fbpx

நீங்களும் இனிமேல் வீட்டு வாசல்ல எலுமிச்சை, மிளகாய் கோர்த்து கட்டுவீங்க

வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது மூட நம்பிக்கை அல்ல. அதற்கு பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

முன்பு நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும் ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம். அதில் ஒன்று தான் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது.வாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் தொங்கும் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது வழக்கமாக இருக்கும். புதியதை கட்டிய பிறகு, பழையதை யார் காலும் படாதபடி இடத்தில் வீசிவிட வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள்.ஏன் இதை நமது முன்னோர்கள் செய்தனர்? இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன?

அலக்ஷ்மி!

எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று கேட்டால். பெரும்பாலும் அனைவரும் அலக்ஷ்மி கதை தான் கூறுவார். அலக்ஷ்மி என்பது மூதேவி என அறியப்படும் லக்ஷிமியின் தங்கை ஆவார். இவர் வீட்டில் உள்ள செழிப்பை எடுத்து சென்று விடுவார். என்ற கதை ஒன்றை கூறுவார். Image Source

மூடநம்பிக்கை!

அலக்ஷ்மி, புளிப்பு, காரம், சூடான பொருட்களை விரும்புவார். அதனால் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டி வைப்பதால், அவருக்கு பிடித்தமான இவற்றை சாப்பிட்டு, வீட்டுக்குள் நுழையாமல் சென்றுவிடுவார். இதனால், செழிப்பு தங்கும் என நம்புகிறார்கள்.

அறிவியல் என்ன கூறுகிறது?

எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. காட்டன் கயிறு அந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும். மெல்ல, மெல்ல அது ஆவியாக வெளிப்படும்.

ஆரோக்கியம்!

இவ்வாறு வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. எலுமிச்சை, மிளகாயில் இருந்து வெளிப்படும் வாசத்தை தாண்டி, இது நச்சுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன. இதனால் நோய் தொற்றுகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.

என்ன லாஜிக் இது?

சிலர் இப்படி வாசலில் கட்டி வீசிய பழைய எலுமிச்சை, மிளகாயை காலால் மிதிக்க கூடாது. மிதித்துவிட்டால் கால்களை கழுவாமல் அப்படியே வீட்டுக்குள் வரக் கூடாது என கூறுவார். கழற்றி எறிந்த பழைய எலுமிச்சை மிளகாய் நிறைய நச்சுக்களை உள் தாங்கி இருக்கும். இதை மிதித்து அப்படியே வீட்டுக்குள் வந்தால் நச்சுக்கள் பரவும் என்பதால் தான். இதை மிதிக்க கூடாது என்கிறார்கள்.

வேறு கருவிகள்!

இன்று வீட்டில் நச்சுக்கள் அண்டாமல் இருக்க பல பூச்சிக் கொல்லிகள் வந்துவிட்டன. ஆனால், இரசாயன கலப்பு கொண்ட அவற்றை நாம் சுவாசிப்பதால் நாள்பட சுவாசக் கோளாறுகள் உண்டாகலாம். ஆனால், இந்த இயற்கை முறையால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

மருவியது!

ஏதோ காரணத்திற்காக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு செயல்பாடு. பிற்காலத்தில். மூட நம்பிக்கை, ஒரு மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது என மருவிவிட்டது என்பது தான் உண்மை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram