fbpx

64 கலைகள் இருப்பதாக நாம் அறிவோம் அவை குறித்து விளக்கமாக காண்போம்

1) எழுத்திலக்கணம்

மொழியை வரி வடிவம் செய்தல்-
அ, இ, உ, எ, ஒ, ஒள இதுவே உயிரின் வரி வடிவம்.

2) இயாப்பு இலக்கணம்

எழுதும் போது காற்புள்ளி,அரைபுள்ளி, கேள்விக் குறி ,ஆச்சரிய குறி இட்டு எழுதுவது.

3) கணிதம்

கணித்தல் (கூட்டல் ,கழித்தல், பெருக்கல்....)
மொழியை அளத்தல்(மாத்திரை)

4) மறை

ஐந்து வகை மறைகள். உயிர், மெய், உயிர்மெய், ஆயுதம், பிரணவம்(குருவின் மூலம் அறிதல்)

5) புராணம்

புராணம் - வரலாறு. இது பதினெட்டு வகைப் படும். அவைகள்
சைவம்,வைணவம் ,பிரம்மம் ,பதுமம், பாகவதம், நாரதீயம்,மார்கண்டேயம் ,ஆக்னேயம் ,பவிடியம், வராகம் ,கூர்மம் ,வாவியம் காருடம், வாமணம் ,இலிங்கம், மச்சம், காந்தம், பிரம்மம் ,வர்த்தம் என்பன.

6) வியாகரணம்

மொழி இலக்கணம் (பேசுவது)

7) சோதிடம்

சூரியனை மையப்படுத்தி கோள்களை கணித்தல்

8) நீதி சாத்திரம்

உண்மையை பேசுவது

9) இயோக சாத்திரம்

இறைவனை சிந்திக்க கூறும் வழிபாடுகள்.

10) தர்ம சாத்திரம்

சன் மார்க்கம் ,தாச மார்க்கம்,  சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம் என்னும் தர்மங்களை கூறுவது.

11) மந்திர சாத்திரம்

ஒலிகளை அறிதலும், அறிவித்தலும்

12) சிற்ப சாத்திரம்

உருவங்களை அமைக்க நீள, அகல, உயர, கணம் இவற்றின் அளவுகளை கூறுதல்.

13) உருவ சாத்திரம்

ஓர் உருவத்தின் குணங்களை கூறுவது. இவை சாமுத்திரிகா இலட்சணம் என்பர்.

14) சகுண சாத்திரம்

நன்மை/தீமைகளை அறிதல்

15) காவியம்

சீவனின் எட்டு குணங்களை கூறுவது.

16) அலங்காரம்

மொழி, யாப்பு இலக்கணம், உடை, ஆபரணம் இவற்றை அழகு பட கூறுவது.

17) மதுரம்

இனிமை(மொழி, கவி, குரல் ) இவைப் பற்றிய கலை

18) நாடகம்

கூத்தாடுதல் (இசைக்கு ஏற்ப ஆடும் கலை)

19) சத்தப் பிரமம்

பல வகையான ஒலிகளை வாத்திய கருவிகளில் ஏற்படுத்தி  ஒலிக்க செய்வது.( யாழ், குழல், வீணை)

20) வீணை

யாழிசை, நரம்பு கொண்டு இசைப்பது. யாழ்பாணன் (இலங்கேசுவரன்) ஏற்படுத்தியது.

21) நிருத்தம்

யாழ் இசைக்கேற்ப நடனம் புறிதல்

22) தாளம்

இசைக்கருவிகளின் ஒலி அளவை முறைப்படுத்துதல்.

23) வேணு

துளைக்  கருவிகளை வாசித்தல் (புல்லாங்குழல், தாரை, நாதசுரம் போன்றவை)

24) மிருதங்கம்

மிருகங்களின் தோலில்  செய்யும் கருவிகளை வாசித்தல்

25) இரத பரிட்சை

தேர் ஓட்டும் கலை. (இக்காலத்தில் வாகனங்களை இயக்கும் கலை)

26) கச பரிட்சை

யானை யின் குண நலம், அடக்கும் முறை, போருக்கு பயன்படுத்தல் போன்றவற்றை விளக்கும் கலை

27) கனக பரிட்சை

உலோகங்களை சோதித்து தரம் நிர்ணயிக்கும் கலை.

28) அசுவ பரிட்சை

குதிரைகளின் குணநலம், பயன்பாடுகள்  கூறும் கலை

29) இரத்தின பரிட்சை

9 இரத்தினங்களின் தரம், குணம், ஒளித் தன்மை முதலியவற்றை கூறும் கலை

30) அத்திரம் பரிட்சை

வில் ஏவும் கலை. ( இக்காலத்தில் துப்பாக்கி, பீரங்கி இயக்குதல்)

31) படை இலக்கணம்

படைகளை (முப்படைகள்) வழி நடத்தும் கலை.

32) இரச வாதம்

பாதரசத்தைக்  கொண்டு தாழ்ந்த  உலோகங்களை உயர்ந்த உலோகமாக மாற்றும் கலை.

33 பூமி பரிட்சை

பூமியில் உள்ள வளங்களை கண்டறியும் கலை.

34) வசீகரம்

மற்றவர்களை தன் பால் ஈர்க்கும்  கலை.

35) மோகனம்

ஒருவரை மற்றவர் மீது மோகம் செய்விக்கும் கலை

36) ஆக்ருனம்

 தன் குணத்தை மற்றவர்  ஏற்று கொள்ள செய்யும் கலை

37) உச்சாடனம்

பிறரை ஓரிடத்திலிருந்து விரட்டும் கலை.

38) மதனம்

சிற்றின்பம் நுகரும் கலை

39) மல்யுத்தம்

ஆயுதம் இல்லாமல் யுத்தம் செய்யும் கலை

40) வித்துவேதனம்

மற்றவர்களுக்கு நன்மை/தீமைகள் செய்தல் (நோயும் பரிகாரமும்).

41) முட்டி

ஆயுதம் இல்லாமல் தீமைகள் தடுத்துக் கொள்ளும் கலை

42) நட்டம்

நடனக்கலையின் தன்மைகளை கூறும் கலை.

43) காருடம்

நஞ்சை(விடம்) முறிக்கும் கலை.

44) கவுத்துவம்

பிறரை ஊமையாக்கும் கலை.

45) பைபீலம்
பறவை, மிருகம், ஊர்வன இவற்றை மயங்க செய்யும் கலை.

46) காந்தருவம்

பல வாத்தியக்கருவிகளை சிறப்பாக இயக்கும் கலை.

47) கமனம்

அந்தரத்தில் நடக்கும் கலை.

48) பிரவேசம்

வேரோர் உடம்பில் புகும் கலை.

49) ஆகாயப் பிரவேசம்

 ஆகாயத்தில் மறையும் கலை.

50) அதிரிசயம்

தானும், மற்ற பொருள்களையும்  தோன்றி மறைக்கும் கலை.

51) இந்திர சாலம்

காணாத பெருளை காட்டும் கலை.

52) மகேந்திர சாலம்

வானத்தில் அதிசயம் செய்யும் கலை.

53) அக்கனி தம்பம்

நெருப்பை வசம் செய்யும் கலை.

54) சலதம்பம்

நீரில் நடக்கும் கலை.

55) வாயு தம்பம்

காற்றில் மிதக்கும் கலை.

56) நிட்டி தம்பம்

கண் மூலம் ஆயுதங்களை வலுவிழக்க செய்யும் கலை.

57) வாக்கு தம்பம்

தன் வாக்குக்கு (சொற்களுக்கு) எதிர் வாதம் இல்லாமல் செய்யும் கலை.

58) சுக்கிலத் தம்பம்

விந்துவை நிறுத்தி நீண்ட கலவி செய்யும் கலை.

59) கன்னத்தம்பம்

மறைந்தவைகளை /நடந்து முடிந்த கடந்த கால நிகழ்வை கூறும் கலை.

60) கட்க தம்பம்

கூர் ஆயுதத்தை வலுவிழக்கச் செய்யும் கலை.

61) தாது வாதம்

உலோகங்கள்/ தாதுக்களையும் பயன்படித்தும் கலை.

62) இதிகாசம்

சிவ ரகசியம்(51) அச்சரத்தை இயக்கும் உன்னத கலை.

63) வைத்தியம் (சித்த வைத்தியம் / ஆயுள் வேதம்)

சித்த வைத்தியம் - சித்தர்கள் கூறியது
ஆயுள் வேதம்    - இலங்கேசுவரன் கூறியது
ஒளடதங்கள்       - உடலைக் காத்து நாதம் விந்து கலைகளை கூட்டி கல்ப தேகம் பெறிவது.

64) சாகாக்கலை

மரணமில்லா பெரு வாழ்வு ஆதி என்னும் சோதியில் இந்த உடலைக் கலக்கச் செய்யும் கலை.

மறக்காமல் பகிருங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram