fbpx

இந்து சமய ஆசாரத்தில் மகளிருக்கு உள்ள அங்கீகாரம்

இந்து சமய ஆசாரத்தில் மகளிருக்கு உள்ள அங்கீகாரம்:

1) திருமணம் ஆகாத தனி மனிதனுக்கு சபையில் உயர் அங்கீகாரம் கிடையாது.

2) மனைவி இல்லாதவன் யாகம் செய்யக்கூடாது.

3) மனைவி இல்லாதவன் கும்பாபிஷேகம் போன்ற யாகங்களில் பங்கேற்க தகுதி கிடையாது.

4) மனைவி இல்லாதவன் தானம் செய்ய முடியாது.

5) மனைவி இன்றி செய்யும் தானம் பலன் தராது.

6)மனைவி இல்லாதவன் பித்ரு கடன்களை செய்ய வாய்ப்பற்றவன்.

7) மனைவி இல்லாதவன் கோயில் உள்ளே சென்று ஸ்வாமியை தீண்டி பூஜை செய்ய அருகதை அற்றவன்.

8) மனைவி இல்லாதவன் பஞ்சாயத்தில் தலைமையாக உட்காரும் தகுதி இல்லாதவன்.

9) மனைவி இல்லாதவன் நேரில் வந்தால் சகுனப் பிழை என பொருள்.
( இதுவே ஒத்தை பிராமணன் என திரிக்கப்பட்டது)

10)மனைவி இல்லாதவனுக்கு ஆகமங்களின்படி ஆச்சார்ய தீக்ஷை கிடையாது.

11) மனைவி இல்லாதவனுக்கு கும்ப மரியாதை கிடையாது.

12) மனைவி இன்றி ஒற்றை நபராக பசுவை வணங்கக்கூடாது.

13) மனைவி இன்றி ஒற்றை நபராய் புண்ணிய தீர்த்தம் ஆடுதல் கூடாது.

14)மனைவி இன்றி பெரியோர்களை நமஸ்கரிக்கக் கூடாது. அதாவது முழு பலன் இல்லை என்பதாகும்.

இப்படி பல பல நியதிகள் உள்ளது. இவை இல்லற வாழ்வியல் அல்லது அந்நிலை சூழலில் உள்ளவர்களுக்கே.

மனைவி என்ற பெண் உடன் இல்லையெனில் இல்லறத்தான் இந்து சாஸ்திரங்களின் படி வெறும் ஜடமே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram