீங்கள் எதை நோக்கி பயணபடுகிறீர்கள் என்று சரிவர அர்த்தமாகும் ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் நம் மனம் அதற்கு இடம் கொடுக்காது
என்னை பார்த்து கூட பொறாமைப்படுபவர்கள் உண்டு உங்களுக்கு என்ன நினைத்தவுடனே சித்தர்களை தேடி போறீங்க கொடுத்து வைச்சவரு உங்களை பார்த்தால் பொறாமையாக இருப்பதாக நிறைய பேர் என்னிடம் நேரடியாக சொல்வதுண்டு.
என்னுடைய சக நெருங்கிய நண்பனே இது போன்று நிறைய தடவை சொல்லியுள்ளார் உங்களுக்கு என்னை பற்றி தெரிந்த பக்கங்கள் அவ்வளவு தான் எல்லோரையும் போலவே வாழ்க்கையில் எல்லா சுக துக்கங்கள் எனக்கும் உண்டு சில நேரங்களில் இது போன்ற விஷயங்களை கேட்கும் பொழுது சிரிப்புதான் வரும் எனக்கு பல நேரங்களில் அவர்களுக்காக நான் வருத்தபடுவதுண்டு போதாகுறைக்கு என்னுடைய செல்லிடப்பேசிக்கு பேசி தொந்தரவுகள்தான் நிறைய வருகிறது இப்பொழுதெல்லாம் அதனாலேயே நிறைய விஷயங்களை பேசுவதையும் எழுதுவதையும் குறைத்துக் கொண்டேன்
என்னை பொறுத்தவரை நான் எழுதும் சித்தர்கள் ஜீவசமாதிகளுக்கு நீங்கள் ஒரு முறை சென்றாலே போதும் வேறு எந்த எதிர்பார்ப்பும் எனக்கு கிடையாது எனக்கு சித்தர்களை பற்றி நிறைய பேச வேண்டும் எழுத வேண்டும் சித்தர்கள் இராஜ்ஜியம் விரைவில் அமைய வேண்டும் என்று மட்டுமே உள்நோக்கம் நிறைய பேரை சித்தர்கள் ஜீவசமாதி அழைத்துச் செல்ல முயற்சி செய்தேன் ஆனால் அருளை மட்டும் தேடுபவர்களாக இருந்தால் பரவாயில்லை எல்லாருமே தங்களின் கர்மவினைகளை போக்குவதை விடவும் ஜீவசமாதிகளுக்கும் வந்து எப்படி வழிபட வேண்டும் என்று தெரியாமலே ஏதோ சுற்றுலா வருவது போலவே சென்று வந்தது எனக்கு ஒரு கட்டத்திற்கு மேல் மக்களை நாம் என்றைக்குமே மாற்ற முடியாது என்று தோன்றி அந்த நல்ல முயற்சியை மேற்கொள்ள முடியாமல் போனதே பரிதவிப்பு வருத்தமும் கூட
கர்மம் இன்றி வாழலாமே செயலற்று இருப்பது அல்லது கர்ம பந்தத்தில் இருந்து விடுபடுவது என்கிறார்களே நாம் வாழ்வதற்கு கர்மம் இயற்றித்தான் ஆக வேண்டும் கர்மம் இன்றி வாழ்வது எவ்வாறு கர்மம் இயற்று உனக்கான கர்மத்தை நீ செய் ஒருநிலைப்பட்ட மனதுடன் செய் ஆனால் பலனை பற்றி சிந்திக்காதே ஏனெனில் பலன் பற்றிய எதிர்பார்ப்பு தான் பந்தத்திற்கான காரணமாக இருக்கிறது மனதளவில் செயலற்று இரு மனதைப் பொறுத்தவரை அது ஏதாவது ஒன்றை மட்டுமே பற்றிக் கொண்டு நிற்கும் இயல்புடையது பலனில் பற்று கொண்டால் எண்ணங்களை விருத்தி செய்து ஆசை கோபம் வஞ்சம் பொறாமை போன்ற தீய குணங்களில் தள்ளிவிடுகிறது பலனை விடுத்து செயலில் மட்டும் மனம் குவிந்து நின்றாலும் செயலும் சிறக்கும் பலனும் மிகுதியாகக் கிடைக்கிறது இவை அனைத்திற்கும் மேலாக செயல் பற்றிய எந்தவித பதிவு மனதில் பதிவதில்லை மனம் ஒரு நிலையில் குவிந்து நிற்கும்போது அது எதையும் தனக்குள் ஏற்றுக் கொள்வதில்லை
செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் பாவம் புண்ணியம் இரண்டும் கலந்து தான் இருக்கின்றன இதுதான் புண்ணியம் இதுதான் பாவம் என்று தீர்மானமாகச் சொல்லி விட முடியாது புறச்சூழ்நிலையும் நம் மனப்பாங்கையும் அடிப்படையாக வைத்துதான் ஒரு கர்மமானது மிகைப்பட்ட பாவமாகவும் மிகைப்பட்ட புண்ணியமாகவும் ஆகிறது முன்னேற்றம் அடைய விரும்புகிறவன் இதில் புண்ணியம் மிகுந்த செயலையே தொடர்ந்து செய்து வர வேண்டும் அதற்கு பிறகு அத்தகைய செயல்களை பற்றற்ற நிலையில் செய்து வர பழக வேண்டும் பற்று வைக்காமல் செய்கிற கர்மம் நம்மை பந்தப்படுத்துவதில்லை
இந்த உடல் இருக்கும் மட்டும் ஏதேனும் ஒரு கருமம் நடந்து கொண்டுதான் இருக்கும் அந்த கருமத்தில் பற்று வைக்காமல் விட்டு விட்டால் கர்மம் செய்தும் செய்யாத நிலையை நாம் அடைகிறோம் கர்மத்தை விட்டுவிடு என்பதும் இதுவே
கர்மத்தை விடுவதில்லை கர்மத்தின் மீது அல்லது கர்ம பலனின் மீது உள்ள பற்றுதலை விடுவதுதான் பற்றற்றுக் கர்மம் செய்பவன் எந்த வேலையை செய்தாலும் அதற்கு கர்த்தாவாக தன்னை கருதுவதில்லை இது தான் கற்ற செயலற்ற நிலை என்பது இத்தகைய நிலை தான் காரணம் கர்மம் கடந்த நிலை எனப்படுகிறது சைவ சமயத்தில் அனைத்தும் அவன் செயல் என்று சொல்வதும் வைணவத்தில் சரணாகதி அடைந்து எல்லாம் உன் செயலே என்று சொல்வதும் இந்த கர்ம பலனில் பற்றற்ற நிலையை வேண்டியதுதான் இதற்காகத்தான் கிருஷ்ணார்ப்பணம் சிவார்ப்பணம் என்று சொல்வதுண்டு ஏனெனில் நாம் செய்யும் ஒவ்வொரு கர்மமும் கடவுளுக்கு சமர்ப்பணம் ஆகட்டும் என்று சொல்லி விட்டால் போதும் கர்மத்தை கழிப்பது ரொம்ப எளிதேயாகும்
செத்தவர்கள் எல்லாம் சித்தர்கள் அல்ல தன்னை உணர்ந்து தன்னை அடக்கி சாகாவரம் பெற்றவர்களே சித்தர்கள் தன்னை உணர்ந்த ஞானத்தால் உலகத்தாருக்கு பயன்படும் வகையில் ஞானத்தில் உதித்த சிந்தனைகளை மக்களுக்கு பயன்படும் வகையில் உபதேசித்த மகான்கள் சித்தர்கள் ஆவார்கள்
மந்திரத்தாலும் தந்திரத்தாலும் வசிய பேச்சாலும் வந்தவர்களை நம்பவைக்கும் நரி தந்திரத்தாலும் சுயநலத்தோடு இருப்பவர்கள் எல்லாம் சித்தர்கள் அல்ல
மணி மந்திர ஔஷதம் என்று மக்களுக்கு தேவையான குறைநீக்க ஞானமார்க்கத்தையும் தியானமார்க்கத்தையும்இறைமார்க்கத்தையும் இன்புற்று வாழ நோய் நொடிகள் அகல உடல் சித்திபெற உள்ளம் சித்தி பெற வழி கண்ட மகான்கள் சித்தர்கள் ஆவார்கள்

அரூபமாய் சொரூபமாய் அங்குமிங்கும் வழிகாட்டி இயற்கையோடு இணைந்து வழிகாட்டுபவர்கள் சித்தர்கள் ஆவார்கள்
உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் மூலாதாரமே திருமூலர் ஆவார்
இந்த ஆறு ஆதாரங்களும் மூன்று விதமான பணிகள் செய்யும் ஆக 6*3= 18
18 விதமான இந்த பதினெட்டு சக்திகளில் ஏதேனும் ஒன்றை பெற்றவர் சித்தர் ஆவார் பதினெட்டும் 18சித்தர்கள் ஆக இயங்குகிறது
இதேபோன்று ஆதாரமே 18சித்தர்கள் ஆகும் சப்த நாடிகளும் சப்த ரிஷிகளாக அமைந்துள்ளன
இந்த ஆறு ஆதாரத்தில் எந்த இடத்திலிருந்து புறப்பட்டு ஞானம் பெறலாம் இது சொல்லிக் கொடுத்து வருவதில்லை
இந்த ஆதாரத்தை இயக்குவது தியான மார்க்கம் இது எல்லோருக்கும் கை வந்த கலை அல்ல
தியானம் அதில் யோகா முறையும் சரிவர வழி காட்டாவிட்டால் மூலாதாரம் பாதிக்கும் பிசகாமல் சரியாக செய்தால் உலகம் வசமாகும்
ஜோதிடர்கள் கூட எதிர்காலத்தை சொல்கிறார்கள் எதிர்காலத்தை மட்டும் சொல்லுபவர்கள் சித்தர்கள் அல்ல
இறந்தவர்கள் எல்லாம் இறைவனை அடைய முடியாது செத்தவன் எல்லாம் சித்தனாக முடியாது
தன்னை அடக்கி சமாதி நிலை அடைபவன் சித்தன் ஆகிறான் சமாதி நிலை என்பது சமாதி கட்டுவது என்பது அல்ல காற்றிலே
கலந்து சாகாவரம் பெற்று இயற்கையாய் வழி காட்டுபவன் சித்தன் ஆகிறான்
சித்தனுக்கு சுயநலம் இருக்காது புகழ்ச்சிக்கு அடிபணிய மாட்டான் பிறவித் தத்துவத்தை அறிந்தவன் கிரகங்களை ஆட்டுவிப்பவன்
நாற்பத்தொன்பது பிறவிகளும் அவன் ஞானத்தின் முன்னே தெரியும் மலை மலையாய் ஏறி இறங்கினாலும் காடெல்லாம் திரிந்தாலும் கண்ணில் படாது ஜென்மாந்திர தொடர்பும் பூர்வீக கர்மாவும் அவனை அடையாளம் காட்டும்
பஞ்சபூதங்களும் தன்னில் கொண்டு சுயநலமற்று மக்களுக்கும் வாழும் வழி சொல்பவர்களாக சித்தர்கள் வருகிறார்கள் காக்கிறார்கள்
சித்தர்களை சரணடையுங்கள் சிவகடாட்சம் பெறுங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram