இன்றைய நாளில் நிறைய நல்ல பலன்கள் கிடைத்துள்ளது.அறந்தாங்கியிலிருந்து வந்து அடியேனை வியப்பில் ஆழ்த்திய சகோதரனை பற்றித்தான் இன்று பார்க்க போகின்றோம்.நீண்ட நாட்களாகவே அடியேனை பின்பற்றி வரும் கணபதி நவராத்திரி கொலுவிற்கு எமது அழைப்பை ஏற்று வந்திருந்தார்.காலையிலேயே சகோதரி ரூபாவும் அவரின் குடும்பமும் பாப்பாவிற்கும் எனக்கும் துணிகள் எடுத்து வந்திருந்தனர்.கணபதியை முதல் முறையாக பார்க்கின்றேன்.நேற்று வரைக்கும் சமூக வலைத்தளங்களில் அடியேன் பதிவிட்டுள்ள அனைத்தையும் இவர் தனிப்பட்ட முறையில் சேமித்து வைத்திருந்து தனக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நிறைய பேரின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.இதுவரைக்கும் நான் நிறைய பேரை சந்தித்துள்ளேன்.ஆனால் இப்படி ஒரு குருபக்தி உடைய ஏகலைவனை இன்றுதான் பார்த்தேன்.இவர்களைப் போன்ற நபர்களால் தான் இன்றும் வானம் மும்மாரி பொழிகின்றது.

எத்தனையோ பேருக்கு கற்றுக் கொடுத்தும் பின்னாடி பேசும் மக்களுக்கு மத்தியில் அடியேனின் ஒவ்வொரு விஷயங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து அதை பற்றிய விஷயங்களை புத்தகங்களாகவே தனிப்பட்ட முறையில் spiral binding செய்து நிறைய பேருக்கு இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.நற்பவி அண்ணன் சொன்ன விஷயங்கள் என்று தலைப்பிட்டு அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் இதை பற்றி விளக்கமளித்து எல்லோரையும் பின்பற்ற வைக்கின்றார்.ஆரஞ்சு மிட்டாய் டப்பாவுடன் தேன்மிட்டாய் லட்டு பிரசாதம் சிவன் நந்தி கணபதி சந்தான கிருஷ்ணன் கொலு பொம்மைகளுடன் என்னை வந்து சந்தித்த இந்த சகோதரன் அணுஅணுவாக அடியேனின் பதிவுகளில் உள்ள விஷயங்கள் அனைத்தையுமே குறிப்பெடுத்து உபயோகபடுத்தி நிறைய நல்ல மாற்றங்களை அனுபவித்துள்ளதாக தெரிவித்தார்.பொதுவாகவே நான் அவ்வளவு சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்பட்டு பல வருடங்களாக ஆகிறது.இன்று ரொம்ப காலத்திற்கு பிறகு ஆனந்த கண்ணீர் வரக் காரணமாக இருந்தவர்.என்னைப் பற்றி நிறைய பேர் நிறைய விதத்தில்தான் சொல்லுவது வழக்கம்.இந்த சகோதரனை நான் எந்தவிதத்தில் impress செய்தேன் இப்படி நமக்கும் ரசிகர்கள் பட்டாளம் உருவாக காரணமான விஷயங்கள் அனைத்தும் கடவுள் அளித்த வரம்.தன்னிடமிருந்த தகர டப்பா உண்டியலை என்னிடம் அளித்து நற்பவி அன்னதான உண்டியல் நான் சேர்த்து வைத்திருந்ததை உங்களிடம் தருகின்றேன் இனிமேற்கொண்டு இதில் நீங்கள் பணம் சேமித்து அன்னதானம் செய்ய வேண்டும் என்று அன்பு கட்டளை விடுத்தார்.இந்த தகர டப்பாவே நாளைக்கு நற்பவி அறக்கட்டளைக்கு நிதி சேவைகள் செய்யும் மிகப்பெரிய அளவில் அன்னதான திட்டங்கள் மூலம் பெரும் பங்களிப்பு வகிக்கும் என்பதை உள்ளுணர்வு சொல்லியது.என்ன தவம் செய்தனை இறைவா இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை சகோதரர்களாக பெற யாம் பெற்ற பெரும் பாக்கியமாகவே சொல்ல வேண்டும்.

அடியேனின் புத்தகங்களை பிரிண்ட் அவுட் எடுத்து நிறைய பேருக்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றார்.இரண்டு புத்தகத்தையும் spiral binding செய்து கொண்டு வந்து கொடுத்து இதுதான் எனக்கு கிடைத்த சொத்து என்றார்.வாழ்க்கையில் இவ்வளவு காலமும் வாழ்ந்தமைக்கு அர்த்தம் புரிய வைத்தார்.வந்தவர் இறைவனின் அருளால் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க குணமுடன்.என் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கடந்து வந்துள்ளேன்.இது போன்ற எளிய மனிதர்களின் பரிசளிப்பு என்னை எப்பொழுதுமே திக்குமுக்காட வைக்கின்றது.இது விலைமதிப்பற்ற பொக்கிஷமாகும்.இந்த சமூகத்திற்கு நான் ஏதோ செய்திருக்கின்றேன் என்ற பேரானந்தமே இன்றைய இவர் மூலம் கிடைத்த உணர்தலாகும்.அண்ணே இனிமேல் ராகு காலத்தில் இந்த உண்டியலில் பணத்தை போடுங்கள் இந்த உண்டியலை கடைசி வரைக்கும் வைத்துக் கொள்ளுங்கள் இதில் கிடைக்கும் பணத்தால் அன்னதானம் செய்யுங்கள் நீங்கள் செய்யும் இந்த நல்ல காரியத்திற்கு எப்பொழுதும் எங்கிருந்தாவது உதவிகள் தேடி வரும்.உங்களை மாதிரியான நபர்களை இப்பொழுதெல்லாம் தேடினாலும் கிடைக்காது உங்களை நம்பி நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகவும் பதிவிட்டார்.நிறைய இடங்களில் எனக்கே குற்ற உணர்ச்சி மேலிட்டது.அடிக்கடி தர்மராஜன் அண்ணன் பேசும் பொழுது சொல்லுவதுண்டு பிரேம் நீயெல்லாம் வேறு மாதிரியான ஆளுப்பா தம்பி உன்னை மக்கள் தேடுவார்கள் நீ மக்களுக்கு சேவை செய்ய பிறவி எடுத்தவன் என்பார்.தர்மராஜன் அண்ணன் ஒரு வகையில் எனக்கு நிறைய சித்தர்களை அறிமுகம் செய்தவர்.அவரும் ஒரு நிலையில் வாழ்பவர்.அவர் இன்றும் பாட்டி சித்தர் கணக்கம்பட்டி கூனம்பட்டியார் கசவனம்பட்டியார் என்று அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்.தர்மராஜன் அண்ணன் எனக்கு நிறைய விஷயங்களை கொடுத்து உதவியவர்.பிரேம் நீ கொண்டாடப்பட வேண்டியவன் இன்னும் சில வருடங்களில் நீ உன்னை மக்கள் மத்தியில் மிகுந்த இடத்திற்கு கொண்டு செல்வாய் என்று அடிக்கடி சொல்வதுண்டு.
ததாஸ்து.சுபமஸ்து.சௌபாக்கியமஸ்து.மதியம் வந்த கணபதிக்கு என்னை விட்டு போக மனமேயில்லை.முதல் முறையாக நற்பவி நற்பவி நற்பவி என்று உங்கள் மகளுடன் சொல்லும் வீடியோ மூலமாகவே எனக்கு நீங்கள் பரிச்சயம் ஆனீர்கள்.அன்று முதல் என் வாழ்க்கையில் எண்ணற்ற நல்ல மாற்றங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உங்களின் நியாயமான வேண்டுதல்களை போலவே உங்களின் மூலமாக எனக்கு கிடைத்த விஷயங்களை நிறைய பேருக்கு பகிர்ந்து அளிக்கின்றேன் என்று அவரின் கண்களும் குளமாகியது ஆனந்த யாழை வாசித்து சென்ற அற்புதம்.பெருமைக்கு சொல்லவில்லை அண்ணே உங்களை மாதிரியான ஒரு நபரை இதுவரைக்கும் யாருமே பார்த்திருக்க முடியாது இனிமேலும் யாரும் பார்க்க மாட்டார்கள் என்றார்.சுற்றி திரிந்து அலைந்து திரிந்து எண்ணற்ற கஷ்டநஷ்டங்களுக்கு மத்தியில் என்னையே நான் உருவாக்கிய விதம் எனக்கு மட்டுமே தெரியும்.என்னுடைய வைராக்கியமானது என்னை துரத்தியவர்கள் அளித்த பரிசாகும்.ஒரு காலத்தில் உறவுகளே தங்களின் வீட்டிற்கு சோத்துக்கு வந்து விடுவானோ என்று என்னை விரட்டி அடித்துள்ளனர்.நெருங்கிய சொந்தங்களே அவ்வளவு கேவலபடுத்தியுள்ளனர்.நண்பர்கள் என்னை இழிவாக பார்த்துள்ளனர்.நான்பட்ட அவமானங்கள் தான் என்னை செதுக்கிய வை.என்னை துரத்தியவர்களே பிற்காலத்தில் விருந்துக்கு அழைத்துள்ளனர்.
எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் mercy killing கருணை கொலை என்பது குறிப்பிடத்தக்கது அதாவது எந்த நபர்கள் நம்மை துரத்தினார்களோ அவர்களே நம்மை விருந்தினராக வாருங்கள் என்று அழைக்க வைக்கும் அப்படிப்பட்ட இடத்திற்கு நாம் உயர்ந்து விட வேண்டும்.காசும் பணமும் கல்லாவும் சேர்ப்பவனாக இருந்தால் எந்த விஷயத்தையும் வெளியே சொல்ல முதலில் மனசும் வராது.அப்படி சேர்த்து வைத்து எந்த கோட்டையும் நானும் இதுவரைக்கும் கட்டியதில்லை.என்னுடைய பயணம் என்பதே எல்லாவற்றையும் கடந்து சென்று இறையுணர்வு அடைந்தே தீர வேண்டும்.நாம் மட்டுமே செல்வதோடு நின்று விடாமல் நிறைய பேருக்கு அந்த வழிகாட்டுதலாக இருக்க வேண்டும்.பணமோ நகையோ எதுவுமே கூட வராத பொழுது அதையெல்லாம் சேர்த்து வைத்து என்ன ஆக போகின்றது.எனக்கு ஒருத்தரு சொல்லிக் கொடுத்தார் நான் மற்றவர்களுக்கே அதை திரும்ப சொல்லிக் கொடுக்கின்றேன்.இன்று கணபதி நாளை பசுபதி இவ்வளவு தான் இங்கே இருப்பதும் கிடைப்பதும்.நிறைய பேருக்கு கற்றுக் கொடுத்தும் கிடைக்காத பேரின்ப பெறுநிலையை இன்று இவர் வீடு வந்து வழங்கியுள்ளார்.இன்று நானும் நிம்மதியாக தூங்குவேன் அவரும் தூங்குவார்.எனக்கு நிறைய சோதனைகள் இன்றளவும் உண்டு எதற்கும் கலங்குவதில்லை எல்லாமே நிலையானது கிடையாது இன்பமும் துன்பமும் எப்பொழுதுமே நம் இரண்டு கண்களைப் போன்றவைதான் மாறி மாறி நடக்கும்.கணபதியை மாதிரி நிறைய பேர் எங்கிருந்தாலும் இவன் பதிவில் வாழ்வதே இவன் வளர்ச்சியாகும்.என்னை போட்டு தள்ளவும் துடியாய் துடிப்பவர்கள் இங்கே இருக்கின்றார்கள்.அவர்களுக்கு என் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்னை களங்கபடுத்த வேண்டும் என்னை அசிங்கபடுத்த வேண்டும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை விடவும் நாலு பேருக்கு நல்லதை செய்து பாருங்கள் என் இடமானது வெற்றிடம் இது ஒன்றும் சிம்மாசனமும் இல்லை இதற்கு நான் மட்டுமே பொருத்தமானவன் என்பதும் கிடையாது.என்னவெல்லாமோ செய்துதான் இந்த மனிதப்பிறவி எடுத்து இதன் பிறகு என்னவென்ற ஏழாம் அறிவை நோக்கிய பயணத்தில் எண்ணற்ற விஷயங்களை நாம் அனுபவிக்காமலே மீண்டும் மீண்டும் இதே மனிதப்பிறவி எடுக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றோம்.இருக்கும் வரைக்கும் இருந்து பாருங்கள் இருப்பவர்களுக்கு இயல்பாக இதுவே உங்களை இறுமாப்பாக வைத்திருக்கும்.நிறைய தொந்தரவுகளை அனுபவிக்கின்றேன்.நிறைய கொல்லிக்கண்களை உணர முடிகின்றது.என்ன செய்வது நல்லது செய்தாலே கெட்டது விடாது கெடுகெட்டது விடவே விடாது.அழிந்து திரியும் உடம்புக்குள் ஆயிரம் ஆயிரம் துஷ்ட எண்ணங்களை கொண்டு என்னவெல்லாம் செய்ய போகின்றார்கள் இவர்கள்.சில நேரங்களில் சில ஜென்மங்கள்.எல்லாவற்றையும் தாண்டியும் கணபதி மாதிரியான ஆட்களால்தான் இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றான் இவன்.ஓம் நமசிவாய.