
ஐப்பசி பரணி பவுர்ணமி திதி பவ கரணத்தில் சித்தி யோகத்தில் அன்னாபிஷேகம் ஜோதிர்லிங்கேஸ்வரர் ஜோதீஸ்வரி ஆலயத்தில் இனிதாக நடைபெற்றது.இதற்கான செலவுகளில் அன்னதானத்திற்கு பாலாம்பிகை ஜோதிட நிலையம் சார்பாகவும் சிறுபங்களிப்பு ஏற்படுத்திக் கொடுத்த பிரபஞ்ச சக்திக்கு நன்றிகள் கோடி கோடி.
கடந்த இரண்டு மாதங்களாக கிடைத்த டாரட் ஆரூடம் பிரசன்னம் மூலம் பலன்கள் பெற்றவர்களின் கட்டணத்தொகை அனைத்தையும் இந்த நற்பணிக்காக செலுத்தியமைக்கு பிரபஞ்ச சக்திக்கு நன்றிகள் கோடி கோடி.இனிமேற்கொண்டு இது போன்ற நல்ல காரியங்களுக்கு பாலாம்பிகை ஜோதிட நிலையம் சார்பாக அன்னதானம் திட்டங்கள் நிறைய இடங்களில் நடைபெறும்.
அதற்கு முன்னெடுப்பாகவே இன்றைய நிகழ்வுகள் அமைந்துள்ளது.நற்பவி இயக்கத்தில் கலந்து கொள்ள முற்படும் தொண்டுள்ளம் படைத்த சகோதர சகோதரிகளே ஒன்றிணைந்து வாருங்கள் இணைந்து பணியாற்றுவோம்.நற்பவி இயக்கம் இனிமேற் கொண்டு வீறுநடை போடும்.நல்லதே நடக்கும்.இந்த அன்னாபிஷேகம் விழாவிற்கு பாலாம்பிகை ஜோதிட நிலையம் பங்களிப்பு செய்த நற்காரியத்திற்கு தனிநபர் யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அதே போல பல பேருக்கு அவர்களின் மாதபலன்கள் பார்த்து சொன்ன குறைந்தபட்ச கட்டணத்தொகை அப்படியே இதற்கு உபயோகபடுத்திக் கொண்டோம்.நற்பவி நற்பவி நற்பவி.