fbpx

பாத எரிச்சல் குணமடைய மிக எளிய கை வைத்தியம்

சர்க்கரை நோய் உள்ள பல பேருக்கு பாத எரிச்சல் என்பது தீராத தொந்தரவாக உள்ளது. இதை எப்படி சரி செய்வது என்று பலரும் தவித்து வருகின்றனர்.

சக்கரை நோய் உள்ளவர்களை பொறுத்தவரை முகமும் பாதமும் ஒன்று தான். முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல அவர்கள் பாதத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தே தீர வேண்டும்.

அவ்வப்போது பாதங்களை சுத்தம் செய்வது அவசியம். பாத எரிச்சலை கட்டுப்படுத்த சித்த மருத்துவம் மூலம் சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

குறிப்பு 1 :

பழங்காலத்தில் நாம் மருதாணியை அதிகம் பயன்படுத்துவதுண்டு. அதை இப்போதும் பயன்படுத்தினால் பாத எரிச்சல் குறையும். மருதாணியில் எலுமிச்சை சாறு சேர்ந்து நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து பாதத்தை சுத்தம் செய்து வந்தால் பாத எரிச்சல் குறையும்.

குறிப்பு 2 :

சுத்தமான சட்டியில் எட்டிப்பழத்தை வெதுப்பி பின் அதை தரையில் கொட்டி வெது வெதுப்பான சூட்டோடு இருக்கும் பொழுது பாதத்தில் மிதித்து பின் பாதத்தை சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும்.

குறிப்பு 3 :

சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை பாதத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும், பாத வெடிப்பு குணமாகும்.

குறிப்பு 4 :

இரவு உறங்கும் முன்பு வெந்நீரில் சிறுது உப்பு கலந்து அதில் 10 நிமிடங்கள் காலை ஊற வைத்து பின் சுத்தமான நீரில் கால்களை சுத்தம் செய்து, நன்கு துடைத்து விட்டு பின் சுத்தமான தேங்காய் எண்ணையை காலில் தடவுவதன் மூலம் கால் எரிச்சல் குறையும்.

மேலே கூறிய குறிப்புகளோடு சக்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம் பாத எரிச்சலை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram