ramachandran p
நற்பவி நற்பவி நற்பவி
தங்களது 555 ஆலோசனை வகுப்பில் என்னை இணைத்து கொண்டமைக்கு நன்றி. காரணம் நான் காலதாமதமாக தான் அதில் இணைந்தேன். அது தான் கர்மா என நினைக்கிறேன். எப்போது நமக்கு ஆடியோ பதிவு வரும் என காத்திருந்த போது, நேற்று செவ்வாய்கிழமை 8:33 மணிக்கு அப்பதிவு எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆனான் என் வழக்கமான என் பணிகளால், ஆடியோவை உடனடியாக கேட்க முடியவில்லை. நான் வழிபடும் கோவில்களுக்கு சென்று விட்டேன். சேலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு வெளியில் வந்த போது, பாக்கெட் செய்யப்பட்ட பிரசாதம் வழங்கினர். அது என்னவென்று பார்க்கமால், வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் உள்ளவர்களுக்கு பிரசாதம் கொடுக்க பாக்கெட்டை பிரித்த போது நான் மகிழ்ச்சி கடலில் மிதந்தேன். ஏனெனில், அதில் இருந்தது மஞ்சள் நிற மோதி லட்டு பிரசாதம். லட்டு கிடைப்பது எப்படி மகிழ்ச்சி என்பதை, சகோதரர் திரு. நம்பிராஜன் எழுதிய நற்பவி நுால் மூலம் ஏற்கனவே தெரிந்து இருந்ததால், அதன் பலன் என்னை பரவசப்படுத்தியது. அதை தொடர்ந்து தான் ஆடியோ பதிவை கேட்க ஆரம்பித்தேன். இன்னும் முழுமையாக கேட்க வில்லை. நான் கேட்ட வரை பல அருமையான விளக்கங்களுடன், நம்பர் பயன்பாடு பற்றி விளக்கியிருந்தார். மிக்க மகிழ்ச்சி. இந்த ஆடியோ பதிவை கேட்டு முடிக்கும் போது, மேலும் பல நல்ல விஷயங்கள் என் வாழ்வில் நடந்திருக்கும் என்ற நம்பிக்கை பிறந்ததுள்ளது.
நற்பவி நற்பவி நற்பவி.