fbpx

பிரேம்சந்த் பரிகாரங்கள்

பணமே வா பணக்காரத்தனமே வா தினசரி வா சந்தோஷமாக வா பணத்தை நான் பலருக்கு பரிசளிக்க பகட்டாக வா பணம் படைத்தவனாக என்னை உருவாக்கு.நான் பணத்தை நேசிக்கின்றேன் நான் பணத்தை விரும்புகின்றேன் பணத்தை நான் மதிக்கின்றேன் பணத்தை நேர்மையாக உருவாக்குவேன் பணத்தை பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவேன்.பணம் என்பது என்னை நோக்கி வரும் பணமே மருந்து.பணமே சுழற்சி பணமே தேவதை பணமே பிரதானம் பணமே வாழ்க்கை பணமே முக்கியத்துவம் பணமே ஆக்கப்பூர்வமான சக்தி பணம் சம்பாதிப்பது கலை பணம் கடவுளின் அவதாரம் பணமே மகாலட்சுமி கடாட்சம் பணமே உறவுகளை தீர்மானிக்கும் பணமே உங்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் பணமே பிரபஞ்சம்.பணமே பலருக்கும் பயன்படும் வகையில் சென்று வருக.

பணமே நீ பல காரியங்களை சாதிக்கின்றாய்.பணமே இல்லாதவனுக்கு பல ரூபத்தில் சென்று வாருங்கள்.பணமே காந்த சக்தி பணமே ஈர்ப்பு சக்தி பணமே உங்களின் செல்வாக்கு பணமே மாற்றத்தின் ஆதாரம்.பணமே பாக்கியம்=இவையனைத்தையும் தினசரி காலையில் எழுந்து சொல்லி பாருங்கள்.பணமே தேடி வரும்.இதற்கு பெயர் பணத்தை ஈர்க்கும் உறுதிமொழிகள்.இதற்காக பணம் மீது வெறித்தனமாக இருக்க கூடாது.பணம் சம்பாதிக்க தவறான வழிகளை தேர்ந்தெடுக்க கூடாது.ஒருவரின் துன்பத்திற்கு நாம் காரணமாகி பணம் சம்பாதிக்க கூடாது.பணம் வந்தவுடன் கர்வம் ஆணவம் மமதை திமிர் கட்டாயம் வரவே கூடாது.பணத்தை நினைத்து முதலில் ஏங்க கூடாது.அடுத்தவரிடம் இருக்கும் பணத்தை நினைத்து வருந்த கூடாது.பணம் சம்பாதிக்க உறவுகளை எந்த காரணத்திற்கும் நிர்பந்திக்க கூடாது.பணத்தை கடவுளாக மட்டுமே பார்க்க வேண்டும்.இவையனைத்தும் நடந்து முடிந்த பிறகே உண்மையில் பணம் என்ற விஷயத்தை தாண்டிய வாழ்வியல் சிந்தனைகள் அற்புதங்கள் புலப்படும்.பணம் நிரந்தரமானது அல்ல.பணத்தை காட்டிலும் புனிதமானது உங்களிடம் உள்ளது.அதை உணர்ந்தால் நீங்களே உலக பணக்காரர்கள் வரிசையில் இருப்பீர்கள்.நான் சொல்லும் பணக்காரத்தனம் என்பது உங்களின் பணத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடியதல்ல.உங்களின் சாம்ராஜ்யம் பணம் கொண்டு மட்டுமே தீர்மானிக்கபடுவதில்லை.பணம் பதவி பட்டம் கௌரவம் அந்தஸ்து செல்வாக்கு இதையெல்லாம் தாண்டி இதே பணத்தை நீங்களாகவே போதும் என்று சொல்லும் வரைக்குமே ஓட விடும் கர்மவிதி.எதையும் எதிர்பார்க்காமல் வாழ்வதில் உள்ள பூரணத்துவம் உணருங்கள்.பணமே துணை பணம் மட்டுமே துணையல்ல.பணத்தை தெய்வமாக வழிபடுங்கள் பணத்தை கொடிய அரக்கனாக்கி விடாதீர்கள் ஏனெனில் நீங்கள் எப்படி இருக்கின்றீர்களோ அப்படியே பணம் உங்களை செயல்படுத்தும்.நற்பவி நற்பவி நற்பவி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram