பூமியில் கலி முடியும் காலத்தில் இயற்கையான உலகம் காண சித்தபுரியில் உயிராலயம் மலர செய்து , மக்கள் இயற்கையின் சீற்றத்தால் உயிரை உணர்வர். கடல் பிளக்கும் எரி மலை பொங்கும், அணு உலை சிதறி வான் முழுக்க புழுதி புயல் காணும்.நீர் தடங்கள் வற்றி போகும், உயிர்கள் பேரழிவை சந்திக்கும்.
சூரியனின் தகிக்கும் தீயால் இயற்கை வன வளங்கள் நாசமாகும்.அழிக்கும் அணு ஆயுதங்கள் நாசமாகும்.
பாறைகள் உருகும். வான் மழையில் நஞ்சு கலந்து பொழியும். உணவிலும் நீரிலும் நஞ்சு கலந்து குழந்தைகளும் பாலூட்டும் தாய்மார்களும் கொல்லபடுவர்.
காற்றில் தீ பரவும் கோள்கள் செந்நிறமாய் தோன்றும், ஒளி குறைந்து இருள் கூடும். வறுமை, நோய்கள் கூடும் தப்பிக்க வழியின்றி மருந்துகள்ம தொக்கும்போது மக்கள் அயலுருவர். அப்போது நகரங்கள் அழியும கடல் பொங்கும், நகரங்களை கடல் சூழ்ந்து தீவுகளும் அழியும், தொலை தொடர்பு முற்றிலும் தொற்றுபோகும்.
கடல் பிளந்து நிலங்கள் உள் வாங்கும்.கொள்ளை பணம் கொண்டோர் மாளிகைகள் அழிந்து கொள்ளை பணம் உணவுக்கு உதவாது. அவையாவும் குப்பை போல மாறும். அப்போது சித்தன் வாக்கு பலிதமாகும்.
அவ்வாறு பலவிதமான அழிவுகளை சந்திக்கும் பொது தான் அட்ட திக்கும் கவனத்தில் கொண்ட சித்தர்களின் வழிக்கு வந்து மெய் கடவுளை உணர்வர். அப்போது இயற்கை யுகம் அமையும்.