fbpx

விரதத்தின் நன்மைகள்

நாம் விரதங்கள் மேற்கொள்வது நம் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் பாரம்பரிய நோய் தாக்காமல் இருக்கவும் தான்.

திங்கட்கிழமை விரதம் இருப்பது சூரியனின் பலத்தை பெற்று நச்சுக்கிருமிகள் நம்மை தாக்காமல் காக்கத்தான்.
செவ்வாய்க்கிழமை விரதம் சனிபகவானின் பலத்தை பெற்று ஆக்ஸிஜன் குறைவால் வரும் நோயை போக்கத்தான்.
வெள்ளிக்கிழமை விரதம் சந்தான பாக்கியம் பெற்று வளமோடு வாழவே தான்.
சனிக்கிழமை விரதம் செவ்வாயின் பலத்தை பெற்று இரத்த சோகையை போக்கி நீண்ட ஆயளோடு வாழத்தான் ஆகும்.
அமாவாசை விரதம் கற்பப்பை நோய் தீர்க்கும்.
பௌர்ணமி விரதம் அறிவு வளர்ச்சி கொடுத்து இரசவாதம் உற்பத்தி செய்யும்.

நாம் ஒவ்வொரு கிழமைகளிலும் வெவ்வேறு விதமான உணவுமுறையை கையான்டு நம் உடல் எடை நிறம் குணம் போன்ற அமைப்புக்கு தகுந்தவாறு தெய்வவழிபாடுகளையும் அன்றைய நாளில் செய்வதே முறையான விரதகோட்பாடாகும்.

நாம் நம் அறிவை வளர்க்கவும் எடையை குறைக்கவும் மனரீதியான தொல்லைகளை நீக்கவும் கூட விரதங்கள் மேற்கொள்ளலாம். ஒருவர் வாரத்தில் அல்லது மாதத்தில் இருமுறை தான் விரதம்மேற்கொள்ள இயலும்.அதுவும் அவரவர் உடல்வாகை பொறுத்து தான்.

நாள் முழுவதும் உண்ணாமல் கடும் விரதங்கள் மேற்கொள்வது வயிற்றுபுண்களை உற்பத்தி செய்துவிடும். .

விரதம் மேற்கொண்டு தெய்வசக்தியை நிலைநிறுத்தி நம் உள்ளும் புறமும் தூய்மையாக்கும் கலையும் சித்தர்களால் தருவிக்கப்பட்டது தான். இதுவும் தெய்வத்தன்மை கொண்டது தான். இந்த உடலால் உருவாக்கப்பட்ட மெஞ்ஞானம் என்பது மிகச்சிறந்த விஞ்ஞானமே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram