fbpx

தினகர சிவயோகி

வடபழனி வேங்கீவரர் திருக்கோயில் அருகில் தவம் செய்து, சிறிய வண்டியில் சித்த மருந்துகளை

ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கியும், தனது தவ ஆற்றலால்

மன நலம் குடும்ப நலம், தொழில் நலம், ஆகியவற்றை வழங்கி அருளாட்சி செய்தவர் தினகர சிவயோகியாவார்.

இவரது பூர்வீக குடும்பம், பரம்பரை, பிறப்பு, இதர விவரங்கள் தெரியவில்லை.

1983-ம் ஆண்டு தனது சீடர் திரு அகத்திலகம் என்பவரை அழைத்து இன்னும்

48 நாட்களில் ஜீவ சமாதி அடைய போவதாகவும் அதற்கான இடம் தேர்வு செய்ய துறைமுகத்தில் வேலை செய்யும்

இரு சீடர்கள் அழைத்து வரும்படி ஆணையிட்டார்.மேற்படி சீடர் அவர்களை அழைத்து அவர்கள் மின்சார இரயில் பயணம் செய்தபடி பேசிக்கொண்டிருக்கையில்,

பக்தர் ஒருவர் எங்கள் ஊரில் மழையில்லை நாங்கள் கஷ்டப்படுகிறோம், உங்கள் சுவாமியை எங்கள் ஊரில் தங்க வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படியே சுவாமியை

கூடுவாஞ்சேரில் உள்ள களத்துமேடு பகுதியில் சுவாமியை குடிசைபோட்டு தங்கவைத்திருந்தனர்.

பார்ப்பதற்கு எளிமையாகவும் மெலிந்தஉடலும் உயரமான தோற்றம் கொண்டவர்.

நீளமான தாடியும் நீண்ட தலைமுடியும் கொண்டவர். தவலிமையுடன் ஒரு கம்பீரத்துடன் காணப்படுவார்.

இவருக்கு பக்தர்கள் அதிகமாக இருப்பினும் யாரையுமே அருகில் வைத்துக்கொள்ளவில்லை.

இவர் தம் வாழ் நாட்களில் எப்போதுமே வண்டிலேயே பல காலம் வாழ்ந்தவர். அதனால் வண்டிக்கார சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

சுவாமிகள் சொன்னது,போலவே 1983-ம்ஆண்டு ஆவணி திருவோணம் நட்சத்திரம் அன்று ஜீவ சமாதியானார்.

சுவாமிகள் ஜீவ சமாதி களத்துமேடு ஸ்ரீ மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு அருகில் உள்ளது.

கோயிலின் வெளி பிரகாரத்தில் ஆஞ்சநேயர் தரிசனம், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தரிசனம் ஸ்ரீ கால பைரவர் தரிசனம் .

வண்டிக்கார சுவாமிகள் குரு பூஜை ஆவணி திருவோணமான நாளை

வண்டிக்கார சுவாமி தரிசனம் பெற முகவரி:-
கூடுவோஞ்சேரி, பெரிய தெரு,(joyce nursary school)
களத்துமேடு ஸ்ரீ மல்லிகேஸ்வரர் கோயில் வெளிபுற வளாகம்

நற்பவி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram