*பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.
*கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும்.
*இவை ரகசியங்களுள் ரகசியமானது.
*இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை.
*இது நோய்களைப் போக்கும்.
*செல்வத்தை அளிக்கும்.
*அபமிருத்யுவை போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம்)
*நீண்ட ஆயுள் தரும்.
*பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.
*பூத பிசாச உபாதைகள் விலகும்.
*இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.
*எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்து விடுவாள்.
*அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.
*இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.
*ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீலலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
*லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின் அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.