fbpx

டிசம்பர் மாதம் அற்புதமான மாதம்

இந்த மாதத்தில் கோவில்களில் பஜனைகளும், விஷேசங்களும் அதிகம் நடைபெறும்.

பக்தர்களும் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். பெருமாள் கோவில்களில் விரதம் இருந்து வணங்கலாம்.

இந்த மாதத்தில் பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசியும், #சிவ ஆலயங்களில் #ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.

வரும் செவ்வாய்கிழமை காலபைரவாஷ்டமி. கால பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி #ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.

டிசம்பர் 12ஆம் தேதி #சனிப்பிரதோஷம். சிவ ஆலயம் சென்று வழிபட சர்வ தோஷங்களும் நீங்கும். சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்;

இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும்.
டிசம்பர் 14 சர்வ அமாவாசை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதிசி தொடக்கம்.

தனுர் மாத பிறப்பு தினசரியும் ஆலயம் சென்று வணங்கலாம்.
டிசம்பர் 25ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி இன்று பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு. பரமபத வாசல் கடந்து பெருமாளை தரிசனம் செய்யலாம்.

டிசம்பர் 27 மிருத்யுஞ்ச பிரதோஷம் அனங்க திரயோதசி. சிவ தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்.
டிசம்பர் 30ஆம் தேதி ஆருத்ரா தரிசனம்.

அன்று நடராஜரை வழிபட நன்மைகள் நடைபெறும். சிவ ஆலயங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் காண புண்ணியம் கிடைக்கும்.

டிசம்பர் 31 #பரசுராம ஜெயந்தி. பகவான் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் பரசுராமர் அவதாரம் அற்புதமானது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று உணர்த்தியவர் பரசுராமர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram