fbpx

தீராத நோய் தீர்க்கும் ஞான மூலிகை – கரிசலாங்கண்ணி

சித்தர்களின் செல்ல பிள்ளையான இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார். மிகவும் முதன்மையான கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று கூறுகிறார்.

இந்த கரிசாலை என்னுடைய வாழ்நாளில் எந்த அளவு ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது என்று நான் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

இந்த கரிசாலை மஞ்சள்காமாலை, மகோதரம், வலிப்பு மற்றும் இரத்த புற்றுநோய் (AML – Acute Myeloid Leukemia)
போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும் என்று சித்தர் பாடல்களில் மிகவும் தெளிவாக குறிப்புகள் உள்ளது.

இந்த கரிசாலை எனது மருத்துவ ஆய்வில் மிக பெரிய வெற்றி கொடுத்துள்ளதை கீழே விளக்கம் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

இதனை சித்தர்கள் கரப்பான், பொற்றலை, கையாந்தகரை இன்னும் பல பெயர்களை வைத்து கரிசாலையை அழைத்தார்கள். பல சித்தர்கள் கரிசாலையான அபூர்வ மருந்தை கற்ப மருந்தாக உண்டு பல யுகங்கள் தனது உடம்பினை கற்பமாக மாற்றி வாழ்ந்தார்கள்.

“கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம்” என்ற பழமொழிக்கேற்ப கரிசாலையின் மகத்துவத்தை நாம் உணரலாம்.

தின்ற கரிசாலை தேகம் திரை போக்கும்
தின்ற கரிசாலை சிறந்த நரை போக்கும்
தின்ற கரிசாலை தேகம் சிறுபிள்ளை
தின்ற கரிசாலை சிதையாது இவ்வாக்கையே!!!
– திருமூலர்

மஞ்சள் கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:

திருவுண்டாம் ஞானத்தெளிவுண்டாம் மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் குருவுண்டாம்
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக் கையாந்தகரைத்
தன்னாகத் தின்றாகத் தான்.

விளக்கம் :
இம்மஞ்சள் கரிசாலையை உணவாக அல்லது மருந்தாக ஏதேனும் ஒரு வகையில் சேர்த்தால் மூளை திறன் வளம் பெரும், வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டியை சரி செய்யும், உடல் தங்கம் பேற்ற பொலிவு தரும், அறிவாற்றல் வளரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இம்மஞ்சள் கரிசாலையை பொதுவாக உணவிற்காக பயன்படுத்துவார்கள். இதில் கார சுவை குறைந்தது காணப்படும்

வெள்ளை கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:

குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை
யுறர் பாண்டு பன்னோ யொழிய நிரர் சொன்ன
மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக்
கையாந்தகரை யொத்தக்கால்
(தேரன் வெண்பா)

விளக்கம் :
இவ் வெள்ளை கரிசாலையை எடுப்பதால் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது. அத்துடன் இரத்த சோகை அல்லது உடலின் உறுப்புகளின் வீக்கம் இருக்காது. முக்கியமாக 18 வகையான காமாலை நோய் தீரும். மேலும் குரலுறுப்பு நோய் மற்றும் பாண்டு பூரணமாக குணமடையும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் மற்றும் இதன் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். இவ் வெள்ளை கரிசாலை சிறிது கார சுவை உடையது. பொதுவாக இதை மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்துவார்கள்.

WHO என்று சொல்லப்படும் உலக சுகாதார நிறுவனம் கணக்கெடுப்பில் குணமாகாது என்று குறிப்பிட்ட பல நோய்களில் ITP (Idiopathic Thrombocytopenic Purpura) என்பது வெள்ளை அனுக்களே
சிகப்பு தட்டணுக்களை அளிக்கக்கூடிய ஒரு வகையான Autoimmune Disease ஆகும்.

அப்பேற்ப்பட்ட வியாதியை நமது வள்ளல்பெருமனார் சொன்ன இந்த ஞான மூலிகை உடன் தூதுவளை கலந்து கொடுக்கையில் 25 நாட்களில் குணமடைந்தது.

17 வருடமாக இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மருந்தை கொடுக்கையில் 25 நாளில் முழுவதுமாக குணமடைந்து. இதை வைத்தே கரிசாலை மற்றும் தூதுவளை காயகல்ப மருந்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை உணரலாம்.

அதுமட்டுமன்றி சமீபத்திய ஆய்வில் இந்த கரிசாலையில் Gold nanoparticles என்று சொல்லப்படும் தங்க நானோ துகள்கள் உள்ளது. அதேபோன்று தூதுவளையில் Silver nanoparticles என்று சொல்லப்படும் வெள்ளி நானோ துகள்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதை நிருபிக்கும் ரூபமாக சில மாதத்திற்கு தமிழகத்திற்கே சவாலாக விளங்கிய டெங்கு காய்ச்சல் என்பது உயிர்க்கொல்லி நோய் என்பதை அனைவரும் அறிந்ததே. டெங்கு காய்ச்சல் பல உயிர்களை கொன்று குவித்தது. உயிர் பிறிய முக்கிய காரணமாக பங்கு வகித்த Platelets என்று சொல்லப்படும் இரத்த தட்டணுக்கள் குறைந்தது தான். இரத்த தட்டணுக்களை அதிகப்படுத்த Allopathy என்ற ஆங்கில மருத்துவத்தில் எந்த மருந்தும் இல்லை. ஆனால் இரத்த தட்டணுக்களை அதிகப்படுத்தினால் காப்பாற்ற முடியும். இதை ஆய்வு செய்து பார்க்கையில் கரிசலையின் உதவிக்கொண்டு ஒரே நாளில் சரிசெய்ய முடியும் என தெரியவந்துள்ளது.
ஒரு நாளுக்கு இரண்டு முறை இளநீரில் கரிசாலை சாறு கலந்து கொடுக்கையில் ஒரே நாளில் 50,000 எண்ணிக்கையில் உள்ள தட்டணுக்கள் 1,50,000-மாக உயர்ந்து தட்டணுக்கள் அதிகமானது தெரியவந்துள்ளது. இக்கரிசாலைக்கொண்டு காய்ச்சலை குணப்படுத்த முடிந்தது. குணமடைய இக்கரிசாலை பெரும் பங்கு வகித்ததை வார்த்தைகளால் சொல்ல இயலாது.
இந்த கரிசாலை இளநீரை வைத்தே டெங்குவால் பாதிக்கப்பட்ட பல உயிர்களை காப்பாற்றிள்ளேன். இவை அனைத்திற்கும் மூலக்காரணம் வள்ளல்பெருமானே… அவர் கூறிய இந்த ஞான மூலிகையை வைத்து மருந்து செய்கையில்
புற்றுநோய் அல்லாமல்
Liver Cirrhosis என்று சொல்லக்கூடிய கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் சார்ந்த அனைத்து நோய்களை முழுக்க குணமாக்க கூடிய ஆற்றல் இவ் கரிசாலைக்கு உண்டு.

சித்தர்கள் மற்றும் சத்த வைத்தியர்கள் தங்களது மருந்துகளில் குரு மருந்து என்று சொல்லக்கூடிய மருந்திற்க்கு எல்லாம் குருவாக விளங்கக்கூடிய மருந்தை கலந்து தான் மருத்து தயாரிப்பாளர்கள். இக்குரு மருந்தின் ஆற்றல் மருந்தின் வீரீயத்தை 1000 மடங்கு அதிகமாக்கும். ஒவ்வொரு சித்தர்களும் தங்களுக்கென்று உரிய பானியில் சில குரு மருந்தை சூரணத்தில் கலந்து அம்மருந்தின் வீரீயத்தை அதிகப்படுத்துவார்கள். அதுபோன்று எந்த நோயாக இருந்தாலும் அதில் அவர் அவர்களுக்கு என்று இருக்கும் குரு மருந்தை கலப்பார்கள்.
என் வாழ்நாளில் குரு மருந்து என்று ஒன்று கேட்டால் நிச்சயமாக கரிசாலை தான் முதலிடம் பெற்றுள்ளது. பஷ்பங்கள் மற்றும் செந்தூரங்களைவிட, வள்ளலார் சொன்ன ஞான மூலிகையான கரிசாலை என்ற கரிசலாங்கண்ணி தான் சிறந்ததாக இடம்பெற்றுள்ளது. பொதுவாக கல்லீரல் 300க்கு மேற்பட்ட வேலையை செய்கின்றது. இரத்தத்தை சுத்தம் செய்வதில் இருந்து பித்தநீரை வெளியேறும் வரை பல வேலைகளை செய்கிறது.

இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் தேவையைவிட குறைந்தால் உயிர் பிரிய நேரும். ஆனால் கரிசாலைக்கொண்டு இப்பிரச்சனையை தீர்க்க முடியும்.

உடலின்சக்தி (ATP)
சேமித்து வைக்கும் ஓர் உறுப்பு கல்லீரலே… அப்பேற்ப்பட்ட கல்லீரல் பாதிப்படைந்தால் ராஜ உறுப்புகளான சிறுநீரகம், இதயம், மண்ணீரல், கணையம் இன்னும் பல உறுப்புகள் பலவீனமாக வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆகவே நான் எந்தவித மருந்து தயாரித்தாலும் அதில் எனது ஒரு குரு மருந்தான கரிசாலை நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். இதனால் கல்லீரல் புதுப்பிக்கப்பட்டு மூலக்காரணமாக உள்ள உறுப்பை தூண்டி நன்கு வேலை செய்ய வைக்கும்.
காச நோய், சக்கரை நோய், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் கரிசாலை முக்கிய பங்களிப்பு தந்துள்ளது என்பது எனது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரிசாலை கல்லீரல் சம்மந்தப்பட்ட அனைத்து நோயையும் குணமாக்கும். முக்கியமாக மஞ்சள் கரிசாலையை ஆட்டுப்பாலில் கலந்து காலை மாலை கொடுக்கையில் மகோதரம் என்று சொல்லக்கூடிய கல்லீரல் பாதிப்படைந்து வயிறு வீக்கம், கல்லீரல் வீக்கம் மற்றும் சித்தர்கள் சொன்ன 18 வகையான காமாலைகளுக்கும் இக்கரிசாலை சிறந்த மருந்து. இதேபோன்று கரிசாலையில் புடம் போடப்பட்ட அன்னபேதி செந்தூரமும் கூட தீராத மஞ்சள் காமாலை நோய்களுக்கும் கொடுத்து குணமாக்க முடியும். இன்னமும் சில சித்த வைத்தியர்கள் இம்முறையை பின்பற்றி மிக சிறந்த முறையில் மக்களை பிணியில் இருந்து காத்துவருக்கின்றனர்.
வெள்ளை கரிசலாங்கண்ணியில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை கரிசாலையை உணவாகவும் எடுத்துக்கொண்டால் நல்லது. தலை முடி நன்கு வளர கருமையாக இருக்க இவ் வெள்ளை கரிசாலை உதவுகின்றன. இவை ஓர் இயற்கை கூந்தல் தைலமாக இருக்கிறது.
கரிசாலை, வெட்டிவேர், கருஞ்சீரகம், நெல்லிவற்றல், செம்பருத்தி பூ, மருதாணி, அவுரிஇலை என அனைத்தும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யில் தைலம் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் உடம்பில் பித்தத்தை சரி செய்து தலை சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் மற்றும் இளநரையையும் சரி செய்யலாம். இக்கரிசாலையை பொற்றகாக கொடுப்பதால் சித்தர்கள் இதனை பொற்றலை என்று அழைக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram