2021ம் ஆண்டில் பைரவருக்கு உகந்த அஷ்டமி நாட்கள்…!!
👉பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா சிவ தலங்களிலும், ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீல மேனியாக அருள் தருபவர் பைரவர்.
👉நம் எல்லோரையும் காக்கும் தெய்வம் என்றும், தீயசக்திகள் எதையும் நம்மிடம் அண்டவிடாமல் காப்பவர் என்றும் காலபைரவரை சொல்வார்கள். அதனால்தான் கலியுகத்துக்கு காலபைரவர் என்றே சொல்லி வைத்திருக்கிறார்கள்.
👉அஷ்டமி நாட்களில் பைரவருக்கு வடைமாலை சாற்றி வேண்டிக்கொள்ளலாம். நாய்களுக்கு உணவளிப்பதும், பிஸ்கட் வழங்குவதும் எதிர்ப்புகளையெல்லாம் நீக்கும். இவ்வாறு செய்வதால் துஷ்ட சக்திகள் நம்மை நெருங்கவிடாமல் காத்தருளுவார் பைரவர்.
👉பைரவரை அஷ்டமியில் குறிப்பாக, தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்வது கூடுதல் பலன்களைத் தந்தருளும். பைரவ மூர்த்தம் என்பது சக்தி வாய்ந்த தெய்வம். எதிரிகளையும், துஷ்ட சக்திகளையும் அழிக்கவல்லவர் பைரவர். நமக்கு இதுவரை இருந்த தடைகளையெல்லாம் தகர்த்து அருளுபவர் பைரவர்.
2021ஆம் ஆண்டிற்கான அஷ்டமி தினங்கள் :
🌟 ஜனவரி மாதம் 6ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதியும்,
🌟 பிப்ரவரி மாதத்தில் 4ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதியும்,
🌟 மார்ச் மாதத்தில் 6ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதியும்,
🌟 ஏப்ரல் மாதத்தில் 4ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதியும்,
🌟 மே மாதத்தில் 4ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதியும்,
🌟 ஜூன் மாதத்தில் 2ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதியும்,
🌟 ஜூலை மாதத்தில் 2ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதி மற்றும் 31ஆம் தேதியும்,
🌟 ஆகஸ்ட் மாதத்தில் 15ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதியும்,
🌟 செப்டம்பர் மாதத்தில் 14ஆம் தேதி மற்றும்; 29ஆம் தேதியும்,
🌟 அக்டோபர் மாதத்தில் 13ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதியும்,
🌟 நவம்பர் மாதத்தில் 11ஆம் தேதி மற்றும் 27ஆம் தேதியும்,
🌟 டிசம்பர் மாதத்தில் 11ஆம் தேதி மற்றும் 27ஆம் தேதியும் அஷ்டமி தினங்கள்.
👉 இந்த தினங்களில் பைரவ வழிபாடு செய்வதும் பைரவாஷ்டகம் சொல்லி வணங்குவதும் பலன்களைத் தந்தருளும். இந்த நாட்களில் பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி, மிளகு கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம். அஷ்டமி தினங்களில் அன்னதானம் செய்வதால் நற்பலன்கள் ஏராளம் உண்டாகும்.