fbpx

பிறவிப் பயன்

வயிற்றுப் பிழைப்புக்காக காவியை கட்டிக்கொண்டு பிச்சை எடுப்பவன் போலிருக்கிறது
என்று ஒருவரின் நிலையை அறியாமல் கேலி செய்வோர் கோடி மக்கள் உண்டு.

கோடி மக்களில் ஒருவனாகத்தான் அவர்கள் பிறக்கின்றார்கள். என்பது கேலி செய்பவர்களுக்கு தெரியாது.

அவர்கள் இறைவனின் அருளையும் கிரகங்களின் அருளையும் பரிபூரணமாக பெற்றவர்கள் என்பதும் கேலி செய்பவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை,

ஒரு கடினமான சிரமத்தை அடையும் பொழுது தான்
அந்த நிலையை கடந்தவர்களை கேலி செய்ததன் விளைவு இப்படி ஆகிவிட்டது என்பதை அப்போதுதான் அவர்கள் உணர்வார்கள்.

அந்த நிலையை அடைந்தவர்கள் அப்படி ஒரு சிரமத்தை கேலி செய்தவனுக்கு தரவேண்டுமென்று நினைக்க மாட்டார்கள்.

உன்னைக் கேலி செய்பவர்கள் திருந்து என்றவாறு நானே அவர்களுக்கு பாடம் நடத்துவேன் என்று அவரது குருநாதர் இவருக்கு வாக்குறுதி தந்திருப்பார் அதுதான் நடந்துவிடும்.

கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர்கள் அவர்களை சந்திக்கும் கால நேரம் கிடைத்தால் அவர்களை சந்திக்கலாம்.

அந்த சந்திப்பை அவர்களும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் உன்னை பார்ப்பதற்கு அனுமதி தந்தால்
உன் எதிர்காலம் வசந்தகாலம் ஆகிவிடும்.

திருநீறுக்கு பதிலாக மண்ணையும் பூசிவிடுவார்கள் மண்ணையே பிரசாதமாக தருவார்கள் அதை அப்படியே நம்பி பெற்றுக்கொள் அதில்தான் மாபெரும் ரகசியம் இருக்கும்,

கனவுகளில் மலையருவி காண்பாயானால் நிச்சயம் ஒரு மகானை சந்திப்பாய்.

ஓடுகின்ற நதிகளை கண்டால் மகானை காண்பாய்.

மகானை சந்தித்த பிறகு மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குவதை போல கனவுகள் கண்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைத்து விடும்.

காக்கைக்கு உணவு வைப்பதைப் போல் கனவு கண்டால் உன் முன்னோர்களில் பித்ருதோஷம் இல்லாமல் போய்விடும்.

இப்படி பல நல்லவைகளை செய்யக்கூடியவர்கள் அடுத்து நிறைந்த உடைகளுடன் பரட்டைத் தலையுடன் கிழிந்து போன ஆடையுடன் இருப்பார்கள்.

இவர்களது கண்கள்
பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டிருக்கும்.

அவர்களை சந்தித்தார் சிவ சிவா என்று சொல்.

நமசிவாயா என்று சொல்.

நீ பிறந்த பிறவிப் பயனை அடைந்து விடுவாய்.

திருச்சிற்றம்பலம் போற்றி போற்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram