fbpx

ரோஜா குல்கந்து நன்மைகள்

பூமியில் மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் பல வகையான பல்லாயிரக்கணக்கான மலர்கள் பூக்கும் செடி கொடிகள் வளர்கின்றன. இவற்றில் உலகெங்கும் அதிக மக்களால் விரும்பப்படும் மற்றும் வளர்க்கப்படும் மலர் வகையாக ரோஜா செடி இருக்கிறது.இந்த ரோஜா செடியில் பூக்கும் ரோஜா மலரிலிருந்து செய்யப்படும் ஒரு மருத்துவ குணமிக்க உணவுப்பொருள் தான் “ரோஜா குல்கந்து”. ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரோஜா குல்கந்து நன்மைகள்

மலச்சிக்கல்
ரோஜா இதழ்கள் கொண்டு செய்யப்படும் குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்கிற சக்தி அதிகம் உள்ளது. இது செரிமானம் நடக்க மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் உங்கள் பசியை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் குறைய இது ஒரு சிறந்த மருந்து ஆகும். கர்ப்பிணிப் பெண்ணுகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா குல்கந்தை எக்காலத்திலும் சாப்பிடலாம்.

உடல் துர்நாற்றம்

உடலில் அதிகம் வியர்வை சுரக்கும் நபர்களுக்கும், மாமிசம் உணவுகள் அதிகம் சாப்பிடும் நபர்களுக்கும் உடல் துர்நாற்றம் அதிகம் இருக்கும். அவர்களது உடல் துர்நாற்றம் போக்க குல்கந்து மிகவும் உதவியாக இருக்கும். அது வியர்வையினால் உண்டாகும் விஷ தன்மையை உங்கள் உடலில் இருந்து நீக்கி உங்கள் உடலை குளிர வைக்கிறது. எனவே கோடை களங்களில் காலங்களில் ரோஜா குல்கந்து அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

வாய்ப்புண்

உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போதும், காரமான உணவுகளை அதிகம் உண்பதாலும் பலருக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகிறன. இதற்கு மருந்தாக ரசாயனங்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்துவதை விட ரோஜா குல்கந்து சிறந்த நிவாரணமாக இருக்கிறது. குல்கந்து உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி, வாய் புண் உருவாவதை குறைத்து அதனால் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியை குறைக்க உதவுகிறது.

ஆண்மை குறைபாடு

உடல் உஷ்ணம் அதிகம் இருப்பவர்களுக்கும், வெப்பம் நிறைந்த இடங்களில் பணி புரிகின்ற ஆண்களுக்கும் அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன வாய்ப்புகள் அதிகமாகின்றன. ரோஜா குல்கந்து உடலை குளிர்ச்சி படுத்துகிற ஒரு உணவாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

இளமை தோற்றம்

அனைவருக்குமே எப்போதும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்கிற ஆவல் இருக்கத்தான் செய்கிறது. இதற்காக விலையுர்ந்த பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை விட ரோஜா குல்கந்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.

மயக்கம்

ஒரு சிலருக்கு வெளியில் செல்லும் போது மயக்கம் ஏற்படும், அதிலும் குறிப்பாக கோடைகாலங்களில் உடலின் உஷ்ணம் அதிகரித்து ரத்த ஓட்டம் மூளைக்கு செல்லாமல் சுணங்குவதால் இத்தகைய மயக்க நிலை ஏற்படுகிறது. இப்படிபட்டவர்கள் வெளியே செல்லும் போது சிறிது குல்கந்தை சாப்பிட்டு செல்வதால் மயக்க நிலை ஏற்படாமல் தடுக்க முடியும்.

மாதவிடாய்

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆனால் சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படவும் செய்கிறது. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.

வயிற்று பிரச்சனைகள்

நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்து நமக்கு சக்தியை அளிக்கும் பணியை நமது வயிறு மற்றும் குடல்கள் செய்கின்றன. வயிற்றுப்போக்கு, வயிற்று புண்கள் மற்றும் இதர குடல் பிரச்சனைகள் நீங்க குல்கந்தை தினசரி ஒரு சில தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். இது வயிற்றில் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண், குடல்புண்கள் மற்றும் வயிறு வீக்கம் குறைக்க உதவுகிறது.

இதயம்

நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும், இதயத்திற்கு நலத்தை தருகின்ற உணவுகள் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டு வருவது நல்லது. ரோஜா குல்கந்து சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

முகப்பரு, கொப்பளங்கள்

தீக்காயங்கள் ஏற்படுவதால் ஏற்படும் கொப்புளங்களை சீக்கிரத்தில் குணமாக்கவும், முகப்பருக்கள் ஏற்படுவதை குறைக்கவும் ஆங்கில மருந்துகளை சாப்பிடுவதை விட, தினமும் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் கொப்பளங்கள் விரைவில் குணமாகும். முகத்தில் பருக்கள் ஏற்படுவது குறையும். பருக்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram