fbpx

சும்மா இருக்கும் சுகம்

எல்லா ஞானிகளும் , மதங்களும் சமயங்களும் இந்த தலைப்பில் பாடல்கள் இயற்றி இருக்கிறார்கள் – ஏங்கியும் இருக்கிறார்கள்

  1. ஒழிவிலொடுக்கம் :

1 ஏகம் இரண்டெண்ணாமல்
சும்மா இரு என்றான்

சீர்காழி சம்பந்தன்
அருளாளன் ஞான் வினோதன்

  1. சும்மா இருக்கும் சூத்திரமாம் சாத்திரத்தை
    விம்மா கதறுவதும் வேலைகளும்
    தம் அறிவால் நீட்டிப் பிடித்திருக்கும் நிட்டைகளும்
    ஞானியர் கண் முன் காட்டும் பரியாசகம்
  2. கந்த புராணம் :

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு – சொல்லற என்றலுமே
அம்மாப் பொருள் ஒன்றும் அறிந்திலனே

  1. அருட்பா :

இன்று வருமோ நாளைக்கே வருமோ
மற்று என்று வருமோ அறியேனே என் கோவே
துன்று மல வெம்மாயை யற்று
வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்

** சும்மா இருக்க சுகம் சுகம் – சுருதியெல்லாம் அம்மா நிரந்தரம் – பட்டினத்தார்

** சும்மா இருக்க வைத்தான் சூத்திரத்தை நானறியேன் – அருணகிரி நாதர்

சும்மா இருக்கும் சுகம் பற்றி இவ்வளவு பாடல்கள் என்றால் – அதன் பெருமையை எண்ணிப் பார்க்கும் பொழுது , மிகப் பெரியதாக இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது

சும்மா இருப்பது என்றால் என்ன ??

சும்மா இருப்பது என்றால் மனம் மற்றும் இந்த்ரியங்களை கடந்தும் , அதன் தாக்கம் அற்ற நிலையில் இருப்பதுவும் ஆகும்.அந்த நிலை மௌனமாக இருக்கும்- அது ஆன்ம நிலை ஆகும்.

ஆன்ம நிலை என்றால் எண்ணம் அற்ற நிலை என்பதுவும் ஆகும்

ஆக, சும்மா இருக்கும் சுகம் என்றால் மனம் , இந்திரியங்கள், உடல் , இவைகளின் அசைவை பூரணமாக நிறுத்தி – ஆன்ம நிலையை அடைவது ஆகும்.

நாம் சாதனையில் , நல்ல நிலை – மௌனத்தை அடையும் நேரத்தில் , சிவம் வந்து , மனதில் புகுந்து ” ஒரு வார்த்தையை ” சொல்லும் – அவ்வார்த்தையினால் இந்திரியங்களுக்கு எஜமானனாகிய காமன் என்னும் மன்மதன் மாண்டு விடுவான்.
மன்மதன் என்றால் மனதின் விகாரம் .

இதனையே சிவன் நெற்றிக்கண்ணால் , மன்மதனை எரித்ததாக புராணங்கள் கூறுகின்றது

இதனைத் தான் காமத் தகனம் என்றும் மன்மத தகனம் என்றும் கூறுகின்றார்

அந்த ஒரு வார்த்தையை – ” திரு வார்த்தை” என்றும், ” திருவாசகம் ” என்றும், சைவம் தலையில் வைத்துப் போற்றுகின்றது

ஒரு வார்த்தையை சொன்னாலும் ” திரு வார்த்தையா” கூறினாய் என்று சாமானியர்கள் கூறும் வழக்கம் வந்ததும் இதனை ஒற்றித்தான்

மனம் இருப்பதனால் தான் எல்லா துன்பங்களும் – மனதைக் கடந்து விடுவதால் , அளவற்ற சுகமாக இருப்பதால், சும்மா இருக்கும் சுகமே சுகம் என்று ஞானிகள் போற்றுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram