நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தனிப்பட்ட குணம் உண்டு. அதில் சனிபகவான் கர்ம காரகனாக, நீதிபகவானாக பார்க்கப்படுகிறார்.
இதனால் ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி என வரும்போது அவரைப் பார்த்து பயப்படுகிறோம். அவர் நாம் செய்யும் தவறுக்கு தக்க தண்டனையை ஏழரைச் சனி காலத்தில் கொடுப்பார் என்பது நம்பிக்கை.
சனியின் கெடுபலன் ஏற்படாமல் தப்பிக்க நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். மேலும் நம்பிக்கையாக அவரை துதித்தாலே போதும்.
அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஏழரைச் சனி காலங்களில் செய்ய வேண்டிய மிக எளிய பரிகாரங்கள்….
🌠 சுத்தமான நல்ல உடை உடுத்தி, வசீகரமாக இருப்பது அவசியம்.
🌠 தினமும் வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.
🌠 வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபாடு செய்யவும்.
🌠 தினமும் சனிபகவானின் வாகனமான காக்கைக்கு உணவளிக்கவும்.
🌠 மகாவிஷ்ணுவின் அம்சமான வலம்புரி சங்கு, சாளக்கிராமத்தை வழிபடவும்.
🌠 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஏழை எளியோருக்கு உதவி செய்யலாம்.
🌠 கஷ்டப்பட்டு வெயிலில் வேலை செய்பவர்களுக்கு காலணி தானம் செய்யலாம்.
🌠 விரதமிருந்து பைரவருக்கும், சனிபகவானுக்கும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
🌠 பெண்ணாசையையும், மண்ணாசையும் கொண்டு அலைபவர்களுக்கு சனிபகவான் அருள் கிடைக்காது.
🌠 வீட்டை சுத்தமில்லாமல் வைத்திருக்கக்கூடாது.
🌠 சனியின் முக்கிய காரணமாக இருக்கும் வஞ்சக எண்ணம், பொறாமை, அடுத்தவர்களின் முன்னேற்றத்தை கெடுக்கும் என்ணத்தை கைவிட வேண்டும்.
🌠 கெட்ட வார்த்தைகள், அமங்கல சொற்களை பேசுதல், வக்ரத்தை தூண்டக்கூடிய படங்களை பார்த்தல் கூடாது.
🌠 துளசி மாலை, வன்னி மணி மாலை, ருத்ராட்சம் அணிந்திருப்பவர்களை சனிபகவான் பாதிப்பதில்லை.
🌠 அடிக்கடி பெருமாள் கோவிலுக்கு சென்று சடாரி வைத்துக் கொள்ளுங்கள். இதனால் சனியின் தாக்கத்திலிருந்து மீளலாம்.
🌠 சனிபகவானுக்கு உரிய கோவில்களான திருநள்ளாறு, திருக்கொள்ளிகாடு, குச்சனூர் சனிபகவானை வணங்கி வந்தால் நம் மனக்கவலைகள் மற்றும் கெடுபலன்கள் நீங்கி நல்ல நிலையை அடையலாம்.
இந்த எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் சனியின் ஆசியும், நற்பலன்களும் கிடைக்கும்.