fbpx

இதுவே பஞ்சாட்சர மந்திரம்

” காண்பேனே ” ந ” காரமது ” ம ” காரம் புக்கும்
கருத்தான ” ம ” காரமது சிகாரம் புக்கும்

தேண்பேனே ” சி “காரமது ” வ ” காரம் புக்கும்
சிவசிவ ” வ ” காரமது ” ய ” காரம் புக்கும்

காண்பேனே “ய ” காரமது சுடரிற் புக்கும்
குருவான சுடரோடி மணியிற் புக்கும்

நாண்பான மணியோடி பரத்திற் புக்கும் நற்பரந்தான் சிவம்புக்குஞ் சிவத்தைக்கேளே .”

” நகாரமாகிய சேரியை நஞ்சென வெறுத்து
மகாரமாகிய மயலெலாம் வேருடன் களைந்து

வகாரமாகிய வனத்திருந் திளைப்பாறி
சிகாரமாகிய சிவனை யடைந்தனன் ஜீவன் . “

      "அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செ
                     ழுத்திலே வளர்ந்து

          அஞ் செழுத்தை யோதுகின்ற 
                         பஞ்சபூத பாவிகாள்

          அஞ் செழுத்தி லோரெழுத்தை
                          அறிந்துகூற வல்லிரேல்

           அஞ்ச லஞ்சலென்று நாதன்
                           அம்பலத்தி லாடுமே."

                                  நமசிவாய.

” நமசிவய ” என்னும் ஐந்து அட்சரங்களும் ” ய ” என்னும் மந்திரம் ஜீவனாயிருக்கின்றது .

இந்த ” ய ” என்னும் ஜீவனால் ” நம , சிவ ” என்னும் இரண்டு மந்திரங்களைச் சுவாசத்துடன் சேர்த்து உள்ளுக்கிழுத்து வெளியில் விட வேண்டும் .

இந்தப் பஞ்சாட்சர மந்திரமே , பிருதிவி ,அப்பு ,தேயு ,வாயு ஆகாசம் :

இவைகளே பிரமன் , விஷ்ணு , ருத்திரன் மகேஸ்வரன் , சதாசிவன் இவ்வைந்துபேர்களும் சுவாதிஷ்டானம் ‘மணிபூரகம் , அநாஹதம் , விசுத்தி ,ஆஞ்ஞேயங்களுக்கு அதிதேவதைகளாயிருந்து சுவாசத்தை நடத்திக் கொண்டு வருகின்றார்கள் .

பிருதிவி ( பூமி ) ” ந ” காரம் ; இந்த ” ந ” காரமே பிரமன் ,

அப்பு ( ஜலம் ) ” ம ” காரம் ; இந்த ” ம ” காரமே விஷ்ணு ,

தேயு ( அக்நி ) ” சி “காரம் ; இந்த ” சி ” காரமே ருத்திரன் ,

வாயு ( காற்று ) ” வ ” காரம் ; இந்த ” வ ” காரமே
மஹேஸ்வரன் ,

ஆகாசம் ( வெளி ) ” ய ” காரம் ; இந்த ” ய ” காரமே சதாசிவன் ,

இந்தப் பஞ்சாக்ஷர குரு ரகசியத்தை அடியில் சொல்லுகின்றோம் ,
ஆதலால் , இதையே ” குரு ” வாகாய் நம்பி இதில் உபதேசித்ததுபோல் ஜபம்செய்து வரவேண்டும் .

மேலே காட்டிய சக்கரத்தின் நடுவிலுள்ள ” ய ” என்னும் மந்திரத்தின் மத்தியிலிருப்பது மூக்குத்தண்டு .

அந்த மூக்குத்தண்டுக்கு வலது இடது பாகங்களிலுள்ள மூக்கின் ரந்திரங்கள் ,
சிவன் ( சூரியநாடி ) சக்தி , ( சந்திரநாடி )என்று சொல்லப்பட்ட சுவாசங்கள் நடக்கும்படியான மார்க்கங்கள் .

இம்மார்க்கமாய் “ய ” என்னும் ஜீவாக்ஷரத்தை நீக்கி 4 , 3 — நெம்பரில் காட்டிய ” நம ” என்னும் மந்திரத்தைச் சுவாசத்துடன் சேர்த்து உள்ளுக்கிழுத்து சுவாசம் வெளிவிடாமல்

சிலநேரம் ” ஓம் ” என்று மனதினால் நினைத்து மறுபடியும் சுவாசம் வெளியில் விடும்போது 2 , 1 , நெம்பரில் கட்டிய ” சிவ ” என்னும் மந்திரத்தைச் சுவாசத்துடன் சேர்த்து வெளிவிடவேண்டும் .

அதாவது , ஒவ்வொரு சுவாசமும் உட்பிரவேசிக்கும் போது அந்தச் சுவாசத்துடன் கூடவே “நம ” என்னும் மந்திரத்தை மனதுடன் சேர்த்து உள்ளுக்கு இழுத்து , ” ஓம் ! ஓம் ” என்னும் மந்திரத்துடன் சற்றுநேரம் நிறுத்தி , மறுபடியும் சுவாசம் வெளிவிடும்போது ” சிவ ” என்னும் மந்திரத்துடன் விட்டு ,

மறுபடியும் சுவாசம் உட் செல்லும்போது ” நம ” என்னும் மந்திரத்தினால் உள்ளுக்கிழுத்து ” ஓம் ” என்னும் மந்திரத்துடன் சற்று நேரம் நிறுத்தி , மறுபடியும் சுவாசம் வெளிவிடும்போது ” சிவ ” என்னும் மந்திரத்துடன் சேர்த்து விட்டுக்கொண்டு வர வேண்டும் .

என்றால் , சுவாசம் ” நம ” என்னும் மந்திரத்துடன் உள்ளுக்கிழுத்து ” ஓம் ” என்னும் மந்திரத்துடன் சற்றுநேரம் நிறுத்தி , ” சிவ ” என்னும் மந்திரத்துடன் வெளியில் விட வேண்டும் என்பதேயாம் .

” ய ” என்பது ஜீவன் ; இந்த ஜீவனால் மற்ற நான்கு மந்திரங்களையும் ஜபிக்கவேண்டும் .

நெம்பர் . 5 -ல் , காட்டிய ” ய ” என்னும் அட்சரத்தில் இரண்டு கால்கள் காட்டப்பட்டிருக்கின்றன .
அந்தக் கால்களே உட்சுவாச நிசுவாசங்களாகும் .

என்றால் , உள்ளுக்கும் வெளிக்கும் ஆடும் மூச்சுகளேயாம் .

அந்த உசுவாச நிசுவாசங்களை ” ய ” என்னும் ஜீவன் உள்ளுக்கும் , வெளிக்கும் இழுத்துக்கொண்டு இருக்கின்றதென்று அறிவீர்களாக .

இதை யார் ஒருவர் விடாமுயற்சியாய் ஜபம்செய்து வருகின்றார்களே அப்படிப்பட்டவர்களின் மனம் இறந்து ஆத்மசொரூபத்தில் லயித்து முன்சொல்லிய காசிராஜன் குமாரத்தியாகிய களாவதி அடைந்த சுகம் அடைவார்கள் .

இதன் அனுபவம் பிரத்தியக்ஷமாய் ஜபம் செய்து வரபட்டவர்களுக்குமாத்திரம் தெரியவருமே யொழிய இதரர்களுக்குத் தெரியவரமாட்டாதென்று அறிவீர்களா .

இந்தப் பஞ்சாட்சர மந்திரம் இவ்வாறு கர்ம விதிப்படி செய்யவேண்டிய முறையை விட்டு ,
பிரதி தினம் அனேக பொய்களைச் சொல்லப்பட்ட கர்மவாக்கினால் நமசிவாய !
நமசிவாய ! நமசிவாய ! என்று உதட்டை அசைத்து விரல்களை மடிப்பவர்களும் ,

ஜபமாலையைத்
திருப்புகிறவர்களுமாயிருக்கின்றார்கள்

இவ்வாறு ஜபிப்பதனால் யாதொரு பிரயோஜனமும் இல்லையென்று அறியக்கடவீர்கள் .

 ‌ஜீவப் பிரம்மைக்ய வேதாந்த ரஹஸ்யம்

என்னும் நூலில் இருந்து
பரமஹம்ஸ ஸச்சிதானந்தர் கடப்பை ஜில்லா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram