fbpx

காலையில் சுப்ரபாதம் ஏன் பாடுறோம்ன்னு தெரியுமா?!

ஒருமுறை விஸ்வாமித்திரரின் யாகத்தினை காக்க சென்றபோது, கங்கைக்கரையில், ராம லட்சுமணர்கள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் ராஜகுமாரர்களாயிற்றே!

அரண்மனையில் சுகபோகமாய் இருந்தவர்கள் காடுமலைகளில் அலைந்து திரிந்ததால் வந்த களைப்பு. அதனால் நேரம் போவதைப்பற்றிக்கூட கவலைப்படாமல் உறங்கிக்கொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்துக் கொண்டு வந்த விஸ்வாமித்திரர்,

அதிகாலைப் பொழுதில் எழுந்து, கங்கையில் நீராடி, ஜப தபங்களையெல்லாம் முடித்துவிட்டு, ராம- லட்சுணர்களை எழுப்புகிறார்.

நாலரை மணிக்கு எழுப்பத் தொடங்கியவர், ஆறரை மணி வரைக்கும் எழுப்பிக் கொண்டே இருக்கிறாராம்!

ம்ஹூம்… இரண்டு பேரும் எழுந்திருக்கவே இல்லை.

உடனே, ‘கௌசல்யா சுப்ரஜா… கௌசல்யா சுப்ரஜா…’ என்று சொல்லிக் கொண்டே எழுப்பினாராம்.

இன்று ஒருநாள், இந்த தெய்வக்குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் பெற்றேன்.

ஆனால், தினமும் இவனை எழுப்பும் பேற்றினை ராமனை பெற்ற கோசலை என்னும் கௌசல்யா எத்தனை அரிய பேற்றினை பெற்றவள். அதனால் அவளை தொழுதவாறு ராமனை இவ்வாறு எழுப்புகிறார்..

கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே! எழுந்திட்டு புலிபோல் மனிதா செய்திடுவாய் இறைகடமை!.

இந்த கௌசல்யா சுப்ரஜான்ற வால்மீகியின் வார்த்தையினை கொண்டே பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரி என்பவர் எழுதினார்.

அவர் எழுதிய அந்த பாடல்களே இன்னிக்கு திருப்பதியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி குரலில் திருப்பள்ளியெழுச்சி பாடலாய் ஒலிக்கிறது.

எல்லாம் சரி, ராமனை எழுப்பியாச்சு. லட்சுமணனும்தான் தூங்கிட்டு இருக்கான். ஏன் லட்சுமணனை எழுப்பலைன்னு இதை படிக்குறவங்களுக்கு கேள்வி எழும்பும்.

ஏனென்றால் லட்சுமணன் ஆதிசேஷன் அம்சம். விஷ்ணுவின் படுக்கை. படுக்கையை யாரும் எழுப்ப மாட்டாங்க. எழுப்பவும் முடியாது.

அதனால்தான் லட்சுமணனை இதில் சேர்க்கலை.

பகவான் ஸ்ரீராமபிரானை எழுப்புவதற்கு, ‘கௌசல்யா சுப்ரஜா’என ஏன் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்?

என்ன அர்த்தம் இதற்கு?

அதாவது, ‘இப்பேர்ப்பட்ட மகிமை மிக்க ராமபிரானைப் பெற்றெடுத்த கௌசல்யையே! நீ என்ன விரதம் மேற்கொண்டு, இந்த வரத்தை பெற்றாயோ…’ என்று ஸ்ரீராமபிரானின் புகழை மறைமுகமாகச் சொல்லிவிட்டு, அவனுடைய தாயாரை வாயார, மனதாரப் புகழ்கிறார் விஸ்வாமித்திரர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram